nalaeram_logo.jpg
(3218)

நின்றுநின் றுபல நாளுய்க்கும் இவ்வுடல் நீங்கிப்போய்,

சென்றுசென் றாகிலும் கண்டுசன் மங்கழிப் பானெண்ணி,

ஒன்றியொன் றியுல கம்படைத் தாங்கவி யாயினேற்கு,

என்றுமென் றுமினி மற்றொரு வர்க்கவி யேற்குமே?

பதவுரை

பல நாள்

-

அநேக காலம்

நின்று நின்று

-

இருந்து

உய்க்கும்

-

சேதுநனைத் தன் வசத்திலே யாக்குகின்ற

இ உடல்

-

இந்த சரீரத்தை

நீங்கி போய்

-

விட்டொழிந்து போய்

சென்று சென்று ஆகிலும்

-

இப்படியே பல பல ஜனன மரணங்கள் நடந்தபின்பாகிலும் (ஏதேனுமொரு காலத்தில்)

கண்டு

-

தன்னைக் கண்டு

சன்மம்

-

பிறவியை

கழிப்பான்

-

கழிக்கக்கூடுமென்று

எண்ணி

-

திருவுள்ளம் பற்றி

ஒன்றி ஒன்றி

-

(ஒருகாலும் சோம்பிக் கைவிடாமல்) மேன்மேலும் ஊக்கங்கொண்டு

உலகம் படைத்தான்

-

உலகங்களைப் படைத்து வருகின்ற எம்பெருமானுடைய

கவி ஆயினேற்கு

-

கவியாக அமைந்த எனக்கு

இனி என்றும் என்றும்

-

இனி எந்நாளும்

மற்று ஒருவர் கவி

-

வேறொருவரைக் கவிபாடுதல்

ஏற்குமே

-

தகுமோ? (தகாது)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  தன்னைத் துதிப்பதற்கென்றே கரணகளேபரங்களைக் கொடுத்தருளினவனான எம்பெருமான் திறத்திலே கவிபாடப்பெற்ற வெனக்கு மற்றொருவரைக் கவிபாடுதல் ஏலாது என்கிறார். உலகில் க்ருஷி செய்பவன் தான் செய்த க்ருஷி பழுது பட்டொழிந்தாலும் ‘இன்னமும் ஒரு தடவை செய்து பார்ப்போம்’ என்று கொண்டு மீண்டும் மீண்டும் நசையாலே க்ருஷி தன்னையே செய்து பார்ப்பார்; அதுபோல, எம் பெருமானும் “பத்தி யுழவன்” என்று திருமழிசைப்பிரான் அருளிச்செய்தபடியே புக்திக்ருஷி செய்பவனாதலால் அந்தக்ருஷி எத்தனை தடவை முட்டுப்பட்டாலும் இன்னொரு தடவையிலாகிலும் பலிக்கமாட்டாதோ’ என்று கொண்டு மீண்டும் மீண்டும் பிரபஞ்ச ஸ்ருஷ்டியைச்செய்தருள்வானென்கிறது இரண்டரையடிகளால்.

நின்று நின்று பலநாளுய்க்குமிவ்வுடல் = இதனால் நம்முடைய சரீரத்தின் கொடுமையைக் காட்டினபடி காலமுள்ளதனையும் ஆத்மாவைத் தன் வசத்திலேயே இழுத்துக்கொண்டு சென்று அனர்த்தங்களுக்கு ஆளாகும்தான சரீரம் என்றவாறு. இலவுடல் என்றது இந்த ஜன்மத்திலுள்ள ஒரு சரீரத்தை கொடுமையைக் காட்டினபடி. காலமுள்ளதனையும் ஆத்மாவைத் தன் வசத்திலேயே இழுத்துக் கொண்டு சென்று அனர்த்தங்களுக்கு அளாகுமதான சரீரம் என்றவாறு. இவ்வுடல் என்றது இந்த ஜன்மத்திலுள்ள ஒரு சரீரத்தை மாத்திரம் சொன்னபடி யன்று; ஜன் பரம்பரை தோறும் தொடர்ந்துவருகிறவுடல் என்றபடி (இவ்வுடல் நீங்கிப் போய்ச் சென்று சென்றாகிலுங் கண்டு) ஆத்மாவனாவன் சரீரத்தில் நின்றும் கிளம்பினவாறே போகக்கூடிய வழிகள் நான்கு உண்டு; 1. கர்ப்பகதி, 2.யாம்யகதி 3. தூமகதி 4. அர்ச்சிராகதி என்பனவாம். அர்ச்சிராதி என்பனவாம். அர்ச்சிராதி கதியாகச் சென்று பரமபதத்தையடைந்து தன்னை யநுபவிக்கப் பெற வேணுமென்று எம்பெருமான் பாரித்திருந்தும் இவர்கள் அந்தக் கதியிற் செல்லாமல் மற்ற மூன்று கதிகளிலேயே செல்லுகிறார்கள். அது கண்டு எம்பெருமான் நம்முடைய மனோரதம் ஈடடேறப் பெறவில்லையே, இனி, பிரபஞ்ச ஸ்ருஷ்டியை நிறுத்திப் போகட்டுவிடலாமா என்று நினைத்தருளாமல் ‘இங்ஙனமே நடந்து போகும் அனேக ஜன்ம பரம்பரைகளினுள்ளே ஏதேனுமொரு ஜன்மத்திலாகிலும் இவர்கள் அச்சிரராதிகதிக்கு வாராமற் போவார்களா? என்னேனுமொருநாள் வரக்கூடும்” என்றெண்ணி மென்மேலும் உலகம் படைக்கின்றானாம். “சோம்பாது இப்பல்லுருவையெல்லாம் படர்வித்த வித்தா” என்றார் பெரிய திருவந்தாதியிலும்.

உலகம் படைத்தான் கவியாயினேற்கு = இங்ஙனே மேன்மேலும் கைவாங்காமல் ஒரு நசையாலே உலகத்தைப் படைத்துக்கொண்டே வந்த எம்பெருமானுடைய சுருஷி என்னொருத்தனளவிலே பலித்ததனால் அவனையே கவிபாடும்படியான பாக்கியம் பெற்றேனென்றவாறு ‘அவன் எதிர் சூல்புக்குத் திரிந்து பண்ணின க்ருஷிபலித்து அவனுக்குக் கவியாக பெற்றவெனக்கு” என்பது ஈடு.

என்றுமென்றுமினி மற்றொருவர் கவியேற்குமே? = எம்பெருமானது கவியாக வாய்க்கப்பெற்ற நான் இனி மற்றொரு நீசனையும் கவிபாடி நின்றேனாகில் எம்பெருமானுக்கு பலித்த க்ருஷி வீணாகுமன்றோ; ஆதலால் அத்தகைய செய்கையில் பிரவர்த்தித்தல் எனக்கு ஸ்வரூப விருத்தமென்று தலைக்கட்டினாராயிற்று.

“உலகம் படைத்தான் கலியாயினேற்கு” என்ற விடத்திற்கு ஆசார்யஹ்ருதயத்தில் ஒரு விசேஷார்த்தம் அருளிச் செய்யப்பட்டுள்ளது குறிக்கொள்ளத்தக்கது” அதாவது- “படைத்தான் கவியென்றபோதே இதுவும் யதாபூர்வகல்பனமாமே” என்பது முதல் பிரகரணத்தில் நாற்பத்தெட்டாவது சூர்ணிகை: பிரளயங்கொண்டவுலகத்தை முன்பு போல ஸ்ருஷ்டித்த ஈச்ரவனுடைய கவி நான் என்னும் பொருள் தோன்ற ஒன்றியொன்றியுலகம் படைத்தான் கவியாயினேற்கு’ என்று ஆழ்வார்தாம் அருளிச் செய்த பாசுரத்தை நோக்கு மிடத்து, ஸ்ருஷ்டிதோறும் சந்திரன் ஸூரியன் முலிய ஸகல பதார்த்தங்களும் யதாபூர்வ கல்பனமாய் வருமாபோலே இந்த த்ராவிட வேதமும் ஸ்ருஷ்டிதோறும் யதாபூர்வகல்பனமாய் வருமென்று தோற்றுமிறே என்பது இந்த சூர்ணிகையின் கருத்து.

English Translation

Considering the needs of all beings that spend long days of journey in this body, the Lord made many stations for sweet rest.  Being his poet forever, can I sing for any one else?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain