nalaeram_logo.jpg
(3084)

இருடீகேசனெம்பிரா னிலங்கையரக்கர்க்குலம்,

முருடுதீர்த்தபிரானெம்மா னமரர்பெம்மானென்றென்று,

தெருடியாகில்நெஞ்சே,வணங்கு திண்ணமறியறிந்து,

மருடியேலும்விடேல்கண்டாய் நம்பிபற்பநாபனையே

பதவுரை

நெஞ்சே

-

மனமே!

தெருடி ஆகில்

-

நீ அறிவுடையை யாகில்

இருடீகேசன் என்று

-

ஹ்ருஷீகேசனே யென்றும்

எம்பிரான் என்று

-

எம்பிரானே யென்றும்

இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த

-

இலங்கையிலிருந்த ராக்ஷ குலத்திற்கு முருடான ராவணனைத்

பிரான் என்று

-

தொலைத்த பிரானே யென்றும்

எம்மான் என்று

-

எம்பெருமானே யென்றும்

அமரர் பெம்மான் என்று

-

நித்யஸூரிநாதனே யென்றும் சொல்லி

வணங்கு

-

அவனை வணங்கு;

திண்ணம் அறி

-

இதைத் திடமாக அறிவாயாக;

அறிந்து

-

அறிந்தபின்

மருடி ஏலும்

-

(மீண்டும்) சுலங்குவாயாகிலும்

நம்பி பற்பநாபனை

-

குணபாரிபூர்ணனான பத்மநாபனை

விடேல் கண்டாய்

-

விடாதே கொள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இங்ஙனம் மஹோபகாரகனான எம்பெருமானை ஒருநாளும் விடலாகாதென்று நெஞ்சுக்கு உரைக்கும் முகத்தால். தம்முடைய அத்யவஸாயத்தை வெளியிடுகிறார்.-இராவணன் பத்துதலையையுடையனாய்க் கடல்சூழ்ந்த இலங்காபுரியிலே அரசனாய் வஸித்து வந்ததுபோல, ஐந்து ஜ்ஞானேந்திரியங்கள் ஐந்து கர்மேந்திரியங்களாகிற பத்துந்தலைகளை யுடைத்தாகி ஸம்ஸாரக்கடல் சூழ்ந்த சரீரரபுரத்திலே ஸ்வாந்த்ர ப்ரபுவாய் இருக்கின்றது மனம் அப்படிப்பட்ட மனத்தைத் திருத்தினதும் ராவணஸம்ஹாரம் செய்ததும், இரண்டு மொக்குமென்கிற கருத்தை ஒன்றரையடிகளாற் காட்டுகின்றார். இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்;-“இவருடைய இந்திரியவச்யதையை தவிர்த்தது-லங்கையில் ராக்ஷஸ ஜாதியில் விபீஷணாதிகளை வைத்து, முரடரான ராவணாதிகளை நிரஸித்தாப்போலே யாயிற்று.” என்பதாம்.

எம்மான் அமரர் பெம்மான்-இந்திரியங்களினுடைய இதரவிஷயப்ராவண்யத்தைத் தவிர்த்த மாத்திரமேயல்லாமல், நித்யஸூரிகளுக்குத் தன்னையநுபிவக்கக் கொடுக்குமாபோலே எனக்குத் தன்னையநுபவிக்கத் தந்தருளினவன், என்று கருத்து.

என்றென்று = இதற்கு ‘வணங்கு’ என்பதனோடே அந்வயம். நெஞ்சமே! எம்பெருமான் நமக்குச் செய்தருளின உபகார பரம்பரைகளைப் பலபடியாலும் அநுஸந்தானஞ் செய்து கொண்டே, அவனை வணங்கு என்றபடி.

தெருடியாகில் வணங்கு என்கிறார்- சைதந்யத்திற்கு பலன் எம்பெருமானை வணங்குதலேயாமென்று காட்டுதற்கு. ‘தெருள்’ என்னும் வினைப்பகுதியின்மேல், தி என்ற நிகழ்கால முன்னிலை யொருமை விகுதியேறி, தெருடி யென்றாயிற்று.

நான் சொல்லும் வார்த்தையை ஸாமாந்யமாக நினையாமல் விசேஷித்துக் குறிக்கொள்ளவேணுமென்பார்தண்ணமறி என்கிறார். அறி என்றபின் அறிந்து என்று மீண்டும் ஒரு வினையெச்சம் வேணுமோ வென்னில் அதன் உட்கருத்தை நம்பிள்ளை காட்டுகிறார்-

“அறிகைதானே போரும் ப்ரயோஜநம் அதுக்குமேலே”

என்ற ஸ்ரீஸூக்தியால், நான் சொல்லும் வார்த்னைய நீ குறிக்கொள்வதே பரம ப்ரயோஜநங் காண் என்று காட்டுதற்கே மீண்டும் அறிந்து என்றது.

மருடியேலும் விடேல்கண்டாய்- ‘மருடி’ என்கிற சொல்லின்வடிவமும் ‘தெருடி’ என்றது போலவே. ‘மருளுதி’ என்றபடி அயோக்யதாயிஸந்தா நம் பண்ணி அறிவு கலங்குமளவிலும் எம்பெருமானை விடாமலிருக்கப்பார், என்று திருவுள்ளத்திற்கு உபதேசித்தாராயிற்று.

நம்பி பற்பநாபனையே என்றவிடத்து ஈட்டு ஸ்ரீஸூக்தி பரமபோக்யம் “கெடுவாய்! இவ்விஷயத்தைவிட்டுப் புறம்பேபோய் மண்ணைமுக்கவோ? அவன் குணபூர்த்தியிருந்தபடி கண்டாயே, வடிவழகிருந்தபடி கண்டாயே, முன்பு நமக்கு உபகாரித்தபடி கண்டாயே.”

English Translation

Have good sense, O Heart!  Learn and worship him well, chant Hishikesa, "My Lord who burnt the demon's Lanka, "O My Lord and Master, Lord of celestials, Padmanabha" and such.  Not even through oversight must you stop chanting.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain