nalaeram_logo.jpg
(3172)

வார்ப்புனல் அந்தண் ணருவி வடதிரு வேங்கடத் தெந்தை,

பேர்ப்பல சொல்லிப் பிதற்றிப் பித்தரென் றேபிறர் கூற,

ஊர்ப்பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்கநின் றாடி,

ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படு வாரே.

பதவுரை

வார் புனல் அம் தண் அருவி

-

சிறந்த தீர்தங்களையுடையதும் அழகிய குளிர்ந்த அருவிகளையுடையதுமான

வட திருவேங்கடத்து

-

வடக்குத் திருமலையில் நிற்கிற

எந்தை

-

எம்பெருமானுடைய

பல பேர்

-

பல திருநாமங்களையும்

சொல்லி பிதற்றி

-

வாய்வந்தபடி சொல்லி

பித்தர் என்றே பிறர் கூற

-

‘அவர்கள் பைத்தியக்காரர்கள்’ என்றே பிறர் சொல்லுமாறு

ஊர் பல புக்கும்

-

பலவூர்களிலே புகுந்தும்

புகாதும்

-

அங்குப் புகாமலும் (பலபேர்களுடைய ஸன்னிதானத்திலும் அஸன்னிதானத்திலும் என்றபடி)

உலோகர் சிரிக்க

-

உலகர்கள் சிரிக்கும்படியாக

ஆடிநின்று

-

நர்த்தனஞ் செய்து கொண்டிருந்து

ஆர்வம் பெருகி

-

ஆசை விஞ்சி

குனிப்பர்

-

கோலாஹலஞ் செய்பவர்கள்

அமரர்

-

நித்யஸூரிகளாலே

தொழப்படுவார்

-

வணங்கப்படுவர்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  ஸம்ஸாரபூமியில் இருந்துவைத்து எப்போதும் திருவேங்கடமுடையானுடைய திருக்குணங்களிலீடுபடுமவர்கள் *அயர்வறுமமரர்களிலும் சீரிய ரென்கிறார். இங்கத் திருவேங்கடத்தை யெடுத்து திவ்யதேசங்களெல்லாவற்றுக்கும் உபலக்ஷணமாகம். “அர்ச்ச்யஸ் ஸர்வஸஹிஷ்ணுரர்ச்சகபராதீநாகிலாத்மஸ்திதி: ப்ரீணீஷே ஹ்ருதயாளுபிஸ் தவ ததச் சீலாஜ் ஜடீபூயதே.” (ஸ்ரீரங்கராஜஸ்தவம்) என்கிறபடியே சீலுகுணத்திற்கு எல்லை நிலமான அர்ச்சாவதார நிலைமைகளில் ஈடுபட்டு, பித்தரென்றே பலருமேசும்படியான நிலைமையை யடைந்து ஒவ்வொரு திவ்யதேசத்து எம்பெருமான்களின் திருநாமங்களயும் வாயாரச் சொல்லி ஸம்பிரமித்துக் கூத்தாடுமவர்கள நித்யாநுபவரரான நித்யஸூரிகளுக்கும் கௌரவிக்க வுரியவர்கள் என்றதாயிற்று.

பேர்பல சொல்லிப்பிதற்றி =புகழுநல் லொருவனென்கிற கீழ்த்திருவாய்மொழியில் எம்பெருமானுடைய ஸ்வரூபரூபகுணா விபூதிகள் விஷயமாகத் தாம் பேசின பாசுரங்களெல்லாம் வகைவகையாக ஒவ்வொருபக்தர்களின் வாயிலும் வெளிவர வேண்டுமென்பது கருத்து.

பித்தரென்றே பிறர்கூற “பேயரேயெனக்கு யாவரும் யானமோர் பேயனே” என்ற குலசேகராழ்வார் பாசுரமும், “அத்தா அரியே யென்றுன்னை யழைக்கப் பித்தாவென்ற பேசுகின்றார் பிறரென்னை” என்ற திருமங்கை யாழ்வார் பாசுரமும் இங்குக் காணத்தக்கன. “பித்தரென்றே பிறர்கூற” என்று இதை ஒரு விஷயமாக அருளிச் செய்யவேணுமோ வென்னில், ஸ்ரீவைஷ்ணவராயிருப்பவர்கள் வசைகூறிக் கைவிடுவதே மிகவும் உத்தேச்யமென்பது பெரியோர்களின் கொள்கை. வைஷ்ணவர்களுடைய விஷயீகாரத்தினும் அவைஷ்ணவர்கள் இகழுகையே புருஷார்த்தமென்று கருத்து” என்றார் நஞ்சியரும் ஒன்பதினாயிரப்படியில். ஸ்ரீவிபீஷணாழ்வான் ஸ்ரீராமகோஷ்டிணில் தனக்கு விஷயீகாரம கிடைக்காமற் போனாலும் அரக்கர் திரளில் தனக்குத் திரஸ்காரம் கிடைத்ததே பரமபாக்யம் என்று நினைக்கும் படியாயிருந்தது.

மிளகாழ்வான் விஷயமான ஒரு இதிஹாஸம் இங்கு ஈட்டில் காட்டப்பட்டுள்ளது; அதாவது - அரசன் பலபேர்களுக்கு க்ராமபூமிகள் தானம் செய்வதாக மிளகாழ்வான் கேள்விப்பட்டுத் தாமும் தானமபெறச் சென்றாராம். உமக்குத் தானம் கொடுப்பதில்லை யென்ற அரசன் சொல்ல, அதுகேட்ட மிளகாழ்வான் “ப்ரபுவே! எனக்கு மாத்திரங் கொடுக்க முடியாதென்கைக்குக் காரணமென்ன? வேதமோ சாஸ்த்ரமோ என்றாராம். அதுகேட்ட அரசன் “உமக்கு அந்த யோக்யதைகள் இல்லையென்று நான் சொல்லவில்லை” என்றானாம். ‘ஆகில் ஏன் தானம் செய்யமாட்டேனென்கிறாய்?’ என்று மிளகாழ்வான் கேட்க, “நீர் ஸ்ரீவைஷ்ணவாமையாலே உமக்குக் கொடுக்க நான் விரும்புகின்றிலேன்” என்று அரசன் சொல்ல, உடனே மிளகாழ்வான் பரமானந்தமடைந்து கூத்தாடினாராம். வைஷ்ணவத்வம் ஹேதுவாக அந்த அவைஷ்ணவன் கைவிட்டதுதானே தமக்குப் பரமபுருஷார்த்தமாயிருந்ததாகக் கருதினராம்.

ஊர் புகலபுக்கும் புகாதும் = ‘குனிப்பார்’ என்பதிலே இதற்கு அந்வயம். பல மனிதர்களின் எதிரிலும்; ஒருவருமில்லாத விடத்திலும் களித்துக் கூத்தாடுமவர்கள் என்றபடி. பல மனிதர்களின் எதிரில் ஆடுவது எதற்காகவென்னில்; அவர்கள் கண்டு சிரிக்கவேணுமாம்; அந்தச் சிரிப்பே தாளமாகக் கூத்தாடவேணுமாம். அவர்கள் சிரிக்கச் சிரிக்க இவர்களுடைய ஸஸம்ப்ரமந்ருத்தம் மீதூர்ந்து நடைபெறுமென்க. “ஆர்வம் பெருகி” என்பதனாலும் இது ஸூசிதமாகும்.

அமரர் தொழப்பஈடுவார் = அமரர்களால் தொழப்படுவாரென்றபடி; அமரர்களென்றது இங்கு நித்யஸூரிகளை; அவர்களால் தொழப்படுவரென்றது - அவர்களிற் காட்டில் மிகவும் சிறந்தவர்களென்று கூறும் ஸ்தானத்தில் வந்தது. பிரதிபந்தகங்கள் பல பல நிறைந்த இவ்வுலகிலிருந்து கொண்டு பகவதநுபவம் செய்யுமவர்கள் பிரதிபந்தகம் யாதுமில்லாத நிலத்தில் அநுபவிக்கின்றவர்களிற்காட்டில் சிறந்தவர்களென்பதில் ஸந்தேஹமில்லையன்றோ. “விண்ணுளாரிலுஞ் சீரியரே” என்ற திருவித்தமும் காண்க.

English Translation

Our Lord resides in Venkatam of cool water springs.  Rave his name incessantly, be called a mad man, room through towns and hamlets, let the world mock at you, Jump and dance in ecstacy, be worshipped by the celestials.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain