nalaeram_logo.jpg
(3183)

துயர மேதரு துன்ப இன்ப வினைக ளாய்அ வை அல்லனாய்,

உயர நின்றதோர் சோதி யாயுல கேழு முண்டுமிழ்ந் தான்தன்னை,

அயர வாங்கு நமன்த மர்க்கரு நஞ்சி னையச்சு தன்தன்னை,

தயர தற்கும கனறன் னையன்றி மற்றி லேன்தஞ்ச மாகவே.

பதவுரை

துயரமே தரு

-

பரிதாபத்தையே தாக்கடவதான

துன்பம் இன்பம் ஆய்

-

புண்யாபாபரூப கருமங்களுக்கு நியாயமகான்

அவை அல்லன் ஆய்

-

அவற்றுக்குத்தான் வசப்படாதவனாய்

உயர நின்றது ஓர் சோதி ஆய்

-

உயர்ந்த நிலமாகிய பரமபதந்தி லெழுந்தருளி யிருக்கின்ற விலக்ஷண தேஜோமய விக்ரஹ யுக்தனாய்

உலகு ஏழும்

-

எல்லா உலகங்களையும்

உண்டு உமிழ்ந்தான் தன்னை

-

(பிரளயத்தில்) உண்டு (மீண்டும்) வெளிப்படுத்தி ரக்ஷிப்பவனாய்

அயர வாங்கும்

-

மோஹிக்கும்படி உயிரை அபஹரிக்கின்ற

நமன் தமர்க்கு

-

யமபடர்களுக்கு

அரு நஞ்சினை

-

மீட்கமுடியாத விஷமாய்

அச்சுதன் தன்னை

-

(தன்னைப் பணிந்தாரை) நழுவ விடாதவனாய்

தயரதற்கு மகன் தன்னை அன்றி

-

சக்ரவர்த்தி திருமகனான எம்பெருமானை வல்லது

மற்று

-

மற்றொரு தெய்வத்தை

தஞ்சம் ஆக இலேன்

-

சரணமாகவுடையேனல்லேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- - மற்றுள்ளாரும் தம்முடைய பக்ஷத்தையறிந்து ருசி பண்ணுகைக்காக ‘நான் சக்ரவர்த்தி திருமகனை யல்லது மற்றொருவரை ஆபத்தனமாகப் பற்றியிரேன்’ என்று தமது உறுதியை வெளியிடுகிறார்.

துயரமே தரு என்கிற அடைமொழி துன்பவினையிற் போலவே இன்ப வினையிலும் அந்வயிக்கும். பாபம் போலவே புண்யமும் துயரம் தரக்கூடியதேயாகும். பரபத்திற்காட்டிலும் புண்யம் நன்றாயிருந்தேயாகிலும் மோக்ஷ மார்க்கத்திற்கு இடையூறாருந்திறத்தில் இரண்டும் ஒக்குமாதலாலும், “ததா வித்வாத் புண்யபாபே விதூய* இத்யாதியான உபநிஷத்தும் ஓதுகையாலும் புண்ய பாபங்களிரண்டுமே தொலையக்கடவனவாம். புண்யங்களுக்குப் பலனாக ஸ்வர்க்காநுபவம் முதலிய ஆபாஸ புருஷார்த்தங்கள் கிடைக்கும். பாவங்களுக்குப் பலனாக நரக வேதனைகள் கிடைக்கும்; பரம புருஷார்த்தத்தை விரும்பி நிற்பார்க்கு ஸ்வர்க்கநரகங்களிரண்டும் பரியாயமாதலால் புண்யஷார்த்தத்தை விரும்பி நிற்பார்க்கு ஸ்வார்க்கநரகங்களிரண்டும் பரியாயமாதலால் புண்ய பாபங்களிரண்டும் தொலைய வேண்டுமென்று சாஸ்த்ரம் சொல்லி நின்றது என்றுணர்க.

“துன்பவின்ப வினைகளாய்” என்கிற ஸாமாநாதிகரண்யம்- துன்பவின்ப வினைகளைச் செய்விப்பவன் என்ற கருத்திலேயாயிற்று.

அவையல்லனாய் = தான் கர்மவச்யனல்லன் என்றபடி.

‘தயரதன் மகன் தன்னை’ என்னாதே “தயரதற்கு மகன் தன்னை” என்றதற்கு நம்பிள்ளை யருளிச் செய்யும் தாத்பர்ய விசேஷமானவது- “ஒருகால் வெற்றிலைச் செருக்கிலே ‘ராஜ்யத்தைத் தந்தேன்’ என்னா, புரிந்து ஸ்த்ரீ பரதந்த்ரனாய் ‘நான் தந்திலேன், நீ காடேறப்போ’ என்னா. இப்படிச்சொல்லாம்படி அவனுக்கு இஷ்ட விநியோகரர்ஹனான புத்ரனை” என்பதாம். மகன் என்றது ஸர்வாத்மநாவிதேயன் என்ற பொருளிலேயாயிற்று; இப்பொருளை ‘தயரதற்கு’ என்று ஸ்பஷ்டமாக நிற்கின்ற வேற்றுமையுருபு தெரிவிக்கின்றது என்பது நம்பிள்ளை திருவுள்ளம்.

இங்கு நாட்டில் சில அருமையான திவ்ய ஸூக்திகள் உள்ளன:-

“எம்பெருமானார் திருவாராதனம் பண்ணிப்போருவதொரு பிள்ளையிறே இங்ஙனே யிருக்கச் செய்தே ஒருநாள் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் சக்ரவர்த்தி திருமகனை யெழுந்தருளப் பண்ணிக்கொண்டுவந்து கொடுத்தாராம், அவரைப் பார்த்து ‘மாமேகம் சரணம் வ்ரஜ* என்று தேவையிடாதார் எழுந்தருளினார்’ என்றாராம். ஆபிமுக்யத்தாலே பெறரைமென்றால் அவ்வாபிமுந்யந்தானும் பரமபக்தியோபாதி அரிதாயிருக்குமிறே இச் சேதநனைப்பார்ததால். ‘இத்தலையில் ஆபிமுக்கியத்திற்கு மேற்பட வேண்டா’ என்று சொல்லுகிறவையெல்லாம் சரண்யனுடைய நீரிமையைப்பற்றச் சொல்லுகிறது. இவனுக்கு வேண்டுவது சொல்புக்கால் *மஹா விச்வாஸ பூர்வகம்* என்ன வேண்டும்படியாயிருக்குமிறே. ஒரு சிறாயை விச்வஸித்து ஆறு மாஸத்துக்கு வேண்டும் சோறும் தண்ணீரும் ஏற்றிக் கொண்டு கடலிலே யிழியாநின்றான்; அவ்வோபாதி விச்வாஸமாகிலும் வேண்டாவோ பகவத் விஷயத்தைப் பற்றுவார்களுக்கு என்றருளிச்செய்வர்.”- என்று..

English Translation

He is the wicked karmas of pain and pleasure, he is beyond them too.  He stands above as the effulgent Lord, he makes and swallows all the worlds.  He is potent medicine against the agents of death.  He came as Dasaratha's son.  Other than him I have no refuge.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain