nalaeram_logo.jpg
(3080)

மதுசூதனையன்றிமற்றிலேனென் றெத்தாலும்கருமமின்றி,

துதிசூழ்ந்தபாடல்கள் பாடியாட நின்றூழியூழிதொறும்,

எதிர்சூழல்புக்கெனைத்தோர்பிறப்புமெனக்கேயருள்கள்செய்ய,

விதிசூழ்ந்ததாலெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே.

பதவுரை

மது சூதனை அன்றி

-

மதுவை முடித்த எம்பெருமானைத்தவிர

மற்று இலேன் என்று

-

வேறொரு பற்றுடையேனல்லேன் என்று அநுஸந்தித்து

எத்தாலும்

-

எந்தவஸ்துவினாலும்

கருமம் இன்றி

-

ஒரு காரியமில்லாமல் (அநந்யப்ரயோஜநமாக)

சூழ்ந்த

-

அவனது திருக்குணங்களை வளைந்த

பாடல்கள்

-

பாசுரங்களை

நின்று பாடி ஆட

-

நிலை நின்று பாடியாடும்படி

ஊழி ஊழி தொறும்

-

ஸதாகாலமும்

எனைத்து ஓர்பிறப்பும்

-

(நான் பிறந்த) எல்லாப் பிறவிகள் தோறும்

எதிர்

-

எனக்கெதிரே

சூழல் புக்கு எனக்கே

-

சூழ்ச்சியோடே அவதாரித்து என்பொருட்டே

அருள்கள் செய்ய

-

க்ருபை பண்ணுதற்கு

எனக்கு ஏல்

-

எனக்கென்னலே

அம்மான் திரி விக்கிரமனை விதி சூழ்ந்துத

-

ஸ்வாமியான த்ரிவிக்ரமனை விதி சூழ்ந்து கொண்டது

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் பக்கலிலே நான் ஊன்றுகைக்காக அவன்றான் நெடுங்காலம் க்ருஷி பண்ணினதுண்டு அதுவும் பரமக்கிருபையாலே யென்கிறார். எம்பெருமானைத் தவிர வேறு எந்த உபேயமும் உபாயமும் எனக்கு வேண்டாவென்று தள்ளி, அவனையே துதித்துப்பாடி யாடும்படியாக என்னைத் திருத்திப் பணிகொள்ளும் பொருட்டு, நான் பிறவிதோறும் தானும் எதிரேவவந்து பிறந்து எனக்கு வலை போடும்படியாக எம்பெருமானை ஒரு பரமக்ருபை ஆக்ரமித்துக் கொண்டது என்கிறார்.

மற்றிலேன் என்பதனால் தமக்கு வேறு ப்ராப்யம் இல்லையென்பது சொல்லப்படுகிறது. எத்தாலுங் கருமமின்றி என்பதனால் வேறு உபாயம் இல்லையென்பது சொல்லப்படுகிறது என்று அழகிய மணவாளச்சீயர் அருளிச் செய்யக் கேட்டிருக்கை.

“அநாதிகாலந் தொடங்கி இன்றளவும்வர நான் பிறந்த பிறவிகள் தோறும் என்னை வசீகாரிக்கைக்கீடான வடிவுகளைக் கொண்டுவந்து பிறந்தருளி என்னை வசீகாரித்து” என்பது ஆறாயிரப்படி திவ்யஸூக்தி. இதிலே சிலர் சங்கிப்பதுண்டு ஒரு சேதநனை எம்பெருமான வசப்படுத்திக் கொள்ளத் திருவுள்ளம்பற்றினால், அதற்காக அவன் பல திருவவதாரங்கள் செயயவேணுமோ? அவன்தானே வாரிப்பிடியாகப் பிடித்துக்கொள்ளுமளவில் தடுப்பாரில்லையே. அப்படியிருக்க, இவர் தம்மை வசீகாரிக்க அவன் பல பிறப்புகளை பிறந்தருளினதாகச் சொல்லுகிறவிது என்கொல்? என்று-இதற்குப் பெரியோர் பணிப்பதாவது-எம்பெருமான் கேட்பாரற்ற ஸ்வாந்திரனே யாகிலும் ஸர்வமுன்தி ப்ரஸங்க பாரிஹாரார்த்தமர்க, ஒரு வ்யாஜமாத்திரமாவது இத்தலையிற் கொண்டே ஸ்வீகாரிப்பதாக ஒரு வரம்பு இட்டுக் கொண்டிருக்கிறான்; இதுவரையில் இவ்வாழ்வார்பல யோனிகளிற் பிறந்தவிடத்து அப்பெருமானுக்கு இவரை வசீகாரிக்கைக்கு உறுப்பான அல்பவ்யாஜமுங் கிடைக்கவில்லையென்பதையும், இந்தப் பிறவியில்தான் இவரைக் கைக்கொள்வதற்கு ஸ்வல்பவ்யாஜம் அவனுக்கு கிடைத்தது என்பதையும் தெரிவிப்பதாகுமிந்தப் பாசுரம்- என்று. எம்பெருமானுடைய க்ருபாகாஷ்டையைப் பேசுவதிலாவது, ஆழ்வார்தம்முடைய நைச்யகாஷ்டையைப் பேசுவதிலாவது இப்பாசுரத்திற்கு முக்கிய நோக்கு என்பர்.

தம்மை விஷயீகாரித்தல்லது எம்பெருமானை யிருக்கவொட்டாமையால் அவனுடைய க்ருபையை விதி என்றார்.

English Translation

I said, 'Madhusudana' is my sole refuge, then ceased acting, and only worshipped him through song and dance.   Through many lives in every age he came before me and showered his grace.  This hsa been blessing, through Trivikrama, my master.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain