nalaeram_logo.jpg
(3186)

கண்கள் காண்டற் கரிய னாய்க்கருத் துக்கு நன்றுமெ ளியனாய்,

மண்கொள் ஞாலத்து யிர்க்கெல் லாமருள் செய்யும் வானவ ரீசனை,

பண்கொள் சோலை வழுதி நாடன் குருகைக் கோன்சட கோபன்சொல்,

பண்கொள் ஆயிரத் திப்பத் தால்பத்த ராகக் கூடும் பயலுமினே.

பதவுரை

கண்கள் காண்டற்கு

-

கண்களால் பார்ப்பதற்கு

அரியன் ஆய்

-

அருமைப்பட்டவனாகி

கருத்துக்கு

-

தியானத்திற்கு

நன்றும் எளியன் ஆய்

-

மிகவும் சுலபனாய்

மண் கொள் ஞாலத்து

-

பூமண்டலத்திலுள்ள

உயிர்க்கு எல்லாம்

-

பிராணிகளுக்கெல்லாம்

அருள் செய்யும்

-

(அர்ச்சாவதார முகத்தாலே) க்ருபைபண்ணுகிற

வானவர் ஆசனை

-

தேவாதிதேவனைக் குறித்து,

பண் கொள் சோலை

-

(வண்டு முதலியவற்றின்) இசைமிகுந்த சோலைகளையுடைய

வழுதி நாடன்

-

திருவழுதி நாட்டை யுடையராய்

குருகை கோன்

-

திருநகரிக்குத் தலைவரான

சடகோபன்

-

ஆழ்வார்

சொல்

-

அருளிச்செய்த

பண் கொள் ஆயிரத்து

-

ராகப்ரதாநமான இவ்வாயிரத்தினுள்ளும்

இப்பத்தால்

-

இப்பதிகத்தினால்

பத்தார் ஆக கூடும்

-

பக்தியை யுடையவராகக் கூடும்:

(ஆதலால்)

பயிலுமின்

-

(இப்பதிகத்தை) அப்யஸியுங்கோள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  இத்திருவாய்மொழியை ஓத, பழுதில்லாத பக்தியுடையராகை திண்ணம்; ஆனபின்பு இத்திருவாய்மொழியை ஓதுங்கள் என்கிறார்.

காணப்பெறாத க்லேசத்தோடே அருளிச் செய்கிறார் கண்கள் காண்டற்க அரியனாய் என்று. பகவத் தத்வம் ஒருநாளும் காணக்கிடைக்க மாட்டாதது என்று மறந்து பிழைக்கலாமே, அப்படியும் பிழைக்கவொண்ணாதபடி நெஞ்சுக்கு முன்னிலையாயிருக்கும் படியை “கருத்துக்கு நன்றுமெளியனாய்” என்றிவதனால் அருளிச்செய்கிறார்.

ஆழ்வார்க்கு விச்லேஷமாவது - பாஹ்ய ஸம்ச்லேஷாபேக்ஷையாலே மாநஸா நுபவத்தக்கு வரும் கலக்கம்; ஸம்ச்லேஷமாவது - ப்ரத்யக்ஷ ஸமாநாகாரமான ஜ்ஞாந ஸாக்ஷாத்காரம் என்றுணர்க.

மண்கொள்ஞாலத்து இத்யாதி, நித்யஸூரிகளுக்கு அநுபாவ்யனாயிருப்பது போலவே, ஸம்ஸாரிகளென்று வாசி வையாதே அர்ச்சாவதார  முகத்தாலே வந்து ஸுலபனானவன் என்றபடி. ஆக  இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயமாக ஆழ்வாரருளிச் செய்த ஆயிரத்திருப்பத்தால் எல்லாம் கிடைக்கிலும் கிடையாததான பகவத்பக்தியும் கிடைக்கும்; ஆதலால் இப்பதிகத்தை அப்யஸியுங்கோள் என்றாராயிற்று.

பண்கொள்சோலை என்றவிடத்து ஈட்டில் “முக்கோட்டைபோலே காணும் சோலையிருப்பது” என்றுள்ளது. (அதாவது) மலையாளத்தில் முக்கோட்டை என்று ஓரிடமாம்; அது மூகாம்பிகையின் கோயில் என்பர்கள்; அவ்வித்தில் ஊமைகள் சென்றாலும் அந்நிலமிதியால் வெகு அழகாக கவிபாடுவர்களாம். (இது முற்கால வழக்கம் போலும்) பெரிய திருமொழியில் (8-10-9) “பாட்டினாலன்னை யென்னெஞ்சத்திருந்தமை காட்டினாய்” என்றவிடத்துப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் “இவரைப்பாடுவித்த முக்கோட்டையிருறந்தபடி” என்றுள்ள ஸ்ரீஸூக்தியும் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.

English Translation

This decad of the Pann-based thousand songs by sweet-bowered Valudi-land's kurugur Satokapan extol the invisible Lord.  He is sweet to the heart.  O, people, learn it and become his devotees!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain