nalaeram_logo.jpg
(3122)

கட்டுரைக்கில் தாமரைநின் கண்பாதம் கையொவ்வா,

கட்டுரைத்த நன் பொன்னுள் திருமேனி ஒளி ஒவ்வாது,

ஒட்டுரைத்திவ் வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்,

பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ.

பரம் சோதி

-

பரஞ்சோதி யுருவனே!,

கட்டுரைக்கில்

-

சொல்லப் புகுந்தால்

நின்கண் பாதம் கை

-

உனது திருக்கண் திருவடி திருக்கைகளுக்கு

தாமரை

-

தாமரைப்பூ

ஒவ்வா

-

உவமையாகப் போராது;

சுட்டு உரைத்த நன் பொன்

-

நெருப்பிலிட்டச் சுட்டு உரை கல்லில் உரைக்கப்படும் மாற்றுயர்ந்த பொன்னானது

உன் திருமேனி ஒளி ஒவ்வாது

-

உனது திவ்யமான விக்ரஹ காந்திக்கு ஒப்பாகமாட்டாது;

இ உலகு

-

இவ்வுலகிலுள்ளோர்

ஒட்டு உரைத்து

-

த்ருஷ்டாந்தம் சொல்லி

உன்னை புகழ்வு எல்லாம்

-

உன்னைத் துதிப்பதெல்லாம்

பெரும்பாலும்

-

மிகவும்

பட்டுரை ஆய்

-

நிரர்த்தக சப்தமாகி

புற்கென்றே காட்டும்

-

அவத்யாவஹமாகவே தலைக்கட்டும்

***- - அழகருடைய வடிவழக்குக்கு ஒப்பாகக் போருவன இல்லாமையாலே அவ்வழகைப்பற்றி உலகத்தார் சொல்லும் துதிமொழிகள் நிறக்கேடாகவே தலைகட்டுமென்கிறார். கட்டுரைக்கில் - வருணிக்கப் புகுந்தால் என்றபடி. அழகை நெஞ்சினாலும் கண்களாலும் ஆர அநுபவிக்க வேண்டுமேயொழிய, உபமானமிட்டு வாய்கொண்டு பேசுவது கூடாது என்பது இதில் தொனிக்கும். திருக்கண் திருவடி திருக்கை முதலிய அவயவங்களுக்குத் தாமரையை உவமையாக் கவிகள் பேசுகின்றார்களெனினும் இது சிறிதும் பொருந்தாத த்ருஷ்டாந்தமே என்பது முதலடியின் கருத்து.

சுட்டுரைத்த நன்பொன் உன் திருமேனியொளி ஒவ்வாது = தேவரீருடைய அப்ராக்ருதமான திருமேனியின் ஸமுதாய சோபைக்கு, சுட்டுரைத்த நல்ல பொன்னை ஒப்பாகச் சொல்லுதலும் பொருந்தாது என்றபடி. நீலமேக ச்யாமளனான எம்பெருமானுக்குப் பொன்னை உவமை கூறுதற்கு ப்ரஸக்தியே யில்லாதிருக்க, அப்ரஸக்த ப்ரதிஷேதம் இங்கு ஏதுக்குப் பண்ணுகிறது என்று சிலர் நினைக்கக்கூடும்; “பொன்னிவர்மேனி” என்றும் “கணபுரத்துப் பொன்மலைபோல் நின்றவன்தன்” என்றும் சொல்லுகிற கணக்கிலே அழகருடைய திருமேனி பொன்னிறமாகவே விளங்குதலால் ப்ரஸக்த ப்ரதிஷேதமே இங்குப் பண்ணுகிறது என்க. * ருக்மாபம்* என்றும் * ஹிரண்மய* புருஷோத்ருச்யதே * என்றுமுள்ள ப்ரமாணங்களைக் கொண்டும், நிர்வஹிப்பர். ஹிரண்யவர்ணையான பிராட்டியின் சேர்க்கையாலுண்டான நிழலீட்டாலே எம்பெருமானும் ஹிரண்மயனாகத் தோற்றுவனென்ப.

எம்பெருமானுடைய திருமேனி நிறத்திற்கும் அவயவ சோபைகளுக்கும் பொருத்தமான உவமானங்கள் உலகில் இல்லாதிருக்கச் செய்தேயும் அவரவர்கள் சிற்சில உவமைகளைக் கூறிப் புகழ்வதானது, ஏதோ நெஞ்சிற்பட்டதைச் சொன்னவளவாய் அவத்யமாகத் தலைகட்டும்தொழிய வேறில்லை என்பன பின்னடிகள்.

பரஞ்சோதி! என்ற விளி இப்பாட்டிற் சொன்ன அர்தத்தை நிலைநாட்டுதற்காம். தாமரை முதலியவற்றை உவமையாகக் கூறுதல் தகாதென்ற தெரிந்தும் இவ்வாழ்வார்தாமும் பிறரும் பலவிடங்களில் தாமரை முதலியவற்றையே உவமை கூறுதல் ஏன்? என்னில் என்செய்வது! வாளா இருக்க முடியவில்லை; எம்பெருமானை வருணித்தே போது போக்க வேண்டியிருக்கிறது. வருணிப்பதென்று வாயெடுத்தால் தாமரை முதலியவற்றைப் பேசியேயாக வேண்டிய வருகிறது. பேசுவதும் அநுதபிப்பதும், அநுதபிப்பதும் பேசுவதுமாயே காலங் கழிக்கலாகிறது. ஆத்ம ஸமர்ப்பண விஷயம்போலே இதுவுமொன்றென்க

English Translation

The lotus flower is no match to your eyes, hands and feet. Burnished gold is no match to your radiant face.  All the praise of all the worlds  heaped on you do but naught to compliment your grace.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain