nalaeram_logo.jpg
(3176)

செய்ய தாமரைக் கண்ண னாயுல கேழு முண்ட அவன்கண்டீர்,

வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய்,

செய்ய சூழ்சு டர் ஞான மாய்வெளிப் பட்டி வைபடைத் தான்பின்னும்,

மொய்கொள் சோதியொ டாயி னானொரு மூவ ராகிய மூர்த்தியே.

பதவுரை

செய்யதாமரை கண்ணன் ஆய் உலகு ஏழும்

-

செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களை யுடையனாய்

உலகு ஏழும்

-

ஸகலலோகங்களையும்

உண்ட அவன்

-

(ஒரு சமயத்தில்) திருவயிற்றிலே வைத்து நோக்கினவனாய்

வையம்

-

பூமியும்

வானம்

-

விண்ணுலகங்களும்

மனிசர் தெய்வம்

-

(முறையே அவற்றில் வாழ்கின்ற) மனிதரும் தேவதைகளும்

மற்றும்

-

மற்ற விலங்குகளும்

மற்றும்

-

மற்ற ஸ்தாவரங்களும்

மற்றும்

-

மற்றுமுள்ள பஞ்ச பூதங்களும்

முற்றும் ஆய்

-

மற்றுமுள்ள ஸகலமும் (காரணதசையில்) தன்னுள்ளே அடங்கப்பெற்றவனாய்

செய்ய சூழ் சுடர் ஞான ஆய்

-

சிறந்ததும் வியாபகமும் ஒளிமயமுமான ஸங்கல்பஜஙஞானத்தை யுடையனாய்

வெளிப்பட்டு

-

ஸ்ருஷ்டியை உத்தேசித்துத் தோற்றி

இவை

-

முன்சொன்ன இவை யெல்லாவற்றையும்

படைத்தான்

-

ஸ்ருஷ்டித்தவனாய்

பின்னும்

-

அதற்குமேலும்

மொய் கொள் சோதியோடு ஆயினாள்

-

செறிந்த தேஜோமயமான பரமபதத்தை நிலயமாகவுடையனாயிருக்கின்ற எம்பெருமான்

ஒரு மூவர் ஆகிய மூர்த்தி கண்டீர்

-

ப்ரஹம் விஷ்ணு சிவரூபியாய் நின்ற ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களை நிர்வஹிப்பவன் காண்மின்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  புண்டரீகாக்ஷத்வம் ஜகத் காரணத்வம் முதலிய குணங்களையுடைய எம்பெருமானே ஆச்ரயணீய னென்கிறார். இரண்டாம் பாட்டில் “பங்கயத்தடங் கண்ணனைப் பரவுமினோ” என்று வினைமுற்று உள்ளது; அதுவே இப்பாட்டிலும் மாநஸமாக அநுஸந்தேயமாய் இரண்டு பாட்டுஞ் சேர்ந்து ஏகக்ரியாந்வயி என்பாருமுண்டு; அன்றியே, இப்பாட்டில் வினைமுற்று இல்லையென்று அதனை மேற்பாட்டிலிருந்து வருவித்துக்கொள்ளவேணுமென்கிற நிர்ப்பந்தமில்லை; பகவத் குணங்களில் ஈடுபட்டுப் பேசும்போது வினைமுற்று இல்லாத விடங்களில் ஈடுபாடாகவே கொள்ளுதல் வேண்டும் என்பாருமுண்டு. இந்த ஈடுபாட்டிலிருந்து பரோபதேசம் அர்த்தாத் ஸித்தமாகும்.

இத்திருவாய்மொழி எம்பெருமானுடைய ஸௌலப்யகுணத்தை நிரூபணம் செய்யப் பிறந்ததாயினும் முதலில் பரத்வமே பேசப்பட்டு வருகின்றது; பரத்வமுடையவனுடைய ஸௌலப்யமே பாராட்ட வுரியதாகு மென்பதுபற்றி.

ஈரந்தோக்ய உபநிஷத்தில் (* தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவமக்ஷிணீ*) என்றதைத் திருவுள்ளத்திற்கொண்டு “செய்யதாமரைக் கண்ணனாய்” என்கிறார். மேலெடுத்துக்காட்டிய உபநிஷத் வாக்யத்தின் கீரிய பொருளை வேதார்த்த ஸங்க்ரஹத்தில் எம்பெருமானார் அருளிச்செய்தார். கப்யாஸம் புண்டரீகம் என்பதற்கு மூன்று வகையாகப் பொருள்கொள்வது ஆசிரியர் உவந்ததாம்.

இங்ஙனே உபநிஷத்ஸித்தமான திருக்கண்களுடைமை பரத்வத்திற்கு முக்கியமான சான்றாதலால் “செய்யதாமரைக்கண்ணனாய்” என்று பாசரத்தொடங்கினரென்க. வடிவழகில் புண்டரீகாக்ஷத்வம் எப்படியோ, அப்படி ஆத்ம குணங்களில் ப்ரளயாபத்ஸகத்வம் சிறந்ததாதலால் அதனை உலகேழுமுண்டவவன் என்றதானல் அநுஸந்திக்கிறார்.

(வையம்வானமித்யாதி) பூமியும் மேலுள்ள லோகங்களும் அவற்றில் வஸிக்கின்ற மநுஷ்யரும் தேவதைகளும் திர்யக்குக்களும் ஸ்தாவரங்களும் மற்றும் பஞ்ச பூதங்களும் மஹதாதி ஸமஷ்டியும் உண்டாம்படி உபாதாநமாய் என்றபடி.

செய்யசூழ் சுடர் =ஸகல ஜகத்தையும் ஸ்ருஷ்டிப்பதற்கு உபயுக்தமான பகவத் ஸங்கல்பத்தின் பெருமை இத்தால் கூறப்படுகிறது. வருத்தமின்றிக்கே வியாபியாநின்ற விசததமான தன்னடைய ஸங்கல்பரூபஜ்ஞானத்தாலே படைத்தானென்கை.

வெளிப்பட்டு என்பதை எம்பெருமானோடு அந்வயிப்பது முண்டு; இவை என்பதனோடேயே அந்வயிப்பது முண்டு; முந்தினபக்ஷத்தில் வெளிப்பட்டு - ஸ்ருஷ்டிக்கு அபிமுகனாய் நின்று தோற்றி என்றபடி. பிந்தின பக்ஷத்தில், வெளிப்பட்டிவை- வெளிப்பட்ட இவற்றைப் படைத்õனென்கை. ப்ரமாண ப்ரதிபந்நங்களான இவற்றை என்றபடி. தொகுத்தல் விகாரம்.

பின்னும் மொய்கொள் சோதியோடாயினான்= செறிந்த தேஜோமயமான திவ்யதேசத்திலிருப்பைச் சொல்லுகிறது. பரமபத நிலயன் என்றவாறு. (ஒரு மூவராகிய மூர்த்தி) பிரமனுக்கும் ருத்ரனுக்கும் அந்தர்யாமியாய் ஸ்ருஷ்டி ஸம்க்ஷாரங்களைப் பண்ணி ஸ்வேநரூபேண பாலனத்தைப் பண்ணும் ஸர்வேச்வரன்; பிரமன் ருத்ரன் இந்திரன் ஆகிய மூவரையும் மூர்த்தியாக வுடையவன் என்னவுமாம். ஆக இப்படிப் பட்ட எம்பெருமானே ஸர்வ ஸமாச்ரயணீயன் என்று காட்டினாராயிற்று.    ...

English Translation

Hear ye all about the Lord of lotus eyes, the sallower of the Universe!  He became the effulgent knowledge, through which he made the Earth the sky, men, gods, and all else.  Then he also became the effulgent Lord-of-three-faces.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain