nalaeram_logo.jpg
(3163)

யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயந் தோறும்,

தோய்விலன் புல னைந் துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி,

ஆவிசேர் உயிரின் உள்ளால் அதுமோர் பற்றி லாத,

பாவனை அதனைக் கூடில் அவனையும் கூட லாமே.

பதவுரை

உணர்வின் மூர்த்தி

-

ஞானஸ்வரூபமாக இருக்கின்ற எம்பெருமான்

பாவையும்

-

எல்லா அசேதனப்பொருள்களும்

யவரும்

-

எல்லாச் சேதனர்களும்

தான் ஆய்

-

தாயேயாகியும் (சேதநாசேதநங்களில் அந்தராத்மாவாகத்தான் பிரவேசித்திருந்தும்)

அவர் அவர் சமயம் தோறும்

-

அந்தந்தச் சேதனர்கட்கு உரியனவான (சுகம் துக்கம் முதலிய நிலைமைகளில்)

தோய்வு இலன்

-

(அவர்களைப் போலத் தனக்கு) யாதொரு கலப்பும் இல்லாதவன்

புலன் ஐந்துக்கும் சொலப்படான்

-

பஞ்சேந்திரியங்களின் அறிவுக்கும் விஷயமாகச் சொல்லப்படாதவன்! (ஐம்புலன்களாலறியப்படாதவனென்றபடி.) (ஆன்மாக்களுக்கு உள்ளேயிருந்தும் அவைகளுடைய சுகதுக்கங்கள் எம்பெருமானைச்சேர மாட்டா என்றது எவ்வாறு பொருந்துமெனின்.)

ஆவி சேர் உயிரின் உள்

-

உடம்பைப் பொருந்திய ஆத்õமவினுடைய ஸ்வரூபத்தில்

ஆதும்

-

(சரீரத்தைச் சார்ந்த இளமை முதலிய தன்மைகள்) எதிலும்

ஓர் பற்று இலராத

-

ஒரு ஸம்பந்தமும் இல்லையென்கிற

பாவனை

-

எண்ணமானது

அதனை கூடில்

-

அந்த ஆத்மாவுக்குத் தகுமென்று தோன்றினால்

அவனையும்

-

அந்த எம்பெருமானுக்கும் (சேதநர்களின் சுக துக்கங்கள் சிறிதும் சேரா என்கிற இதுவும்)

கூடல் ஆம்

-

தகும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  உடலுக்கு உள்ளேயிருக்கிற உயிர்கட்கு அந்த உடலைச்சார்ந்த இளமை நரை திரை முதலிய வேறுபாடுகள் தட்டுவதில்லையென்ற எண்ணம் மனதிற்படுமாயின், எம்பெருமான் சேதநா சேதனங்களோடு கலந்திருந்தாலும் அவற்றின் சுகம் துக்கம் முதலிய நிலைமைகள் அவ்வெம்பெருமானுக்குத் தட்டாவென்பதும் நன்கு விளங்குமென்பது இப்பாசுரத்தின் தாற்பரியமாகும். ஆத்மாக்களுக்கு உடம்பைச் சேர்ந்த இளைப்பு பருமை முதலியன கூடாவிட்டாலும் அவ்வுடம்பைச் சார்ந்த சுக துக்கங்கள் தோன்றுவதுபோல, ஸர்வேச்வரன் சேதநாசேதநங்களின் அந்தராத்மாவாய் நிற்கும்போது அசேதநங்களின் பரிணாமம் கூடாவிட்டாலும் ஆத்மாக்களின் சுகதுக்கங்கள் முதலியவை கூடவேண்டாவோவென்னில்:- குற்றவாளியும் சிறைகாணவந்த ராஜகுமாரனும் ஆகிய இருவரும் சிறைச்சாலையில் இருந்தனரேயாயினும் குற்றவாளிமாத்திரம் வருந்திநிற்க, அச்சிறையிலிருத்தலாலாகிற வருத்தம் அரசகுமாரனுக்கு நிகழாதவாறுபோல, ஆத்மாவும் பரமாத்மாவும் உடலிற் புக்கிருந்தனரெயாயினும் ஆத்மா கருமத்தினால் கட்டுப்பட்டுச் சுகதுக்கங்களையனுபவித்து நிற்க எம்பெருமான் தன்னிச்சையினாலே நியமனார்த்தமாகப் புக்கிருப்பதனால் அந்தச் சுக துக்கங்களையநுபவியாமல் நிற்பனென்க.

“யாவையும் யவருந்தானாய்” என்று வந்ததனால் “அவரவர் சமயந்தோறும்” என்றவிடத்தில் “அவையவை சமயந்தோறும்” என்றும் உபலக்ஷணத்தினாற் கொள்க. அவரவரென்ற அடுக்கு  சேதநருடைய பன்னையைப்பற்ற, சமயம்- உரியனவாக ஏற்பட்டுள்ள முறைமை. அவரவர் சமயம் - சேதநர்களின் சுகதுக்கங்கள்; அவையவைசமயம் - அசேதநங்களின் இளைப்பு பருத்தல் முதலிய பரிணாமங்கள். புலன்- புலம்; சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐந்து இந்திரியவுணர்ச்சிகள்:  இச்சொல் இங்கு இலக்கணையால் மெய்வாய்கண் மூக்குச் செவியென்னும் பஞ்சேந்திரியங்களையுணர்த்திற்கு. ‘புலனைந்துக்கும் சொலப்படான்’ என்றவிடத்தில், சொல்லுதல்- அறிதலாய், ஐம்பொறிகளால் அறியமுடியாதவனென்று பொருளுரைப்பினுமாம். ஜந்துக்கு- உருபு மயக்கம்.

பின்னிரண்டடிகட்கு-, ஆவி- உயிரை, சேர்- அடைந்துள்ள, உயிரினுள்- பரமாத்மாவினிடத்தில், ஆதும் ஒர்பற்று இலாத பாவணையதனை- புறம்பே வேறொன்றிலும் சிறிதும் செல்லாத (இடையறாமல் அப்பிரானிடத்தே சொல்லுகின்ற) பக்தியை, கூடில்- அடைந்தால், அவனையும் கூடல் ஆம்- அப்பரமாத்மாவையுங் கூடலாம் என்பதாகவுரைப்பாருமுளர்; உபாயாந்தரங்களிலுண்டான பற்று முழுவதும் விடுதலாகிற ப்ரபத்தியை மேற்கொண்டால் அப்பரமபுருஷனையுங் கூடலாமென்பதால் உரைப்பாருமுளர்; வேறு பொருள் எதிலும் பற்று இல்லாதபாவனையை (அந்திய ஸ்மிதியை)க் கூட்டினால் அவனைக் கூடலாமென்றும் உரைப்பாருளர். எம்பெருமானார் இப்பொருள்களையெல்லாம் தள்ளினர்; இந்தப் பதிகத்தில் எம்பெருமான் சேதநா சேதநங்களில் அந்தராத்மாவாய் நிற்கின்ற தன்மையைக் கூறுவதனால் அதற்கு ஏற்ப, எம் பெருமான் வியாபித்திருக்கிற சேதநாசேதனங்களில் தோஷங்களை அவ்வெம்பெருமானுக்குத் தட்டமாட்டாவென்பதைக் கூறவேண்டுவது முக்கியமானால் முந்திய பொருளே சிறப்புடையதென்பது எம்பெருமானார் திருவுள்ளமாம்.

உள்ளால் = ஆல்- அசை. பாவநா என்ற வடசொல் பாவனையெனத் திரிந்தது ‘பாவனையதனை’ என்றதில் அது - பகுதிப்பொருள் விகுதி.

English Translation

He is beyond the senses, a body of consciousness.  He is the form in all the things and life in all the beings present at all times and all places yet apart from them all, if you can attain detachment, you too can reach him.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain