(3212)

என்னாவ தெத்தெனை நாளைக்குப் போதும் புலவீர்காள்,

மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்?,

மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,

தன்னாக வேகொண்டு சன்மம்செய்யாமையும் கொள்ளுமே.

 

பதவுரை

புலவீர்காள்

-

பண்டிதர்களே!

மன்னா

-

அல்பாயுஸ்ஸுக்களான

மனிசரை மனிதர்களை

பாடி

-

கவிபாடி

படைக்கும்

-

(அதனால்) நீங்களடைகின்ற

பெரும்பொருள்

-

பெருஞ்செல்வம்

என் ஆவது

-

யாதாவது?

எத்தனை நாளைக்கு போதும்

-

(அது) எத்தனை நாளைக்குப் பற்றும்?

வின் ஆர்

-

ஒளிநிறைந்த

மணி முடி

-

மணிமகுடத்தை யுடையவனான

விண்ணவர்தாதையை

-

தேவாதி தேவனை

பாடினால்

-

கவிபாடினால் (அப்பெருமான் உங்களை)

தன் ஆகவே கொண்டு

-

தனக்கு அடிமையாகவே கொண்டு

சன்மம் செய்யாமையும் கொள்ளும்

-

இனிப் பிறவிகள் உண்டாகாதபடியாகவும் அங்கீகரித்தருள்வன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- - கவிபாடினார்க்கு ஸகலவரிசைகளும் கொடுக்கவல்லவனான எம்பெருமானை விட்டு இன்றிருப்பார் நாளையிரார் என்னும்படியான அஸ்திரங்களைக் கவிபாடுவதில் என்ன பயனுண்டென்கிறார்.

என்னாவது- அற்பர்களைக் குறித்து நீங்கள் கவிபாடுவதனால் உங்களுக்கு என்ன கிடைக்கப் போகுமா? கவிபாடுவாரும் பாடினவர்களுக்குக் கொடுப்பாருமாய்க் காணவில்லையோ? என்றார்கள்; அதற்கு மேல் எத்தனை நானைக்குப்போதும்? என்கிறார். கவிபாடப் பரீச்ரமப்பட்ட  நாள்களோ பலப்பல இருக்கும்; அந்நாட்களுள் ஒரு நாளைய ஜீவனத்திற்குக் காணுமோ அவன் கொடுக்கும் பொருள் என்றபடி. அந்த அற்ப பலனுக்கும் அவகாசமில்லையாம்படி அல்பாயுஸ்ஸுக்களாகவன்றோ அவர்கள் தாமிருப்பது என்கிறார் மன்னா மனிசரை என்பதனால் ஒருவன் விஷயமாக ஒரு வருஷ காலம் வெகு பரிச்ரமப்பட்டு ஒரு புத்தகமெழுதி முடித்து அதை அவனிடம் கொண்டு போய்ப் படித்துக் காட்டிப் பரிசு பெற வேணுமென்றெண்ணிப் புறப்படும்போதே ‘அவன் மாண்டான்’ என்று எதிரே ஆள்வரும்படியாகவன்றோ இருப்பது. ‘பாண்டேன் வண்டறையும் குழலார்கள் பல்லாண்டிசைப்ப, ஆண்டார் வையமெல்லாமரசாகி முன்னாண்டவரே மாண்டார் என்று வந்தாரந்தோ!’ என்ற பெரிய திருமொழிப்பாசுரம் இங்கு நினைக்கத் தகும்.

பின்னை, யாரைப் பாடவெண்டுமென்ன, நித்யஸூரிநாதனைப் பாடவேணுமென்கிறார் மூன்றாமடியினால்.

மின்னர்மணிமுடி என்பது விண்ணவர்க்கும் விசேஷணமாகலாம், விண்ணவர் தாதையான எம்பெருமானுக்கும் சிசேஷணமாகலாம். விண்ணவர்க்கு விசேஷணமானபோது, அவர்கள் எம்பெருமானைத் துதித்துத் துதித்து முடிபெற்றவர்கள் என்றதாகிறது. விண்ணவர் தாதைக்கு விசேஷணமானபோது, கவிபாடுமவர்கட்குப் பரிசளிக்க ஸஜ்ஜமான முடியையுடையவன் என்றதாகிறது.

எம்பெருமானுக்குத் தான் முடியுண்டு; விண்ணவர்கட்கு முடியுண்டோ வென்கிற சங்கைக்குப் பரிஹாரமாக “முடியுடைவானவர்” (10-9-8) என்கிற திருவாய் மொழிப் பாசுரத்தை நினைப்பது.

தன்னாகவே கொண்டு - தனக்கே அநந்யார்ஹ சேஷபூதராக அடிமை கொண்டு என்றபடி. * தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே யொக்கவருள் செய்வர்* என்கிறபடியே தன்னோடொக்கப்பண்ணி என்றும் பொருள் கூறுவர்.

சன்மம் செய்யாமையும் கொள்ளும்=நீசரைக் கவி பாடுகைக்கு அடியான சரீர ஸம்பந்தத்தையும் தொலைத்தருள்வன். சன்மம் ஏற்பட்டால் பசியும் ஏற்படுகிறது; அதனால் அற்பரிடம் சென்று துதிக்க நேருகின்றது; சன்மமே யில்லையாகில் நரஸ்துதியாகிற நாசமும் இல்லையாமென்று ஜன்மஸம்பந்தத்தையே போக்கியருள்வன் எம்பெருமான்.

 

English Translation

O Poets who sing the glories of ephemeral man!  How much do you get, and how long does it last?  Praise the Lord of radiant crown.  Making you his own, he will provide you for all times.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain