nalaeram_logo.jpg
(3184)

தஞ்ச மாகிய தந்தை தாயொடு தானு மாயவை அல்லனாய்,

எஞ்ச லிலம ரர்க்கு லமுதல் மூவர் தம்முள்ளு மாதியை,

அஞ்சி நீருல கத்துள் ளீர்கள் அவனி வனென்று கூழேன்மின்,

நெஞ்சி னால்நினைப் பான்ய வனவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.

பதவுரை

உலகத்து உள்ளீர்கள்

-

உலகத்தவர்களே!

தஞ்சம் ஆகிய

-

ரக்ஷிக்குந் தன்மை பொருந்திய தந்தையும்

தந்தையொடு

-

தந்தையும்

தாய்தானும் ஆய்

-

தாயுமாய்

அவை அல்லன் ஆய்

-

அவ்வளவோடும் நில்லாத ஸகலவித பந்துவுமாய்

எஞ்சல் இல்

-

(பகவதநுபவத்தில்) குறைதல் இல்லாத

அமரர் குலம்

-

நித்யஸூரிகளின் திரளுக்கு

முதல்

-

தலைவனாய்

மூவர் தம் உள்ளும்

-

மும்மூர்த்திகளுக்கும்

ஆதியை

-

முதல்வனான எம்பெருமானைக் குறித்து

நீர்

-

நீங்கள்

அஞ்சி

-

மேன்மை கண்டு கலங்கி

அவன் இவன் என்று

-

எல்லை கடந்த மஹிமையையுடைய அந்த எம்பெருமான் வேறு, இந்த அர்ச்சாரூபாயான எம்பெருமான் வேறு என்று கொண்டு

கூழேல்மின்

-

கலங்கியிருக்க வேண்டா;

நெஞ்சினால்

-

நெஞ்சாலே

நினைப்பான் யவன்

-

நினைந்து உகந்தருள்விக்கப்பட்டவன் யாவன்

அவன்

-

அவனே

நீள் கடல் வண்ணன் ஆகும்

-

விசாலமான கடல்போன்ற நிறத்தையுடைய ஸர்வேச்வரனாவன்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  ‘எம்பெருமான் ஸ்ரீவைகுண்டத்தி லெழுந்தருளியிருக்குமிருப்பு எங்களுக்கு உபயோகப்படுவதன்று; ராம கிருஷ்ணாதி அவதாரங்கள் பண்ணின காலத்தில் நாங்கள் அணுகியிருந்து வாழப்பெற்றிலோம்; ஆனபின்பு எங்ஙனே அவனைக் கண்டு ஆச்ரயிக்கும்படி?’ என்று ஸம்ஸாரிகள் வினவுவதாகக்கொண்டு, அவர்களுக்கு உத்தரமுரைக்கிறார்; நீங்கள் ஏதேனுமொருபடி உகந்தருளப்பண்ணி ஆச்ரயிப்பது; அத்திருமேனியையே அப்ராக்ருத திவ்யஸம்ஸ்தானமாக விரும்பியருளக் குறையில்லை யென்கிறார். இப்பதிகத்திற்கு இப்பாசுரமே உயிராயிருக்கும். இப்பாட்டின் பிரமேயத்திற்கு அவதாரிகை போன்றனவே கீழ்ப்பாசுரங்கள்.

தஞ்சமாகிய தந்தை தாயொடு தானுமாய் = இவ்விடத்து ஈட்டு ஸ்ரீஸூக்திகள் பரம போக்யங்கள்; அவை வருமாறு:- “புறம்புள்ளார் ‘தாய் தமப்பன்’ என்று பேராய், இவனுக்கு ஓரிடர் வந்தவாறே பொகட்டுப் போவர்கள்; இவனுக்கு ஏதேனுமோரிடர் வந்தாலும் அப்போது முதல்காட்டி ரக்ஷிப்பான் இன்னொருவனுமேயாயிற்று. மாதாபிதாக்கள் ‘இவன் பிறந்த முஹூர்த்தம் பொல்லாது’ என்று நாற்சந்தியிலே வைத்துப் போவாரும் அறவி(ற்று)ட்டு ஜீவிப்பாருமாயிருக்கும். அவர்களைப் போலன்றிக்கே, தங்களை அழியமாறியும் நோக்கும் நோய் தந்தையுமாய்-  இவர்களோடுண்டான பந்தந்தான் கர்மமடியாக வந்ததாகையாலே அக்கர்மம் க்ஷயிக்க க்ஷயிக்கும்; இங்ஙனன்றிக்கே *பூதாநாம் யோவ்ய்ய பிதா* ஸர்வேஷாமேவ லோகாநாம் பிதா மாதா ச மாதவ:* என்கிறபடியே ஸத்தாயோகி ஸகலபதார்த்தங்களுக்கும் பிதாவாயிருக்கும்; அது தன்னிலும் இழவுக்குக் கண்ணநீர்பாய வேண்டாத பிதாவாயிருக்கும்.

எம்பெருமானை யொழிந்தவர்கள் ரக்ஷகரல்லரென்பது பிள்ளையுலகாசிரியருடைய ப்ரபந்தபரித்ராணம் என்கிற ரஹஸ்ய க்ரந்தத்திலும் பரப்ப அருளிச்செய்யப்பட்டுள்ளது; அங்குங் கண்டுகொள்க.

ஆசார்யஹ்ருதயம் இரண்டாவது பிரகரணத்தில் “வித்யை தாயாகப் பெற்று” என்கிற சூர்ணையில் “திருமகள்போல வளர்த்த தஞ்சமாகிற தந்தை” என்றுள்ளவிடத்தில் தஞ்சமாகிய தந்தை யென்பதற்கு ஆசார்யன் என்று பொருள் அருளிச் செய்யப்பட்டுள்ளது; தந்தை, ஆகிய தந்தை, தஞ்சமாகிய தந்தை என்று யோஜித்து, தநதையென்று சரீரோத்பாதகனை பிதாவைப்போனன்றிக்கே ரக்ஷணத்திலே தீக்ஷிதனாயிருக்கும் எம்பெருமானாகிற பிதாவைச் சொல்லுகிறதென்றும், தஞ்சமாகிய தந்தையென்று- ஸ்வரூபோத்பாதகனாய் ஒரு தசையிலும் கைவிடாதே ஹிதைஷியாய், ஸம்ஸாரமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருக்கும் எம்பெருமானாகிற பிதாவைப்போலுமன்றிக்கே உஜ்ஜீவநைகபரனாய்க்கொண்டு மோக்ஷைகஹேதுவாயிருக்கிற ஆசார்யனாகிற பிதாவைச் சொல்லுகிறதென்றும் வியாக்கியானிக்கப்படுகிறது. “பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து” என்றும் “ஸாக்ஷாந்நாராயணோ தேவ: க்ருத்வா மார்த்யமயீம் தநும், மக்நாத் உத்தரதேலோகாந் காருண்யாத் சாஸ்த்ரபாணிநா” என்றும் சொல்லுகிறபடியே ஆசார்யனாகவும் எம்பெருமான்தானே வந்து பிறந்தருஸினனாதலால் இங்கு எம்பெருமானைத் தஞ்சமாகிய தந்தை யென்று ஆசார்யவாசகபதத்தினால் சொல்லுவதிலும் குறையில்லையென்றுணர்க.

தானுமாய் = தந்தையானவன் தாயாகமாட்டான்; தாயானவள் தந்தையாக மாட்டாள்; இவர்களிருவரும் இவன் தானாகமாட்டார்கள்; இவன்தான் இவர்களிருவருமாகமாட்டான்; இவர்களெல்லாமாயிருப்பவன் எம்பெருமான் என்கிறது. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகள் காண்மின்:- “(தானுமாய்) மாதாபிதாக்கள் பொகட்டுப்போனவன்றும் ‘நான்ஜீவிக்கவேணும், எனக்கு நன்மையுண்டாகவேணும்’ என்றிறேதானியருப்பது; இப்படி தனக்கு நன்மையார்க்கும் தானுமாய்.”

அவையல்லனாய் = தந்தைதாய் தான் என்னுமிவ்வளவு மாத்திரமேயல்லாமல் “சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரேயினி யாவரே” என்கிறபடியே ஸர்வோபகாரகனும் ஸர்வவித பந்துவும் அவனே யென்கிறது. இப்படியிருக்கிறவன் யாவனென்ன, நித்யஸூரிகளுக்கு ஜீவநஹேது வானவனென்கிறார் எஞ்சலிலமரர் குலமுதல் என்று.

மூவர்தமுள்ளுமாதியை என்றதற்கு, பிரமன் முதலிய மூன்று மூர்த்திகளிலும் வைத்துக்கொண்டு, பிரதானனாக வுள்ளவன் என்றும், ‘மூவர்தம்’ என்றவிடத்தில் தம் என்பதை தாம் என்பதனை குறுக்கலாகக்கொண்டு, மூவர்தாம்- பிரமன் சிவன் இந்திரனாகிய மூவரும், உள்ளும்- தியானிக்கிற, ஆதி என்றும் பொருள் கொள்ளலாம்.

அஞ்சி = கீழ்ச் சொன்னதெல்லாம் பயப்படுவதற்கு ஹேதுவாயிருக்கும் ஜகத்துக்கு ஸகலவித பந்துவுமாயிருக்கிறவனை நம்மாலே கிட்டப்போமோ? நித்யஸூரிகளுக்கு ஸத்தாஹேதுவாயிருக்கிறவனை நம்மாலே கிட்டப்போமோ? ப்ரஹ்மருத்ராகளுக்கு  நிர்வாஹகனாயிருக்கிறவனை நம்மாலே கிட்டப்போமோ? என்று அஞ்சக்கூடுமே; அப்படி அஞ்சவேண்டா வென்கிறார் மூன்றாமியினால். அவன் இவனென்று கூழேன்மின்=நீத்யஸூரி நாதனான எம்பெருமான் படியையும், நாம் ஏறி யருளப் பண்ணும் அர்ச்சாரூபியான பெருமானுடைய படியையும் பார்த்து, தேசகால வஸ்து பரிச்சேதரஹிதனாய் அஸாதாரண விக்ரஹத்தோடடே நிர்யஸூரிகளுக்கு அநுபாவஙயனாய்க் கொண்டிருக்கிற அப்பெருமான், தேசகால வஸ்துக்களால் பரிச்சிந்நனாய் நாமுகத்ததொரு த்ரவ்யத்தைத் திருமேனியாகக்கொண்டு நம்முடைய புத்திக்கு அதீநனாயிருக்கின்ற இம்மூதரர்டீத்தியாக எப்படியிருக்கக்கூடும் என்று சங்கிக்கவேண்டா என்பது தேர்ந்த கருத்து. கூழ்ப்பு-ஸம்சயம்; கூழேன்மின்- எதிர்மறை ஏவற்பன்மை வினைமுற்று. நெஞ்சினால் நினைப்பான்யவன் அவனாகும் = யாதொன்றை அவனுக்கு ரூபமாக நினைக்கின்றீர்கள், அது தன்னையே அவன் திவ்யரூபமாகக் கொண்டருளு மென்றபடி. “* ப்ரதிமாஸ்வப்ரபுத்தாநாம்* என்னும் ரிஷிகளைப்போலே தம்வாயாற் சொல்லமாட்டாமையாலே அவனிவ னென்கிறார்” என்ற நம்பிள்ளை யீடு காண்க.

English Translation

The Lord of radiant gods worshipped by Indra, Brahma and Siva is Father, Mother and self, yet apart from all.  O People, do not fall into tear and confusion calling to this godling.  My dark hued Lord takes the form that the heart seeks.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain