nalaeram_logo.jpg
(3121)

முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலந்ததுவோ,

அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ,

படிச்சோதி யாடையொடும் பல்கலனாய், நின்பைம்பொன்

கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே. கட்டுரையே.

பதவுரை

திருமாலே

-

ச்ரியாபதியான எம்பெருமானே!

உனது முகம் சோதி

-

உன்னுடைய திருமுகமண்டலத்தின் ஜ்யோதிஸ்ஸானது (உயர்முகமாகவளர்ந்து)

முடிசோதி ஆய்

-

திருவபிஷேக ஜ்யோதிஸ்ஸாய்

மலர்ந்ததுவோ

-

விகஸிதமாயிற்றோ?

அடிசோதி

-

திருவடிகளின் காந்தியானது

நீ நின்ற தாமரை ஆய் அலர்ந்ததுவோ

-

நீ யெழுந்தருளியிருக்கும் ஆஸன பத்மமாய்ப் பரவியதோ?

நின் பைம்பொன் கடி சோதி

-

உனது விசாலமாயும் ஸ்ப்ருஹணீயமாயு மிருக்கின்ற திருவரையின் காந்தியானது

படி சோதி ஆடையொடும் பல் கலன் ஆய்

-

இயற்கையான சோதியையுடைய பீதாம்பரமென்ன, பலவகைப்பட்ட ஆபரணங்களென்ன ஆகிய இவையாய்

கலந்ததுவோ

-

வியாபதித்ததோ?

கட்டுரை

-

தெரியவருளிச் செய்ய வேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருமாலிருஞ்சோலையழகருடைய திவ்ய அவயவங்களுக்கும் திவ்ய பூஷணங்களுக்குமுண்டான மிக்க பொருத்தத்தைக் கண்டு உள்குழைந்து பேசுகிறார். இவ்வடிவழகைக் கண்டவளவிலே தமக்கொரு ஸந்தேஹம் விளைந்தபடியை விண்ணப்பஞ் செய்து-, பிரானே! இந்த ஸந்தேஹந்தீர மறுமாற்றமருளிச் செய்யவேணுமென்கிறார்.

உனது முகச்சோதி முடிச்சோதியாய் மலர்ந்ததுவோ? = திருமுக மண்டலத்தின் காந்திஸமூஹம் மேல்முகமாகக் கிளர்ந்து கிரீட ஜ்யோதிஸ்ஸாக ஆயிற்றோ? என்பது கேள்வி. உண்மையில் திருமுகமண்டலத்திக்குமேல் திருவபிஷேகமென்று தனியே இல்லை; திருமுகச் சோதிதான் மேலே படர்ந்து திருமுடியாகத் தோற்றுகிறது என் கை இங்கு ஆழ்வாருக்கு விவக்ஷிதம். பட்டர் ஸ்ரீ ரங்கராஜஸ்வத்தில் இப்பாசுரத்தின் முதலடியை ஒரு சிறுச்லோகமாக அருளிச் செய்தார்; அதாவது * கிரீடசூடரத்தராஜி: ஆதிராஜ்ய ஜல்பிகா, முகேந்தகாந்திருந்முகம் தரங்கி தேவ ரங்கிண: * என்பதாம்.

திருமுடியில் நின்றும் திருவடியிலே கண்வைத்தார்; அடிச்சேரி தீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ? என்கிறார். ஆஸனபத்மமென்று கீழே தனியே ஒன்று இல்லை; கீழ்நோக்கிக் கிளர்ந்த திருவடியின் தேஜ: புஞ்சமே ஆஸநபத்மமாகத் தென்படுகின்றது என்கை இங்கு விஷக்ஷிதம்.

அர்ச்சவதாரங்களில் எம்பெருமானுடைய திருவடிகளுக்கு ஆதாரமாக ஒரு பத்மபீடம் அமைந்துள்ளது; அதுவே ஆஸந பத்மமெனப்படுகிறது. மேல் நாலாம் பத்தில் “தண்டாமரை சுமக்கும் பாதப்பெருமானை” என்றருளிச் செய்திருப்பதும் இங்கு அநுஸந்தேயம். ஆழ்வான் ஸுந்தரபாஹுஸ்தவத்திலருளிச் செய்த * ஸௌந்தர்ய மார்த்த ஸுகந்த ரஸப்ர வாஹை: ஏதேஹி ஸுந்தரபுஜஸ்ய பதாரவிந்தே: அம்போ ஜடம்ப பரிரம்பணமப்யஜைஷ்டாம் தத்வை பராஜிதமிமே சிரஸா பீபர்த்தி * என்ற ச்லோகமும் நோக்கத்தக்கது.

(படிச்சோதியாடையொடும் இத்யாதி) இங்கு இரண்டுவகையான நிர்வாஹமுண்டு; படிச்சோதி (யானது) பல்கலனாய்க் கலந்ததுவோ? நின்பையம் பொற்கடிச்சோதி ஆடையாய்க் கலந்ததுவோ? என்று இரண்டு கேள்வியாக வைத்து ஒரு நிர்வாஹம். அன்றியே, நின் பைம்பொறிகடிச்சோதி (யானது) படிச்சோதியாடையாயும் பல்கலனாயும் கலந்ததுவோ* என்று ஒரு கேள்வியாகவே வைத்து மற்றொரு நிர்வாஹம். முதல் நிர்வாஹத்தில், படிச்சோதி யென்பது எழுவாயாக நிற்கும்; இரண்டாவது நிர்வாஹத்தில் அது ஆடைக்கு விசேஷணமாக நிற்கும். தேவரீர் தனியே திருவாபரணங்களும் பீதாம்பரமும் சாத்திக்கொண்டிருக்கவில்லை; திருமேனி யொளியும் கடிப்பிர தேசத்தின் ஒளியும் பரவித் திருவாபரணங்களாயும் திவ்ய பீதாம்பரமாயும் புலப்படகின்றவத்தனை - என்ற உத்ப்ரேக்ஷை பின்னடிகட்குத் தேர்ந்த பொருள். பட்டர் ஸ்ரீ ரங்கராஜஸ்தவத்தில் * கடீகாந்தி ஸம்வாசி நீவீலஸத்ரத்நகாஞ்சீ கலாபாது லேபம்* என்றருளிச் செய்தது இப்பின்னடிகளைத் தழுவியே யென்க.

இப்பாட்டில் ஆழ்வார் தமது திருவுள்ளத்தில் தோன்றின ஸம்சயங்களை விண்ணப்பம் செய்தார்; ஸம்சயங்கள் இரண்டு கோடிகளை யுடையனவாயிருக்குமாதலால் ஒவ்வொரு வாக்யத்தையும் திருப்பியும் யோஜித்துக்கொள்ளவேணும். உனது முடிச்சோதி மகச்சோதியாய் மலர்ந்ததுவோ என்பதாகவும் ஆக்கவேணும். இங்ஙனமே மற்ற அடிகளிலுங் கொள்க. இத்தால் பலித்தது என்னென்னில்; ஒவ்வொரழகில் ஈடுபடுங்காலத்தில் அஃதொன்றே சிறந்ததாய்த் தோன்றிநிற்குந்தன்மை தெரிவித்தவாறு. கடி - வடசொல். இடுப்பு.

English Translation

Did the radiance of your face blossom into a radiant crown over you  Did the radiance of your lotus feet blossom into a lotus pedestal below you?  Did the radiance of your golden frame transform itself into the robes and ornaments all over you?  O Tell me, Lord!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain