nalaeram_logo.jpg
(3158)

அச்சுதன் அமலன் என்கோ, அடியவர் வினைகெடுக்கும்,

நச்சுமா மருந்தம் என்கோ நலங்கடல் அமுதம் என்கோ,

அச்சுவைக் கட்டி என்கோ அறுசுவை அடிசில் என்கோ,

நெய்ச்சுவைத் தேறல் என்கோ கனியென்கோ பாலென் கேனோ.

பதவுரை

அச்சுதன்

-

(எம்பெருமானை) அச்சுதன் என்பேனோ?

அமலன் என்கோ

-

அகிலஹேய ப்ரத்யநீகன் என்பேனோ?

அடியவர்

-

தன்னடியார்களது

வினை

-

புண்ணியபாபமென்கிற இருவினைகளையும்

கெடுக்கும்

-

போக்குவதும்

அ சுவை கட்டி என்கோ

-

அந்த அமிருதத்தின் உருசியையுடைய கருப்புக் கட்டி யென்போனோ?

அறு சுவை அடிசில் என்கோ

-

அறுவகைச் சுவையும் நிரம்பிய உணவு என்பேனோ?

நச்சு

-

(இனிமைபற்றி) விரும்பப்படுவதுமான

மா மருந்தம் என்கோ

-

சிறந்த ஔஷதமென்பேனோ

நலம் கடல் அமுதம் என்கோ

-

நல்ல பாற்கடலில் தோன்றிய அம்ருதமென்பேனோ?

நெய் சுவை தேறல் என்கோ

-

நெய்போலுஞ் சுவையையுடைய தேன் என்பேனோ?

கனி என்கோ

-

பழமென்பேனோ?

பால் என்கோனோ

-

பால் என்பேனோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  எம்பெருமான் ரஸம் நிறைந்த பண்டங்களாக இருக்குந்தன்மையை ஆழ்வார் இப்பாட்டில் பாராட்டிக் கூறுகின்றார். “ரஸோவை ஸ: ரஸம்ஹ்யேவாயம் லப்த்வாநந்தீபவதி” என்ற உபநிஷத்து இங்கு ஸ்மரிக்கத்தக்கது.

புண்ணியமும் பாவமும் பிறப்பிற்கே ஹேதுவாகி உயிரைப் பந்தப்படுத்துவதில் பொன்விலங்கும் இரும்பு விலங்கும் போலத் தம்முள் ஒத்திருக்கின்றமையால் அவ்விருவகைவினையும் அடங்க “வினைகெடுக்கும்” என்று பொதுப்படக் கூறினார்.  எம்பெருமான் பரமபதத்தில் இருந்தானேயாகிலும் அடியவர் இடர்ப்பாட்டமாத்திரத்தில் அரைகுலையத் தலைகுலைய ஆனைக்கு அருள்செய்தாப்போல ஓடிவந்து அவர்கள் துன்பத்தைப் போக்குவானென்ற கருத்தும் அடியவர் வினை கெடுக்கும் என்ற விடத்தில் தோன்றும்.உடற்பிணியைத் தீர்க்கும் மருந்தினும் உயிர்ப்பிணியாகிய வினையைத் தீர்க்கும் வேறுபாடு விளங்க ‘வினைகொடுக்கும் மருந்தகம்’ என்றார். கைப்பு முதலிய அருளியையுடைய மருந்திலும் வேறுபாடு விளங்க ‘நச்சுமருந்தம்’ என்றார். மாமருந்தம் என்றது- காற்றுப்பட்ட மாத்திரத்தில் நோய்தீர்க்கவல்லதாய், ஏகமூலிகையாய், ஒருமுறையில்தானே பிணியைப் போக்கவல்லதாய், அபத்தியஞ்செய்தாலும் தீமையை உண்டாக்காததான மஹௌஷதம் என்றபடி. எம்பெருமான் பரம்பரையாகத் தன்னடியாரார்கள் முதலியோர்க்கு அடியவரனாரையும் பாதுகாத்தலும், தன்னையடைந்தார் எதைவேண்டினாலும் தானேயளிப்பவனாதலும், தன்னை ஒருகால் சரணமடைந்தார்க்கும் அபயமளிப்பவனாதலும், தன்னடியவர் அபுத்தி பூர்வமாகச்செய்யும் பாவங்களையெல்லாம் க்ஷமிப்பவனாதலும் காண்க. மாமருத்தம் என்றவிடத்திற்கு வியாக்கியான மருளிச் செய்யுமிடத்து. உலகின் வியாதிகளுக்கெல்லாம் மேல்காற்றுப் பட்டால் அபிவ்ருத்தியாகுமென்பர். அதற்கு எதிர்த்தட்டாயிருக்கும் இந்த மாமருந்து என்ற கருத்தும் உணரத்தக்கது.

நலங்கடமுதம் என்றவிடத்தில் கடல் என்பதை அமுதத்திற்கு இயற்கையடைமொழியாக்கி, கடலைக்கடையாமலே கிடைத்த சிறப்பையுடைய அமிருதம் என்று விசேஷப்பொருளுரைப்பார்.

அறுசுவை- கைப்பு தித்திப்பு புளிப்பு உவர்ப்பு, துவர்ப்பு கார்ப்பு என்பவை. ‘தெய்ச்சுவைத்தேறல்” என்னுமிடத்தில், நெய்- மிகுதியான, சுவை- சுவையையுடைய தேறல் என்றும் , கலை என்பதை நெய் தேறல் என்ற இரண்டிற்கும் அடைமொழியாக்கி, சவையையுடைய  செய் யென்கோ? சுவையையுடைய தேறல் என்றும் பொருளுரைப்பர்.

நச்சுமருந்தம்- வினைத்தொகை. மருந்தம் என்பதில், அகம்- சாரியை.

English Translation

Shall I call him my blameless Achyuta, Great Lord?, or the ocean ambrosia, medicine for devotees ills?, or a candy sweet as, that, or the food of six tastes? or sweet, or honey, or butter, or fruit, or milk?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain