nalaeram_logo.jpg
(3100)

இதேயானுன்னைக் கொள்வதெஞ்ஞான்றும், என்

மைதோய்சோதி மணிவண்ணவெந்தாய்,

எய்தாநின்கழல் யானெய்த, ஞானக்

கைதா காலக்கழிவுசெய்யேலே.

பதவுரை

என்

-

எனது அநுபவத்திற்கு உரிய

மை தோய் சோதி மணி வண்ணம் எந்தாய்

-

கருமை படிந்த ஒளியையுடைய மாணிக்கம் போன்ற வடிவழகுள்ள ஸ்வாமியே!

யான்

-

நான்

எஞ்ஞான்றும்

-

என்றைக்கும்

உன்னை

-

தேவரீரிடத்தில்

கொள்வது

-

பிரார்த்திப்பது

ஈதே

-

இஃதொன்றேயாகும் (அது யாதெனில்)

எய்தா

-

பெறுதற்காரிதான

நின் கழல்

-

தேவரீருடைய திருவடிகளை

யான் எய்த

-

நான் அடையும்படியாக

ஞானம் கைதா

-

ஞானமாகிய கையை

தா

-

தந்தருளவேணும்

காலம் கழிவு செய்யேல்

-

காலதாமதம் செய்ய வேண்டா.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் திருவடிகள் தம் தலைமேல்வந்து பொருந்தவேணுமென்று கீழ்ப்பாட்டில் வேண்டினார்; ஞானக்கை தந்தருள வேணுமென்று விரும்புகிறாரிப்பாட்டில்.

“அம்மாவடியேன் வேண்டுவதீதே” என்று நிஷ்கர்ஷமாகக் கீழ்ப்பாட்டில் சொன்னவர், மீண்டும் “ஈதேயானுன்னைக் கொள்வது” என்னவேணுமோ? மறுபடியும் ஈதே என்பதனேன்? என்னில் ஒரு வஸ்துவை விரும்பின வொருவரையே பலகால் கேள்விகேட்டால் தடுமாறிப்போவதுமுண்டு அது வேண்டா, மற்றொன்று வேண்டும் என்று சொல்லிவிடுவதுமுண்டு இவ்வாழ்வார் அப்படி நிலைமாறுகிறவரோ என்று பாரிக்ஷிப்பதற்காக எம்பெருமான் ‘ஆழ்வீர்! இதுவும் இன்ன மெதுவும் வேணும்?’ என்றானாம் வேறு எதுவும் வேண்டா. ஈதொன்றே வேணும்-என்றாராயிற்று. “ஈதே கொள்வதெஞ்ஞான்றும்” என்பதே போருமாயிருக்க, யான் உன்னை என்ற பதங்கள் ஏதுக்கு என்னில் என்னுடைய ஸ்வரூபத்திற்கும் உன்னுடைய ஸ்வரூபத்திற்கும் தகுதியாக இதுவே கொள்ளக்கடவதென்கை. ஸ்வாமியை வுன்பக்கல் சேஷபூதனான நான் கொள்ளுமது இதுவே.

நம்முடைய ஸ்வாமித்வமும் உம்முடைய சேஸத்வமும் கிடக்கச் செய்தேயன்றோ, நெடுநாள் இழந்துபோந்தது; ஆனபின்பு நமக்கு அதிசயங்கை யுண்டாகின்றது; எத்தனை நாள்வரையில் நீர் இங்ஙனே (ஈதே யானுன்னைக் கொள்வது என்று) சொல்லுவீர்? என்று எம்பெருமான் கேட்க; எஞ்ஞான்றும் என்கிறார். ஆத்மிதத்துவ முள்ளவரையிலும், இதுவே எனக்கு வார்த்தையென்றவாறு. இதிலே நிலை நிற்கும்படி உம்மை சிஷை பண்ணி வைத்தது யார்? என்று கேட்க; தேவரீருடைய வடிவழகே இங்ஙனம் சிஷை பண்ணித்தந்தது, என்கிறார், என்மைதோய் சோதி மணிவண்ண வெந்தாய்! என்பதனால்.

உமக்கு நான் செய்யவேண்டுவது எதுவென்ன; எய்தாநின்கழல்யானெய்த ஞானக்கைதா என்கிறார். தம்முயற்சியால் ஒருவர்க்குமணுக வொண்ணாதவுமன திருவடிகளை, ‘உன்னாலே பேறு’ என்றிருக்கிற நான், அணுகும்படி பண்ணவேணும்.

ஞானக்கை தா என்றவிடத்தில் ஈடு-“எம்பார்க்கு ஆண்டானருளிச்செய்த வார்தையை ஸ்மாரிப்பது” என்று. இதன் விவரணம் வருமாறு;-முதவியாண்டான் ஒருகால் திருநாராயணபுரத்தில் எழுந்தருளியிருக்கையில் அவருடைய சிஷ்யரானவொரு ஸ்ரீவைஷ்ணவர், கோயிலிலே வந்து, எம்பார்ஸந்நிதியிலே கைங்கர்யம் பண்ணிக் கொண்டிருந்தார். அப்போது ஒரநாள் சில ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு எம்பார் திருவிலச்சினை ஸாதிக்க விருக்கையில், இந்த ஸ்ரீவைஷ்ணவரும் தமக்கும் ஸாதிக்கும்படி வேண்டினார்; அப்போது எம்பார்‘ உமக்கு விசேஷ ஸம்பந்தமுண்டோ?” என்று அவரைக் கேட்க, “தேவரீருடைய ஸம்பந்தமே ஸம்பந்தம்” என்று அவர் விண்ணப்பஞ்செய்ய, அவ்வளவிலே எம்பார் ‘இவர் முதலியாண்டானுடைய ஸ்ரீபாதத்தவர்’ என்றறியாதே இவர்க்குப் பஞ்ச ஸம்ஸ்காரங்களைப்பண்ணி இவரைக்கொண்டு கைங்கரியங்களுங் கொண்டெழுந்தருளி யிராநிற்கையில் ஆண்டானும் திரும்பிக் கோயிலிலே யெழுந்தருள, அப்போது அந்த ஸ்ரீவைஷ்ணவர் ஆண்டானை வந்து ஸேவிக்க, ஆண்டானும் முன்புபோலே இவரைக்கொண்டு வேண்டும் கைங்காரியங்களைக் கொள்ள. அப்போது எம்பாருமறிந்து ஆண்டான் பக்கலிலே யெழுந்தருளி கனக்க அபசாரப்பட்டேன்’ என்றருளிச்செய்ய, இவருடைய திருவுள்ளத்தில் க்லேசத்தை யறிந்து அப்போது ஆண்டானருறிச் செய்த வார்த்தை-‘ஒரு கிணற்றிலே விழுந்தவனுக்கு இரண்டுபேர் கைகொடுத்தால் எடுக்குமவர்களுக்கும் எளிதாய் ஏறுமவனுக்கும் எளிதாயிருக்குமிறே; அப்படியேயாகிறது என்றாம். இங்குக் கைகொடுப்பதாவது ஞானமளிப்பது. இதற்காகவே இந்த ஸம்வாதம் இங்குக் காட்டப்பட்டது. ஸம்ஸார ஸாகரத்தில் அழுந்தினவர்களுக்கு, இரண்டு ஆசரீரயர்கறாகவிருந்து ஞானக்கை கொடுப்பது நன்றுதானே, என்பது முதலியாண்டானுடைய திருவுள்ளம்.

English Translation

O My dark effulgent Lord, here is a" ask of all times, -grant me the hands of knowledge, that I may grasp your precious lotus feet.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain