(3210)

உளனாக வேயெண்ணித் தன்னையொன்றாகத்தன்

செல்வத்தை வளனா மதிக்குமிம் மானிடத்தைக்கவி பாடியென்,

குளனார் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே,

உளனாய எந்தையை எந்தைபெம்மானை ஒழியவே?

 

பதவுரை

குளன் ஆர்

-

குளங்கள் நிறைந்த

கழனி சூழ்

-

கழனிகளால் சூடுப்பட்ட

கண்

-

இடமகன்ற

நன்

-

விலக்ஷணமான

குறுங்குடி

-

திருக்குறுங்குடியிலே

மெய்ம்மை

-

ஸௌலப்யம் முதலிய குணங்களோடு கூடி உண்மையாக

உளன் ஆய

-

உறைபவனான

எந்தையை எந்தை  பெம்மானை ஒழிய

-

என் குலநாதனைத் தவிர

தன்னை

-

அஸத்கல்பனான தன்னை

உளன் ஆகவே

-

ஸத்தானவனாகவே கொண்டு

ஒன்று ஆக எண்ணி

-

ஒரு பொருளாக நினைத்து

நன் செல்வத்தை

-

தன்னதாக அபிமானித்த அற்ப செல்வத்தை

வள் ஆ

-

மிகவும் மேம்பாடாக

மதிக்கும்

-

எண்ணியிருக்கிற

இம் மானிடத்தை

-

இந்த அற்ப மனிதர்களை

கவி போடி என்

-

கவி பாடுவதனால் என்ன பலன்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  உண்மையாயும் பர்பூர்ணமாயுமுள்ள கல்யாணகுண சும்பத்துக்களை யுடையனாயிருந்துள்ள எம்பெருமானை விட்டு அஸத்கல்பராய் அற்பு ஸம்பத்துகளையுடையரானவர்களைக் குறித்துக் கவி பாடுவாரை நிந்திக்கிறார்.

எல்லையில்லாத பெருஞ் செல்வத்தையுடைவனாய் * உயர்வற வுயர்நலமுடையனாயிருந்த எம்பெருமானை யொழிய, தன்னையும் ஒரு வஸ்துவாகப் பார்த்துத் தன் செல்வத்தையும், ஒரு செல்வமாக மத்திருக்கிற இவ்வற்ப மனிதர்களைக் கவிபாடி என்ன பலன் பெறலாகுமென்று கர்ஹிக்கிறார்.

உளனாகவேயெண்ணி = பிறருடைய கவிக்கு விஷயபூதரான அற்பமசர்களில் எண்ணத்தைக் கூறுவது இது. “அஸந்நேவ ஸ பவதி”  என்னுங்கணக்கிலே, இல்லையென்னலாம்படி யிருக்கிற தங்களை உள்ளவர்களாக ப்ரமித்திருக்கின்றார்களாம். ப்ரஹ்மஜ்ஞானமுண்டாகிலன்றோ “ஸந்தமேநம் ததோ விது” என்கிறபடியே உள்ளவர்களாவர். அப்படிப்பட்டவர்கள் பாகவதோத்தமர்களாதலால் அன்னவர்களைத் துதிப்பது ஸ்வரூபாநுரூபமேயாகும்; அது நரஸ்துதிக் குற்றத்தின்பாற் படாதென்றுணர்க.

தன் செல்வத்தை வளனாமதிக்கும் = தானே இல்லையாம்போது தன்செல்வமென்று ஒன்றுண்டோ? இல்லாத செல்வத்தை இருப்பதாக நினைத்ததுமல்லாமல் அது தன்னைப்போரப் பொலியவும் நினைப்பதே! என்று கர்ஹிக்கிறபடி வளன்- வளம்; மகரனகரப்போலி.

இவ்விடத்து ஈட்டில் ஓர் ஐதிஹ்ய மருளிச் செய்கிறார்; கல்ப்ரஹ்ம தேசத்திலே கரிக்கால் சோழப்ரஹ்மராயன் என்கிறவொரு ப்ரபு இருந்தான்; இவர் திருவாய் மொழிக்கு ஒரு வியாக்கியானர் எழுதிக்கொண்டுவந்து நஞ்சீயரிடம் காட்டி மதிப்புரை வாங்கப் பார்த்தான். அவன் எழுதினது நன்றாக இல்லாமல் போனாலும் வெகு நன்றாயிருக்கிறதென்றே சொல்லியாக வேண்டும்; இல்லாவிடில் அவன் ப்ரபுவாகையாலே ஏதேனும் தீங்கிழைக்க நினைப்பனோவென்று சங்கித்தார் கஞ்சீயர்; உத்தமாச்ரமியான நாம் இதில் அகப்பட்டுக் கொள்வானேன் என்றெண்ணி நம்பிள்ளையை நோக்கி  நீர் இவ்வுரையைக் கேட்டு ஸம்பாவகை பண்ணும்’ என்று நியமிக்க, ஜீயருடைய திருவுள்ளத்தை யுணர்ந்த பிள்ளை தாமும் அங்ஙனே அவ்வுரையை வாசிக்கக் கேட்டு அவனுடைய மனம் உகக்குமாறு கொண்டாடிக் கூற வேணுமென்று கருதி, “இவ்வுரை ஆழ்வாருடைய திருவள்ளக் கருத்துக்குப் பொருத்தமாகவே மிக நன்றாக அமைந்திருக்கின்றது” என்று அருளிச் செய்ய, அது கேட்ட அவ்வுரைகாரன் (ராயன்) “ஆழ்வார் வேறொரு காரியமுமில்லாமல் பிரபந்தம் பேசினார்; நான் கிராம காரியங்கள் பலவற்றையும் நோக்கிக் கொண்டே இடையிடையில் இது எழுதினேன். ஆதலால் ஆழ்வார்க்கும் எனக்கும்  எவ்வளவு வசதியுண்டென்று ஆலோசித்தருள வேணும்” என்றானாம். “தன்னை யொன்றாகத் தன் செல்வத்தை வளனாமதிக்கும்” என்றவிடத்திற்கு இது மிகவும் பொருத்தமான ஸம்வாதம்.

இம்மானிடரை என்னவேண்டுமிடத்து “இம்மானிடத்தை” என்று அஃறிணையாகச் சொன்னது அலக்ஷ்யமதா புத்தியினால், இங்கு ஸ்ரீஸூக்தி காண்மின்- “(இம் மாவிடத்தை) மநுஷ்யரென்று சொல்லவும் பாத்தம் காண்கிறிலர்காஸம் அசேதநங்களைச் சொல்லும்படியிலே சொல்லுகிறார். தன்னை மெய்யாகவறியாதவ்ன அசித்ப்ராயனிறே.”

இம் மானிடத்தைக் கவி பாடி என்? = அற்ப மனிதர்களிடத்தில் உள்ள குற்றங்களை மறைத்து இல்லாத நற்றங்களை ஏறிட்டுக் கவிபாடுவதனால் கவிபாட்டுண்கிறவர்களுக்கு ஓர் அவமனாம் தேறுமேயல்லாது வேறில்லை; ஏனென்னில், கூறறப்படுகிற நற்றம் உண்மையாகவிருந்தால் குறைவில்லை. குற்றம் நிறைத்திருக்குமிடத்திலே ஏறிட்டுக் கூறப்படும் நற்றமே யாதலால் இந்த நற்றங்களைப் பிறர் கேட்கும்போது உண்மையான குற்றமே நினைவுக்கு வரும்; அங்ஙனம் குற்றம் நினைவுக்கு வருவதற்காகவே கவிபாடினதாகத் தேறுகின்றமையால் இதனால் அவமானமேயாயிற்று பலிப்பது! ஆக, கவிபாடுகிற வியாஜத்தினால் அவர்களை அவமானப்படுத்தி வைப்பதில் என்ன லாபம்? என்கிறாராழ்வார்.

பிள்ளையாரைத் குறித்துக் கவிபாட வேணுமென்ன, திருக்குறுங்குடி எம்பெருமானைக் குறித்துக் கவிபாடவேணுமென்கிறார் பின்னடிகளில், திருக்குறுங்குடியென்றது ஸகல திவ்ய தேசங்களுகுக்கும் உபலக்ஷணம். பரவாஸுதேவனாயும் க்ஷீராப்தி நாதனாயும் ராமக்ருஷ்ணாதியவதாங்கள் செய்தவனாயும் ஸ்வாந்தர்யாயியாயும் கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலிய திவ்யதேசங்களில் கோயில் கொண்டெழுந்தருளி யிருப்பவனாயுமுள்ள ஸர்வேச்வரனொருவனையை கவிபாட வேணுமென்றவாறு.

குறுங்குடி =  பாண்டியநாட்டுத் திருப்பதிகள் பதினெட்டினுள் ஒன்று; குறுகியவனான வாமனனது க்ஷேத்ரமாதலால் இத்தலத்திற்கு குறுங்குடி யென்று பெயர் வந்ததென்பர். இத்தலத்திலுள்ள எம்பெருமான்களுள் ஒரு எம்பெருமான் ஸ்ரீ பாஷ்யகாரர் (உடையவர்) பக்கலிலே திருமண்காப்பு சாத்திக்கொண்டு வேதாந்தார்த்தமுங் கேட்டு சிஷ்யனாய் நாமும் ‘நம்மிராமானுசனையுடையோம்’ என்கையாலே அப்பெருமாளுக்கு வைஷ்ணவநம்பியென்று திருநாமம். ஆனாது பற்றியே வைஷ்ணவவாமாநக்ஷேத்ரம் என்றும் இத்தலம் வழங்கப்படும். “வைஷ்ணவவாமனத்தில் நிறைந்த நீலமேனியில ருசிஜனக விபவலாவண்யம் பூர்ணம்” னஎ“ற ஆசார்யஹ்ருதய திவ்யஸூகதி காண்க நம்மாழ்வாருடைய திருவவதாரத்திற்குக் காரணமாயிருந்தவரும் இந்தலத்து நம்பியே.

கண்ணன்குறுங்குடி = கண்ணபிரானாகிய ஸர்வேச்வரன் ‘என்னது’ என்று ஆபிமானித்து நித்யவாஸம் செய்யப்பெற்ற குறுங்குடி என்று ஆசார்யர்கள் திருவுள்ளம் பற்றின பொருள். “கண், நன், குறுங்குடி என்று வியாக்கியானம் பண்ணினார்கள். தமிழர்” என்று ஈட்டு ஸ்ரீஸூக்தியும் காண்க. “கண்ணனுடைய குறுங்குடி’ என்று பொருள் கொள்ளுமிடத்தில் ஸ்வல்பம் அநுபபத்தியுண்டு; “தேவதத்தனுடைய க்ருஹத்திலுள்ள தேவதத்தன்’ என்று வ்யாவஹிக்க வொண்ணாதாப்போலே ‘ஸர்வேச்வரனுடைய குறுங்குடியிலுள்ள ஸர்வேச்வரன்’ என்கிற வ்யாவஹாரமும் ஒண்ணாதாகையாலே கண், நன் என்று பிரித்து விசேஷணமாக்கிப் பொருள் கொள்வதே பொருந்தும் என்று சிலர் கருதக்கூடும்; அப்படியில்லை; “கண்ணன் குறுங்குடி’ என்றே ப்ரஸித்தியென்ற வைத்து; பொருள் கொள்வதில் ஆசார்யர்களின் நோக்கு என்று ணரவேணும்.

குளன்- குளம்; மகரனகரப்பொலி.

 

English Translation

What use singing the praise of these mortals who hold themselves and their wealth in great esteem, when the Lord of celestials, Krishna, my father, resides in Kurungudi surrounded by fertile fields?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain