nalaeram_logo.jpg
(3171)

நீர்மை நூற்றுவர் வீய ஐவர்க் கருள்¦ சய்து நின்று,

பார்மல்கு சேனை அவித்த பரஞ்சுட ரைநினைந் தாடி.

நீர்மல்கு கண்ணின ராகி நெஞ்சம் குழைந்துநை யாதே,

ஊர்மல்கி மோடு பருப்பார் உத்தமர்க்கட் கென்செய் வாரே?

பதவுரை

நீர்மை இல்

-

ஈர நெஞ்சு இல்லாதவர்களான

நூற்றுவர்

-

துரியோதனன் முதலிய நூறு பேரும்

வீய

-

மாளும்படியாக,

ஐவர்க்கு

-

பஞ்சபாண்டவர்களுக்“கு

அருள் செய்து நின்று

-

கிருபை பண்ணி

பார்மல்குசேனை அவிந்த

-

பூபாரமாயிருந்த சேனைகளைத் தொலைத்தருளின

பரம் சுடரை

-

பரஞ்சோதியான பெருமானை

நினைந்து

-

தியானம் பண்ணி

ஆடி

-

கூத்தாடி

நீல் மல்கு கண்ணினர் ஆகி

-

ஆனந்தக் கண்ணீர் நிறைந்த கண்களையுடையவராகி

நெஞ்சம் குழைந்து நையாதே

-

நெஞ்சுருகி நையாமல்

ஊன் மல்கி

-

உடல் தடித்த

மோடு பருப்பார்

-

வயிறு பருப்பவர்கள்

உத்தமர்கட்கு பாகவதோத்தமர்களுக்கு

என் செய்வார்

-

யாது செய்வார்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  அடியவர்களான பாண்டவர்களின் விரோதிகளைப்போக்கின எம்பெருமானுடைய திருக்குணங்களை அநுஸந்தித்து ஈடுபடமாட்டார்கள் *பெற்றதாய் வயிற்றினைப் பெருநோய் செய்யவே பிறந்தவர்களென்கிறாரிப்பாட்டில். கண்ணபிரான் முந்துற முன்னம் ஸஞ்ஜயனை யனுப்பிப் பின்பு தான் நேரிற்சென்று பாண்டவர்களையும் கௌரவர்களையும் சேரவிடலாமோ என்று பார்த்தவிடத்து, அந்த நூற்றுபவர் ஒருபடியாலும் இசையாதே ‘எங்கள் உறவினரும் ஜீவித்து நாங்களும் ஜீவிப்பதென்பதில்லை; அவர்களுக்கு ஒரு குடியிருப்பும் கொடுக்கமாட்டோம்; நாங்கள் பலராகையாலே பூமிப்பரப்படங்கலும் எங்களுக்கே இடம்பொருமத்தனை; அவர்களுக்கு க்ருஷ்ணனும் தருமம் உண்டு; அதற்குப் பலனான ஸ்வர்க்கத்தை அவர்கள் அநுபவிக்கக்கடவர்கள்; நாங்கள் பூமியை ஆள்வோம்’ என்று வெட்டொன்று துண்டிரண்டாக வார்த்தை சொல்ல, ஒருபடியாலும் அவர்கள் இசையக் காணாமையாலே இனி இவர்களைத் தொலைப்பது தவிர வேறு வழியில்லை யென்றுகொண்டு நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள்செய்து நின்றான் கண்ணபிரான்; அது இங்கு முதலடியிற் கூறப்பட்டது.

“பந்துக்களும் ஜீவித்து நாங்களும் ஜீவிப்பதென்பது கிடையாது” என்று நூற்றுவர் சொல்லவே அதுவே காரணமாக அவர்கள் நிக்ரஹத்திற்கு இலக்காயினர்; பாண்டவர்களோ வென்னில் “பந்துக்கள் ஜீவித்தாலொழிய நாங்கள் ஜீவிக்கமாட்டோம்” என்று சொன்னவர்களாதலால் அதுவே காரணமாக அவர்கள் அநுக்ரஹத்திற்கு இலக்காயினர் என்றுணர்க.

பார்மல்கு சேனை அவித்த = பூமிக்கு ஸர்வம்ஸஹா என்று பெயர் இருந்தாலும் புண்யாத்மாக்கள் எத்தனை கோடிக்கக்காக இருந்தாலும் அவர்களையெல்லாம் தாங்குவது பஞ்சுச் சுருளையைத் தாங்குவது போன்றிருக்கும்; பாபிகளைத் தாங்குவது இரும்பு மூட்டைகளைத் தாங்குவது போன்றிருக்கும் என்று நூல்கள் கூறுதலால் துரியோதனாதியர் பூமிக்குப் பெரும்பொறையாக இருக்கவே அவர்களைத் தொலைத்துப் பூமிக்கு உதவி செய்தமை இங்கு அறியத்தக்கது.

(பரஞ்சுடரை) ஆச்ரிதவிரோதிகளைத் தொலைத்ததனால் திருமேனி புகர்பெற்று விளங்கினபடி. அல்லது, *பற்றலர்வீயக் கோல்கையில் கொண்டு பார்த்தன்றனர் தேர்முன் நின்ற காலத்து ஸாரத்ய வேஷத்தின் வைலக்ஷண்யத்தில் திருவுள்ளஞ்சென்று பரஞ்சுடரை என்றாரென்னவுமாம். முமுக்ஷுப்படியில் சரமச்லோகத்திலுள்ள மாம் என்ற பதத்தை வியாக்கியானித்தருளுமிடத்து- “கையுமுழவுகோலும் பிடித்த சிறுவாய்க்கயிறும் ஸேநாதூளி தூஸரிதமான திருக்குழலும் தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற ஸாரத்ய வேஷத்தை மா மென்று காட்டுகிறான்” என்றருளிய ஸ்ரீஸூக்தி இங்கே அநுஸந்தேயம்.

ஆக இப்படிப்பட்ட எம்பெருமானை நினைப்பதாவது “இவனுடைய ஆச்ரித பாதந்த்ரியம் இருந்தவாறு என்னே!” என்று நெஞ்சுளுத்துக் கிடப்பதாம். அங்ஙனம் அநுஸந்தித்தவாறே உடல் இருந்தவிடத்தே யிருக்கமாட்டாமல் ஆடும்; கண்களினின்று நீர் வெள்ளமிடும்; நெஞ்சு குழைந்து நையும், இங்ஙனமாகாமெமாம்ஸ ப்ரவதமென்னும்படி சரீரத்தைப் பருக்கடித்துத் திரியுமவர்கள் அந்த வுடல் கொண்டு லோகோபகாரம் என்ன செய்யப்புகுகிறார்கள்!

உத்தமர்கட்கு என் செய்வாரே? - எப்போதும் பகவத் குணங்களை அநுஸந்தித்துக்கொண்டு வார்ந்து வடிந்த சரீரங்களையுடைய ஸ்ரீவøஷ்ணவர்களுக்கு பகவத்குணாநுபவத்திலே உசரத் துணையாயிருக்கப் போகிறார்களோ? = “மச்சித்தா மத்கதப்ராணா: போதயந்த, பரஸ்பரம்” என்று கீதையிற் சொன்னபடி ஒருவர்க்கொருவர் உசாவிப் போதுபோக்குவதன்றோ பிறவிக்குப்பயன்; அந்தப் பயனைப் பெறமாட்டாத பாவிகளாவதே! என்று வெறுத்துரைக்கிறபடி. இங்கே நம்பிள்ளையீடு:- ‘ஜன்மத்துக்குப்ரயோஜநம் வைஷ்ணவர்களுக்கு உறுப்பாமதுவேயென்றிருக்கிறார்; ஈச்வரன் தன்னையும் தன் விபூதியையும் ததீய சேஷமாக்கியிறே வைப்பது” என்பதாம்.

இங்கே ஒரு இதிஹாஸமும் அருளிச் செய்யப்படுகிறது. அதாவது- கூரத் தாழ்வானும் பெரிய நம்பியும் சோழராஜஸபைக்கு எழுந்தருளி “சிவாத்பரதரம் நாஸ்தி” என்றதற்கு “த்ரோண மஸ்தி ததாபரம்”என்று கையெழுத்திட்டபோது பெரிய நம்பிக்கு ப்ராணாந்தமான ஆபத்து நேர்ந்தது. அப்போது சிலர் ‘அநாதப்ரேத ஸம்ஸ்காரம் பண்ணப் பெற்றால் மிக்கஸுக்ருத முண்டு” என்ற கேள்வியறிவினால் பெரிய நம்பிக்கு ஸம்ஸ்காரம் செய்து ஸுக்ருதம் பெறலாமென்றெண்ணி அவ்விடத்தேவந்து பார்கையில், ஆங்கு ஆழ்வான் எழுந்தருளியிருப்பது கண்டு தங்களுக்கு அங்குக் காரியமொன்று மில்லாமையுணர்ந்து திரும்புப் போகையில், ஒருவரையும் ஒரு குறைசொல்லியறியாத கூரத்தாழ்வான் அவர்களை நோக்கி இங்ஙனே கூறினராம்- “பயல்களே! வைஷ்ணவனுமாய் ஒருவனுமில்லாதா னொருவனைத் தேடி ஸம்ஸ்காரம் பண்ணப்  பார்க்கறீர்களோ நீங்கள்? ஈச்வரனும் ஈஸ்வரவிபூதியும் வைஷ்ணவனுக்குக் கிஞ்சித்கரிக்கவிருக்க, வைஷ்ணவனுமாய் ஒருவனுமில்லாதானுமாயிருப் பானொருவனை எங்ஙனே தேடிப்பெறுவீர்கள்?” என்றாராம்.

இந்த இதிஹாஸம் இங்கு எதற்காக அருளிச் செய்யப்பட்ட தென்னில்; உத்தமர்கட்கு என்செய்வாரே என்ற விடத்திற்கு வியாக்கியான மருளிச்செய்யா நின்ற நம்பிள்ளை “ஈச்வரன் தன்னையும் தன்விபூதியையும் ததீய சேஷமாக்கியிறே வைப்பது” என்றருளிச் செய்தார்; அவ்வர்த்ததிற்கு ஆப்தஸம்வாதமாக ஆழ்வானுடைய வார்த்தையை உதாஹரிக்கவேண்டி இந்த ஐதிஹ்யத்தையருளிச் செய்தாரென்க. “ஈச்வரன் தன்னையும் தன்விபூதயையும் ததீய சேஷமாக்கி வைக்கிறான்” என்கறி இதனை யருளிச்செய்யத்தான் மூலத்தில் என்ன ப்ரஸக்தியுள்ளதெனில்: “ஊன்மல்கி மோடுபரப்பார் உத்தமர்கட்கு எந்செய்வாரே” என்றதில் தொனிக்கும்பொருள் அது. உத்தமர்கட்கு எம்பெருமானே தானும் தன் விபூதியுமாயக் கிஞ்சித்கரிக்க ஸஜ்ஜனாயிருக்க, சிவபாபிகள் அந்த பாக்யமிழந்தார்களாவதே! என்ற அநுதாபத்தின்மேல் அது வக்தவ்யமாயிற்று.

English Translation

The radiant Lord unleashed a terrible army over the unfair hundred and granted victory to the five.  Of what use are men in the good world who built up their biceps if they do not melt their hearts, dance and sing and in joy?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain