nalaeram_logo.jpg
(3159)

பாலென்கோ நான்குவேதப்பயனென்கோ* சமயநீதி

நூலென்கோ நுடங்குகேள்வியிசை யென்கோ * இவற்றுள்நல்ல

மேலென்கோ வினையின்மிக்க பயனென்கோ * சண்ணனென்கோ

மாலென்கோமாயனென்கோ வானவராதியையே.

பதவுரை

வானவர் ஆதியை

-

தேவாதி தேவனான எம்பெருமானை

பால் என்கோ

-

பால் என்பேனோ?

பயன் நான்கு வேதம் என்கோ

-

(பிரமாணங்களுக்குள்) சிறந்ததான நால்வேதங்களென்பேனோ?

சமயம்

-

வைதிக மதத்தைத் தெரிவிக்கின்ற

நீதி

-

முறைமையையுடைய

நூல் என்கோ

-

(இதிஹாஸ புராணங்களாகிற) சாஸ்திரங்கள் என்பேனோ?

நுடங்கு

-

(கேட்டவர்களை) ஈடுபடுத்துகின்ற

கேள்வி

-

(செவியிற்) கேட்டலையுடைய

இசை என்கோ

-

ஸங்கீதமென்பேனோ?

இவற்றுள்

-

கீழ்ச்சொன்ன வேதம் முதலிய எல்லாவற்றினும்

நல்ல

-

சிறந்த

மேல் என்கோ

-

மேன்மையுடையது என்பேனோ?

வினையின்

-

(செய்கின்ற) முயற்சியைக் காட்டிலும்

மிக்க

-

மிகப்பலமடங்கு மேம்பட்டு விளைகின்ற

பயன் என்கோ

-

பலன் என்பேனோ?

கண்ணன் என்கோ

-

(உனக்கு நான் இருக்கிறேன் நீ அஞ்சவேண்டா என்று சரமச்லோகத்தினால் அபயமளித்த) ஸ்ரீகிருஷ்ணன் என்பேனோ?

மால் என்கோ

-

அடியவர் திறந்து வியாமோஹமுடையவனென்பேனோ?

மாயன் என்கோ

-

ஆச்சரியமான குணசேஷ்டிதங்களை யுடையவனென்பேனோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  வேதம் முதலியனவான இயலும் இசையுமாயுள்ள சப்தராசிகளை எம்பெருமான் தனக்கு விசேஷணமாகப் பெற்றிருக்கின்றபடியைக் கூறுகின்றாரிப்பாட்டில். வேதம் முதலிய தன்னையுணர்த்த, தான் அவற்றால் உணரப்படுபவனாதலால் எம்பெருமானுக்கு வேதம் முதலியன விசேஷணமாகும். கீழப்பாசுரத்திற் கூறி எம்பெருமானது இனிமை பின்னும் தோன்றியதனால் பாலென்கோ என்றார். “கண்ணனென்கோ” என்பதுமுதல் எம்பெருமானது தானான தன்மையையுணர்த்தும்.

“நான்கு வேதப் பயனென்கோ” என்பதை ‘பயன் நான்கு வேதமென்கோ’ என்று கூட்டிப் பொருள்கொள்ள வேணுமென்று ஆசிரியர்களின் கொள்கை; வேதம் முழுவதும் எம்பெருமானது ஆராதனத்தின் தன்மையையும், ஆராதிக்கப்படுகின்ற அந்த எம்பெருமானது தன்மையையுமே உணர்த்துவதாகி வேறொன்றையுணர்த்தாமையால், வேதத்தின் பயன் (ஸாராமன பொருள்) எம்பெருமான்- என்று கூறுதற்கு இடமில்லை; ஆகையால், பயனாகிய நான்கு வேதம் என்று கூட்டி, பிராமணங்களுக்குள் சிறந்ததான நான்கு வேதங்களாலும் பிரதிபாதிக்கப்படுபவன் என்று பொருள் கொள்வது உசிதம்; இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்:-

“(நான்கு வேதப் பயனென்கோ.) நாலுவகைப்பட்ட ப்ரமாணஜாத்தில் ஸாரபூதமான வேதமாகிற ப்ரயோஜனமென்பேனோ? வேதத்திலே வேறேயும் ஓர் அம்சம் ஒருவனை ஸ்துதிக்கிலிறே நான்கு வேதத்தில் பயனென்கோ என்னவேண்டுவது; அங்ஙனன்றியே, வேதந்தான் ஆராதந ஸ்வரூபம் சொல்லுமிடமும் ஆராக்யஸ்வரூபம் சொல்லுமிடமுமாய்க் கட்டடங்க இவனையே சொல்லுகையாலே வேதத்தில் நாலு மூலைக்கும், ப்ரயோஜநமல்லாத விடமில்லை; *வேதைச்ச ஸர்வைரஹமேவ வேத்யா* என்றானிறே”- என்பது. பிராமணங்களுள் வேதம் ஸாரமென்பதற்குக் காரணம்- நித்தியமாய் அபௌருஷேயமாய் (எழுந்தாக்கிளவியாய்), பிரமித்தல் முதலிய குற்றங்கட்கு இடமிலாது நிற்றலாலென்க. இனி, முதலடியில் நான்கு வேதம் என்பதனை மத்திம தீபமாக்கி, நான்கு வேதம் பாலென்கோ- நான்கு வேதங்களிலுமுள்ள சானை முதலிய பிரிவுகள் என்பேனோ? நான்கு வேதம் பயன் என்கோ- நான்கு வேதங்களினாலும் தேர்ந்து அறியப்படும் பொருள் என்பேனோ? என்று உரைப்பொருமுளர்.

வேதப்பொருளில் ஸந்தேஸம் தோன்றிய விடங்களில் பொருளை நிர்ணயிப்பதற்கு உபப்ரும்ஹணமாய் (வேதப்பொருளைப் போஷிப்பதாய்) நிற்றலான இதிஹாஸபுராணங்கள் சமய நீதி நூல் எனப்பட்டன. இனி, சமயம்- கொள்கைகளை நாட்டுவதற்குரிய, நீதி - நியாயங்களை விளக்குவதான, நூல் - மீமாம்ஸா சாஸ்த்ரம் என்றும் உரைப்பார். எல்லாம் சொல்லவேணுமென்று தொடங்கிய ஆழ்வார் பக்தி பாரவச்யத்தினால் மேலே செல்லமாட்டாமையால் ‘இவற்றுள் நல்லமேலென்கோ என்று கூறியொழிந்தார். “இவற்றுள் நல்ல மேலென்கோ” என்பதற்கு- கீழ்க் கூறிய வேதம் முதலியவற்றுக்குள் தோன்றும் சிறந்த போக்கியதை யென்பேனோ? என்று பொருள் கூறுவாருமுளர். கலநெல்லை விதைத்து நூறாயிரங்கலமாக விளைத்துக்கொள்வாரைப்போலே அற்பமுயற்சியினால் பெரும்பயனைக் கொடுத்ததற்கு உரியவன் என்பார் “வினையின் மிக்க பயன்” என்றார்; எம்பெருமான் “மனப்பூர்வமான அன்பு இல்லாமல் போலியன்போடு என்னையடைந்தாரையும் நான் ஒருபோதும் கைவிடேன்” என்று கூறுபவனாதலால் அப்பிரானை இவ்வாறு கூறுதல் ஏற்கும். எம்பெருமான் பிரமன் முதலிய எல்லாத் தேவர்கட்கும் தான் தலைவனாக இருந்தும் அடியவர்க்கு எளியவனாகித் தூது போதல் ஸாரத்யஞ் செய்தல் முதலிய இழிதொழில்கள் செய்தபற்றி மாயன் என்றார்.

English Translation

Shall I call my Krishna, Lord of celestials or wonder-Lord?, or milk or the substance of the Vedas-tour?, or the truth of the scriptures? or music of the upanishads?, or the fruit of great Karmas?, or more than any of these?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain