nalaeram_logo.jpg
(3214)

வம்மின்புலவீர்! நும் மெய்வருத்திக்கை செய் துய்ம்மினோ,

இம்மன் னுலகில் செல்வரிப்போதில்லை நோக்கினோம்,

நும்மின் கவிகொண்டு நும்நுமிட்டாதெய்வம் ஏத்தினால்,

செம்மின் சுடர்முடி என்திருமாலுக்குச் சேருமே.

பதவுரை

புலவீர்

-

புலவர்களே!

வம்மின்

-

(நரஸ்துதியை விட்டு) வாருங்கள்;

நும்  மெய்

-

உங்களது உடலை

வருத்தி

-

சிரமப்படுத்தி

கை செய்து

-

தொழில் செய்து

உய்ம்மின்

-

ஜீவியுங்கோள்:

மன்

-

(ப்ரவாஹரூபேண) நித்யமாயிருக்கின்ற

இ உலகினில்

-

இந்த லோகத்தில்

செவ்வர்

-

(உங்களுக்குப் போதுமானவை கொடுக்கவல்ல) ஸ்ரீமான்கள் கிடையார்;

இப்போது நோக்கினோம்

-

(இதனை) இப்போது ஆராய்ந்து அறிந்தோம்;

நும்

-

உங்களுடைய

இன் கவி கொண்டு

-

மதுரமான கவிகளைக் கொண்டு

நும் நும்

-

உங்களுங்களுடைய

இட்டா தெய்வம்

-

இஷ்ட தெய்வத்தை

ஏத்தினால்

-

துதி செய்தால்

(அந்தத் துதிமொழிகளிற் கூறும் குணங்கள் அவர்களிடத்து இல்லாமையாலே அவை)

செம் மின் சுடர் முடி

-

செவ்வனே மின்னுகின்ற வொளி பொருந்திய திருமுடியை யுடைய

என் திருமாலுக்கு

-

எனக்கு ஸ்வாமியான லக்ஷ்மீநாதனுக்கு

சேரும்

-

அந்வயிக்கும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  ஜீவனம் உஜ்ஜீவனம் என்று இரண்டுண்டு; எம்பெருமான் திறத்துக் கவிபாடினால் உஜ்ஜீவிக்க வழியுண்டெனினும், ஜீவிக்கவழி தேடுகிற நாங்கள் வரஸ்துதிகளிலே இழிகிறோம் என்று சிலர் சொல்லுவதாகக் கொண்டு நீசரைக் கவிபாடி ஜீவிப்பதிற் காட்டிலும் உடம்பு நோவத் தொழில் செய்து ஜீவித்தல் நன்று என்கிறார்.

வம்மின் - காட்டுத்தீயில் அகப்பட்டவர்களை மடுவைக்காட்டி யழைப்பாரைப் போலே வாருங்களென்கிறார். புலவீர்! - நீங்கள் விவேகிகளாகையாலே நான் அழைக்கிற வாசியறிந்து வரலாமேயென்கிறார்.

ஆழ்வீர்! எங்களை நீர் அழைக்கிறதென்? எங்கள் ஜீவனத்திற்கு நாங்கள் வழிதேட வேண்டாவோ? பிறரைக் கவிபாடியாகிலும் எங்கள் தேஹயாத்திரையை நாங்கள் நடத்திப்போருகிறோம் என்று அவர்கள் சொல்ல, மெய்யே; ஜீவிக்க வேண்டினாலும் உங்கள் தரம் குலைய ஜீவிக்கவேணுமோ? உங்கள் தரம் குலையாமல் ஜீவிக்கலாகாதோ? உங்கள் சரீரத்தை வருத்தியும் கைத்தொழில் செய்தும் ஜீவிக்கப் பாருங்கோளென்கிறார். “நும் மெய்வருத்திக்கைசெய்து உய்ம்மினோ” என்கிற விடத்திற்கு “கோட்டை சுமந்தும் புல்சீவி விற்றும் ஜீவிக்கப்பார்க்கலாகாதோ?” என்று பணிப்பாராம் எம்பார்.

க்ருஷி முதலியவை ஆயாஸ ரூபமாகயைõலே அவை செய்வதிற் காட்டிலும் ஸ்ரீமான்களான மனிதர்களை கவிபாடி ஜீவித்தல் நலமன்றோ வென்ன, உங்களுக்கு வேண்டுவன கொடுக்கும் ஸ்ரீமான்கள் இவ்வுலகினில் உளரோவென்று பார்த்தோம்? பார்த்தவிடத்தில் ஒருவருமில்லையாயிருந்தது என்கிறார் இரண்டாமடியினால். ஆழ்வார் ஸம்ஸாரயாத்ரையில் கண்வைக்குமவரல்லர்; இவர்களுக்காக இப்போது கண்வைத்து ஆராய்ந்து பார்த்தார் என்னுமிடம் ‘இப்போது நோக்கினோம்’ என்பதனால் தெரிகின்றது.

ஸ்ரீமான்களான மனிதர்கள் இல்லையாகில், இந்திரன் முதலான தேவர்களை ஏத்தினாலோவென்ன, உங்களுடைய அழகிய கவிகளைக்கொண்டு உந்தம்இஷ்ட தேவதைகளை  நீங்கள் ஏத்தினாலும் பின்னையும் அதெல்லாம் அந்த இந்திராதி தேவதைகளுக்கு அந்தராத்மபூதனாய் ச்ரிய: பதியாயிருந்து எம்பெருமான் திருவடிகளிலேயே சென்று சேரும்; ஆனபின்பு நேர்கொடு நேரே எம்பெருமான் தன்னையே ஏத்துங்களென்கிறார் பின்னடிகளால். உலகில் கவிபாடுகிறவர்கள் சில சிட்டாக்கள் வைத்துக்கொண்டிருப்பது வழக்கம்; புண்டகரீகாக்ஷன் என்றும் ஸ்ரீமான் என்றும் மஹோதாரன் என்றும் ஸகலஸத்குணநிதி என்றும் இப்படிச் சில விசேஷணங்களைத்  திரட்டி வைத்துக்கொண்டிருந்து துதிப்பார்கள்; இத்துதிமொழிகளை மனிதர் விஷயத்திலோ தேவதாந்தரங்கள் விஷயத்திலோ பிரயோகித்தால் உண்மையாக அர்த்தமுள்ள விடத்திலேயே சப்தமும் சென்று சேருமாதலாலும், முற்கூறிய விசேஷணங்களின் பொருத்தம் எம்பெருமானொருவனுக்கே யுள்ளதாதலாலும், இந்திரன் சந்திரன் என்று நாம் விசேஷ்யங்களை யிட்டுப்பாடினாலும் அபர்யவஸாந வ்ருத்தியினால் அந்தர்யாமியளவும் செல்லுகையாலும் எம்பெருமானையே கவிபாடிற்றாமித்தனை யென்று கொண்டு ‘என் திருமாலுக்குச்சேருமே’ என்றது நன்கு பொருந்தும் வார்த்ததை யென்க.

English Translation

Come, Poets! Exercise your body and hands and live.  Nobody is rich in this wide Earth, we have seen, Let each praise his chosen god, it will all reach my Tirumal finally, the Lord of radiant crown.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain