nalaeram_logo.jpg
(3178)

பரவி வானவ ரேத்த நின்ற பரம னைப்பரஞ் சோதியை,

குரவை கோத்த குழக னைமணி வண்ண னைக்குடக் கூத்தனை,

அரவ மேறி யலைக டலம ரும்து யில்கொண்ட அண்ணலை,

இரவும் நன்பக லும்வி டாதென்றும் ஏத்து தல்மனம் வைம்மினோ.

பதவுரை

வானவர்

-

தேவர்கள்

பரவி ஏத்த நின்ற

-

வாயாரத் துதிக்கும்படி அமைந்த

பரனை

-

பராத்பரனாய்

பரம் சோதியை

-

மேலான ஒளியுருவனாய்

குரவை கோத்த

-

(கோபிமார்களோடு) ராஸக்ரீடை செய்த

குழகனை

-

ரஸிகனாய்

மணி வண்ணனை

-

நீலமணிவண்ணனை

குடக்கூத்தனை

-

குடக்வத்தாடினவனாய்

அரவம் ஏறி

-

சேஷசயனத்தின் மீதேறி

அலை கடல்

-

அலையெறிகின்ற திருப்பாற்கடலில்

அமரும் துயில் கொண்ட

-

பொருத்தமான நித்திரையைக் கொண்டவனான

அண்ணலை

-

பெருமானை

நல் இரவும் பகலும்

-

நல்ல இரவும் பகலும்

விடாது

-

இடையறாமல்

என்றும் ஏத்துதல்

-

எந்நாறம் தோத்திரம் பண்ணுதலில்

மனம் வைம்மின்

-

சிந்தை செலுத்துங்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  கீழ்பாசுரத்தில் ப்ரஸ்தாவித்த இராமபிரானிற்காட்டிலும் எளியனாய் வந்து திருவவதாரம்பண்ணியரளின கண்ணபிரானை ஆச்ரயிக்கப்பாருங்களென்கிறார்.

க்ருஷ்ணவதாரத்திற்கு ஹேதுவாகத் தேவர்கள் பண்ணின தோத்திரத்தைத் திருவுள்ளம்பற்றிப் பரவி வானவரேத்தநின்ற என்றருளிச் செய்கிறார். பூமிதேவிக்கத் தன்மீது ஸஜ்ஜனங்கள் எத்தனை கோடிக்கணக்காக இருந்தாலும் அவர்களைச் சுமப்பது இலவம்பஞ்சைச் சுமப்பதுபோல் வருத்தமற்றிருக்கும்; ஒரு துஷ்டனுண்டாகிலும் இரும்பு மூட்டையைத் தாங்குவது போல் மிக வருத்தமாம்; ஆதலால் த்வாபரயுகத்தில் இப்பூமியின் கண் பிறந்திருந்த கம்ஸன் சிசுபாலன் முதலிய அசுரர்களின் பாரத்தைப் பொறுக்கமாட்டாமல் பூமிப்பிராட்டி கோரூபத்தைத்தரித்து மேருமலையினுச்சியிலுள்ள தேவர்களின் ஸபையையடைந்து, அச்சபை நடுவில் வீற்றிருக்கும் நான்முகனை வணங்கித் தனது துயரத்தை முறையிட்டு இவ்வஸுரர்களைத் தொலைத்துத் தன்னை ஸுகப்படுத்தவேணுமென வேண்டிக்கொள்ள, அதற்கு நான்முகன் சிறிது காலம் யோசித்து ‘இது நம்மாலாகாது, ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தனாய் ஸர்வலோக பிதாவாகிய ஸ்ரீமந்நாராயணனுக்கு அறிவித்து அவர் மூலமாக இக்காரியத்தை நிறைவேற்றுவிக்கவேணும்’ எனக்கருதி அந்தப்பூமியையும் மற்றுமுள்ள தேவர்களையுங் கூட்டிக்கொண்டுபோய்ப் பாற்கடலுள் பள்ளிகொள்கின்ற பரமனைத் தொழுது துதித்தனர்; பின்பு திருமால் அருளிபுரிந்த சிந்தைகொண்டு அவர்கட்குக் காட்சிதந்து யோகக்ஷேமங்களை விசாரித்து அவர்கள் வந்த வரலாற்றை யுணர்ந்தருளி அவர்கட்கு வாக்கு அளித்தபடியே இந்நிலத்தில் கண்ணபிரானாய் வந்து திருவவதரித்தனனென்றுணர்க.

குரவைகோத்த குழகனை - க்ருஷ்ணாவதாரத்தில் அற்புதமாக நடந்த ராஸக்ரீடையை அநுஸந்திக்கிறபடி. கண்ணபிரான் தன்னிடத்து விருப்பமுற்ற ஆயர் மாதருடைய ஆவலைத் தீர்க்கக்கருதி   சரத்காலத்தில் ஓரிரவில் யமுனைக்கரையில் நின்று வேணுநாதஞ் செய்ய, அதனைக் கேட்ட இடைப் பெண்களெல்லாரும் மாமியார் மாமனார் முதலியோரையும் மதியாமல் காவல் கடந்து புறப்பட்டுச் சென்ற க்ருஷ்ணகோஷ்டியில் அந்வயிக்க, அன்றிரவு அவர்களுடன் பரமபோக்யமாகக் குரவைக் கூத்தாடினன், குரவையாவது- ஒவ்வொரு ஆய்ச்சியின் பக்கத்திலும் ஒவ்வொரு கண்ணானாகப் பல வடிவெடுத்து நின்று மண்டலித்தாடும் ராஸக்ரீடை. குழகன்- ஒரு நீராகக் கலப்பவன்.

அரவமேறி யித்யாதி. “ஏஷநாராயண: ஸ்ரீமாத் க்ஷீரார்ணவநிகேதந: நாகபர்யங்க முத்ஸ்ருஜ்ய க்ஷ்யாகதோ மதுராம் புரீம்” என்கிறவடியே சேஷசயனத்தில் நின்றும் இறங்கிவந்து திருவவதாரம்பண்ணி வியாபாரங்களை முடித்துக் கொண்டு மீண்டும் அந்த சேஷசயனத்திலேறித் துயிலமர்ந்தன னென்பது இங்கு விவக்ஷிதம். ஆக இப்படிப் பட்ட எம்பெருமானை இரவும் பகலும் விடாது துதிக்கப் பாருங்களென்றாராயிற்று.

English Translation

Set your heart on praising him relentlessly night and day, the gem-hued Lord reclines on a serpent couch in the deep ocean.  He is the effulgent Lord worshipped by the celestials, he is the beautiful pot dancer who played Road with the Gopis!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain