nalaeram_logo.jpg
(3165)

மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற,

கைம்மா வுக்கருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,

எம்மா னைச்சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும்துள் ளாதார்,

தம்மால் கருமமென் சொல்லீர் தண்கடல் வட்டத்துள் ளீரே.

பதவுரை

தண் கடல் வட்டத்து உள்ளீர்

-

குளிர்ந்த கடல்சூழ்ந்த பூமண்டலத்திலுள்ளவர்களே!

மொய்

-

நெருங்கின

மா

-

பெரிய

பூ பொழில்

-

பூஞ்சோலைகளையுடைய

பொய்கை

-

தடாகத்தில்

முதலை

-

மதுலையினால்

சிறை பட்டு

-

கவ்வப்பட்டு

கண்ணன் எம்மானை

-

ஸ்ரீக்ருஷ்ணபரமாத்மாவை

சொல்லி பாடி

-

புகழ்ந்து பாடி

எழுந்தும்

-

இருந்தவிடித்திலிராமல் எழுந்தும்

நின்ற

-

கரையேறமாட்டாது வருந்தி நின்ற

கை மாவுக்கு

-

கஜேந்திராழ்வானுக்கு

அருள் செய்த

-

க்ருபைபண்ணின

கார் முகில் போல் வண்ணன்

-

காளமேக சியாமளனான

பறந்தும்

-

பூமியில் கால் பாவாதபடி அலைந்தும்

துள்ளாதார் தம்மால்

-

களித்துக் கூத்தாடாதவர்களால்

என் கருமம்

-

என்ன பயன்?

சொல்லீர்

-

சொல்லுங்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  ஸ்ரீகஜேந்திராழ்வானை ரக்ஷித்தருளின எம்பெருமானுடைய இந்த ஆச்ரித வாத்ஸல்யத்தை யநுஸந்தித்தும் விகாரமடையாதிருப்பாருடைய பிறப்பு வீண் என்கிறார்.

மஹாவிஷ்ணு பக்தனான கஜேந்திரன் அர்ச்சனைக்காகப் பூப்பறிக்க ஒரு பெரிய பொய்கையிற்சென்றிழிந்ததும் அங்க முதலையின்வாயில் அகப்பட்டு வருந்தியதும், பிறகு ‘ஆதிமூலமே!’ என்று கூவியழைக்க, உடனே திருமால் கருடாரூடனாய் அங்கு எழுந்தருளித் தனது சக்கராயுதத்தைப் பிரயோகித்து முதலையைத் துணித்து யானையை அதன்வாயினின்று விடுவித்து இறுதியில் அதற்கு முத்தியளித்ததும் ப்ரஸித்தம்.

கஜேந்திராழ்வான் தானியிருக்கின்றவனத்திலே நெடுநாள் மழைபொழியாமையால் தாமரைக்குளங்களெல்லாம் வறண்டமைபற்றி எங்குந்தாமரைமலர் கிடைக்கப்பெறாமல் சிலநாளாக அர்ச்சனை தவிர்ந்து அதனாலாகிய வருத்தத்தினால்உயவு கொள்ளாமல் பட்டினிகிடந்து ஏங்கி மலர்தோடுகின்றபோது தெய்விகமாக ஒரு நறுமணத்தை மோப்பஞ்செய்து அதனையே பிடித்துக்கொண்டு அதுவந்த வழியால் விரைந்து செல்லுகையில் ஒருமலையின்மீது திவ்யமான ஒரு சோலையையும் அதன் நடுவே ரமணீயமான ஒரு தடாகத்தையும் கண்டு அதில் நிறைந்திருக்கின்ற தாமரை மலர்களைப் பார்த்ததனால் மிகமகிழ்ந்து அவற்றினிடத்திற்கொண்ட ஆதராதிசயத்தினால் அம்மடுவின் முதலையிருப்பதைப்பாராமலே விரைந்திறங்கி மலர் கொய்வதாயிற்றென்பது விளங்க “மொய்ம்மாம்பூம் பொழிற்பொய்கை முதலைச்சிறைபட்டு நின்றகைம்மா” என்றார்.

அருள்செய்த= “பெணஙணுலாஞ்சடையினாலும் பிரமனு முன்னைக்காண்பான் எண்ணிலாவூழியூழித் தவஞ்செய்தார் வெள்கிநிற்ப, விண்ணுளார் வியப்பவந்து ஆனைக்கு அன்றருளையீந்த” என்று (திருமாலையில்) தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிய பாசுரங்காண்க. ஆழ்வான் ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில் * ஆஜக்முஷஸ் தவ கஜோத்தமப்பரும்ஹிதேந பாதம் பராமம்ருசுஷோபி ச கா மநீஷா?” என்றார். அதாவது - கஜேன்திராழ்வானுடைய கூக்குரல் செவிப்பட்டவாறே பதறிப் பொய்கைக்கரைக்கு வந்ததுமன்றி, முதலைவாய்ப்பட்டுப் புண்பட்ட அதன் காலைத் திருக்கைகளினால் தடவி உபசாரங்கள் செய்தபடியும் கூறப்பட்டதாயிற்று; இதுவே கைம்மாவுக்குச் செய்த கனத்த அருள்.

இங்ஙனே எம்பெருமானுடைய பேரருள் பொலிவுபெறும் இந்தச்சரித்திரத்தை அநுஸந்தித்தால் மனமொழிமெய்கள் விகாரப்படாதிருக்கவொண்ணுமோ? எம்மானைச் சொல்லிப் பாடியெழுந்தும் பறந்தும் துள்ளவேண்டும்படியாகுமே; அங்ஙனம் ஆகபெறாதவர்கள் இவ்வுலகில் ஜனிப்பதனாலும் இருப்பதனாலும் என்ன பலன்?.

இங்கே நம்பிள்ளையீடு;- “பட்டர் இவ்விடத்தை அருளிச்செய்யா நிற்கச் செய்தே ‘அவன் நூறாயிரஞ் செய்தாலும் விக்ருதராகமைக்கு நாமேவேணும், நமக்கொரு ஆபத்து உண்டானால் இருந்தவிடத்திலே இருக்கமாட்டாதே விக்ருதனாகைக்கும் அவனேவேணும்’ என்றருளிச்செய்தார்” என்பதாம். எம்பெருமானைப்போன்ற பரமதயாளு இல்லை; அவனது தயையில் ஈடுபடமாட்டாத நம்மைப்போன்ற வன்னெஞ்சருமில்லை என்றபடி.

English Translation

Pray tell, O People of the ocean-girdled Earth!  What good are they who cannot sing and dance in joy, the glories of the dark hued Lord who saved the elephant from the jaws of the crocodile in the lotus tank?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain