nalaeram_logo.jpg
(3162)

கண்ணனை மாயன் றன்னைக் கடல்கடைந் தமுதங் கொண்ட,

அண்ணலை அச்சு தன்னை அனந்தனை அனந்தன் தன்மேல்,

நண்ணிநன் குறைகின் றானை ஞாலமுண் டுமிழ்ந்த மாலை,

எண்ணுமா றறிய மாட்டேன், யாவையும் யவரும் தானே.

பதவுரை

கண்ணனை

-

(அடியார்க்கு எளியனான) க்ருஷ்ணனாகத் திருவவதரித்தவனும்

மாயன் தன்னை

-

ஆச்சரியமான குணஞ்செயல்களையுடையவனும்

கடல் கடைந்து

-

பாற்கலைக் கடைந்து

அமுதம் கொண்ட

-

அமிருதத்தையெடுத்து (தேவர்கட்குக்) கொடுத்த

அண்ணலை

-

பெருமையையுடையவனும்

அச்சுதனை

-

(தன்னையடைந்தவரை) ஒருபோதும் நழுவவிடாதவனும்

அனந்தனை

-

அளவிடமுடியாத ஸ்வரூப ரூபகுண விபூதிகளையுடையவனும்

அனந்தன் தன் மேல்

-

திருவனந்தாழ்வான் மீது

நண்ணி

-

பொருந்தி

நன்கு உறைகின்றானை

-

நன்றாகந் வண்வளர்ந்தருள்யவனும்

ஞாலம்

-

பிரபஞ்சத்வத

உண்டு

-

(பிரளயகாலத்தில்) வயிற்றில் வைத்துப் பாதுகாத்து

உமிழ்ந்த

-

(அந்தப் பிரளயம் நீங்கியவுடனேயே) வெளிப்படுத்திய

மாலை

-

வாத்ஸ்ல்ய முடையவனுமான திருமாலை

எண்ணும் ஆறு

-

(இத்தன்மைய னென்று) நினைத்துக் கூறும் வகையை

அறியமாட்டேன்

-

அறிகின்றேனில்லை

யாவையும்

-

எல்லாவகைப்பட்ட அசேதனப் பொருள்களும்

யவரும்

-

எல்லாவகைப்பட்ட சேதனப் பொருள்களும்

தானே

-

அந்த எம்பெருமான் தானேயாவன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  எம்பெருமானுடைய விபூதிகளைத் தனித்தனியே சொல்லிமுடித்தல் முடியாத காரியம்; சுருக்கமாகச் சொல்லில், சேதநப் பொருள்களும் அசேதநப் பொருள்களுமாகிய எல்லாமும் அவனுடைய விபூதிகளேயாம்- என்கிறது இப்பாசுரம்.

பகவத்கீதையில் தனது விபூதிகளை அர்ஜுநனுக்குப் பரக்கச் சொல்லிவந்த ஸ்ரீகிருஷ்ணபகவான் *நாஸ்தி அந்தோ விஸ்தரஸ்ய மே* (எனது விபூதிகளின் பரப்புக்கு ஓரெல்லையில்லை) என்று கூறியதுபோல, இவ்வாழ்வாரும் கீழே எம்பெருமானது விபூதிகளிற் சிலவற்றைக் கூறிவந்து “எண்ணுமாறு அறியமாட்டேன்” என்று இங்குக் கூறுகின்றனரென்க. “கடல்கடைந்து அமுதங்கொண்ட அண்ணல்” என்றதனால் தனது திருவடிகளை விரும்பியடைந்தார்க்கு அன்றி வேறுபயனை வேண்டினார்க்கும் தன்னுடம்பு நோவவும் அவர்கள் வேண்டியபடி நன்மை புரிபவன் எம்பெருமான்- என்பது பெறப்படும்.

நன்கு உறைகின்றானை = நாச்சிமாராலும் எழுப்பவொண்ணாதபடி கண்வளர்ந்தருளுகிறவனை என்றுரைப்பர். அண்ணல்- பெருமை; அதனையுடையவன்; ஆண்பாற் சிறப்புப்பெயர். அனந்தன் என்ற திருநாமம் எம்பெருமானுக்கு வழங்குதல் போலவே ஆதிசேஷனுக்கும் வழங்கும். எம்பெருமானை அனந்தனென்றற்குக் காரணம் இப்பதிகத்தின் அவதாரிகையில் விரித்துரைக்கப்பட்டது காண்க. ஆதிசேஷனை அனந்தனென்பது அடிமைத்தன்மையில் எல்லை நிலையிலிருப்பவன் (எம்பெருமானுக்கு அடிமை செய்வதில் யாவரினும் விஞ்சி நிற்பவன்) என்பது பற்றியென்க.

யாவையும் என்றதனால் அசேதனப் பொருள்களையும் யவரும் என்றதனால் சேதனைப் பொருள்களையும் குறித்தார். உம்மைகள்- முற்றுப்பொருளன. விசேஷணம் விசேஷ்யம் என்ற இரண்டிடத்திலும் வேற்றுமையுருபை விரிப்பது வடமொழி நடை.

English Translation

My Lord is in all things and all beings, and he is beyond understanding.  He is Krishna, Lord who swallowed all and remade all in sport.  He churned ambrosia from the ocean and gave it to the gods.  He is Achyuta, Ananta, Govinda, reclining on a serpent couch.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain