nalaeram_logo.jpg
(3170)

மனிசரும் மற்றும் முற்றுமாய் மாயப் பிறவி பிறந்த,

தனியன் பிறப்பிலி தன்னைத் தடங்கடல் சேர்ந்த பிரானை,

கனியைக் கரும்பினின் சாற்றைக் கட்டியைத் தேனை அமுதை,

முனிவின்றி ஏத்திக் குனிப்பார் முழுதுணர் நீர்மையி னாரே.

பதவுரை

மனிசரும்

-

மநுஷ்ய யோநியாயும்

மற்றும்

-

தேவயோநியாயும்

முற்றும் ஆய்

-

மற்றுமுள்ள ஸகல யோநியாயும்

மாயம் பிறவி பிறந்த

-

ஆச்சரியமான பிறவிகளில் பறிந்தருளின

தனியன்

-

ஒப்பற்றவாய்

பிறப்பு இலிதன்னை

-

கருமமடியான பிறப்பு இல்லாதவனாய்

தடம் கடல் சேர்ந்த பிரானை

-

விசாலமான திருப்பாற்கடலில் கண் வளர்ந்தருளும் பெருமானாய்

கனியை

-

கனிபோன்றவனாய்

இன் கரும்பின் சாற்றை

-

மதுரமான கருப்பஞ்சாறு போன்றவனாய்

கட்டியை

-

கற்கண்டுபோன்றவனாய்

தேனை

-

தேன்போன்றவனாய்

அமுதை

-

அமிருதம் போன்றவனான எம்பெருமானை

முனிவு இன்றி

-

வெறுப்பு இல்லாமல் மிக்க உவப்புடனே

ஏத்தி

-

துதித்து

குனிப்பார்

-

நர்த்தனம் செய்பவர்கள்

முழுது உணர் நீர்மையினால்

-

ஸர்வஜ்ஞர்களெனக் கொண்டாடத் தக்கவர்கள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  மநுஷ்யாதி ரூபேண வந்து திருவவதாரம் பண்ணியருளின எம்பெருமானுடைய  பரமபோக்யதையை அநுஸந்தித்துப் பரவசராயிருக்குமவர்கள் தாம் எல்லா அறிவின் பலனும் கைவந்திருக்குவமர்களென்கிறாரிப்பாட்டில். மநுஷ்யரும் மற்ற தேவஜாதியும் அல்லாத திர்யக் ஜாதியுமெல்லாமாய்க் கொண்டு ஆச்சர்யமான அவதாரங்களைப் பண்ணி, எல்லாரோடும் ஸஜாதீயனாயிருக்கச் செய்தே மிகவும் விலக்ஷணனான அத்விதீயனாய், அந்த வைலக்ஷண்யத்திற்கு ஹேதுவான கர்மாதீந ஜந்மராஹித்யத்தையுடையனாய், அவதாரார்த்தமாக விசாலமான திருப்பாற் கடலிலே கண்வளர்ந்தருளுமவனாய், கோதற்ற இனிய கருப்பஞ்சாறும் கற்கண்டும் தேனும் அமுதும்போலே போக்யதைதானே வடிவெடுத்தவனான எம்பெருமானை உகந்து துதித்துக் கூத்தாடுமவர்கள் ஸகல சாஸ்திரங்களின் ஸாரப் பொருள்களையும் அறிந்தவர்களென்று கொண்டாடுதற்குரியர் என்றதாயிற்று.

இரண்டாமடியில் பிறப்பிலிதன்னை என்றிருப்பது முதலடிக்கு விருத்தமாயிருக்கின்றதே! என்று சிலர் சங்கிக்கக்கூடும்; பிறக்கின்றானென்று சொல்லிக்கொண்டே பிறப்பிலியென்கைக்குக் கருத்து யாதெனில்;- நாமெல்லாம் கருமாடியாகப் பிறப்பதுபோலேபிறவாதவன், தன்னுடைய அநுக்ரஹமே காரணமாகப் பிறப்பவனேயன்றி கருமமடியாகப் பிறவாதவன் என்கை. (அன்றியே) “எந்நின்ற யோனியுமாய்ப்பிறந்தாய் இமையோர் தலைவா” என்கிறபடியே நமக்காகப் பல பல பிறவிகளெடுத்தும் பரிச்ரமங்கள்பட்டும் நம்மிடத்துள்ள வ்யாமோஹாதிசயத்தினால் இவர்களுக்கு நாம் ஒன்றுஞ் செய்யவில்லையே, நாம் ஒரு பிறவியும் பிறக்கவில்லையே’ என்று நினைப்பவனாகையாலே அப்படிப்பட்ட அவன் கருத்தாலே பிறப்பிலியென்றதாகவுமாம்.

தனியன் என்பதற்கு ஈட்டியருளிச் செய்யும்பொருள் பரமபோக்யம்; அவ்விடத்து ஸ்ரீஸூக்தி காண்மின்;- (தனியன்) இப்படி யவதரித்தால் போமன்று உடுத்த வொலியலோடேயாயிற்று போவது. இவ்வவதார பரம்பரைகளில் ராமாவதாரமென்றிலும் நாலிரண்டுபேர் கூடப் போனார்களென்று கேட்டோமித்தனை. இவன் நமக்குகாகப் பிறந்தானென்று நினைக்கைக்கும் ஒருவருமில்லாதிருக்கிறதிறே; பிறந்தானென்று அது தன்னையே குற்றமாக உபபாதிப்பாரெயிறேயுள்ளது” என்பதாம். - எத்தனை அவதாரங்களெடுத்தும் என்ன சேஷ்டிதங்கள் செய்தும் தன் பாலீடுபட்டுத் தன்னோடு இணங்குவாரில்லாமே தான் தனியாயே நிற்பவன் என்று நாற்பரிய மருளினாராயிற்று.

தடங்கள் சேர்ந்த பிரானை = என்பதற்கு ஈடு- “இவர்கள் பிறவியென்னும் பெருங்கடலைப் போக்குகைக்கிறே அவன் கடலிலே வந்து கிடக்கிறது.”

முனிவு இன்றி = பகவன் குணங்களைக் கேட்டால் பொறாமைப்படுவார் பலருண்டு; “கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப்பெற்றான் காடுவாழ் சாதியுமாகப் பெற்றான்; பற்றியுரலிடையாப்புமூண்டான் பாவிகளுங்களுக் கேச்சுக்öகோலோ” என்று ஆண்டானருளிச் செய்கிறபடி சிசுபாலன் பிறந்த லக்னத்திலே பிறவாமம் என்றபடி. ‘முனிவின்னி’ என்பதற்கு முநித்வமில்லாமல் என்றும் பொருள்  பணிப்பர். முநித்வமாவது மாநநசீலத் பர்யாயமாகையாலே ஒரு வகையான அங்க சேஷ்டையும் செய்யாதிருத்தலைச் சொன்னபடியாகும். அது இன்றி என்றது- அங்க சேஷ்டைகளைச் செய்துகொண்டு என்றவாறு, ஜ்நாநதிக்யத்திற்குப் பலன் பகவத் குணங்களிலீடுபட்டு ஸம்ப்ரமிப்பதேயாம் என்பதை முழுதுணர்நீர்மையினாரே என்பதனால் காட்டினர். ஸகல சாஸ்த்ரங்களையும் கற்றவர்களாயிருந்தாலும் பகவத் குணாநுபவத்தில் விகாமடையாõதிருந்தார்களாகில் அவர்களே அஜ்ஞர்கள். ஒரு சாஸ்த்ரமும் சுற்றலராயினும் பகவத் குணாநுபவத்தில் மனமொழி மெய்களால் விகாரப்படுவார்களாகில் அவர்களை ஸர்வஜ்ஞர்கள்- என்பது ஆழ்வாருடைய ஸித்தாந்தமென்க.

English Translation

The birth less Lord who took birth reclines in the ocean.  Sweet as fruit and nectar, sweet as sugar and honey and our ambrosia.  He is the living, the non-living and all else.  Those who praise him, with Song and dance, attain total knowledge.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain