nalaeram_logo.jpg
(3079)

விட்டிலங்குசெஞ்சோதித் தாமரைபாதம்கைகள்கண்கள்,

விட்டிலங்குகருஞ்சுடர் மலையேதிருவுடம்பு,

விட்டிலங்குமதியம்சீர் சங்குசக்கரம்பரிதி,

விட்டிலங்குமுடியம்மான் மதுசூதனன்தனக்கே.

பதவுரை

விட்டு இலங்கு முடி அம்மான்

-

நன்றாக விளங்குகின்ற திருவபிஷேகத்தையுடைய ஸ்வாமியான

மதுசூதனன் தனக்கு

-

மதுவைக்கொன்ற பெருமானுக்கு

பாதம் கைகள் கண்கள்

-

திருவடிகளும் திருக்கைகளும் திருக்கண்களும்

விட்டு இலங்கு செம் சோதி தாமரை

-

விரிந்து விளங்குகின்ற சிவந்த சுடரையுடைய தாமரைப்பூக்களேயாம்

திருஉடம்பு

-

திருமேனியோ வென்றால்.

விட்டு இலங்கு கரும் சுடர் மலையே

-

நன்கு விளங்குகின்ற நீலவர்ணப்ரபையை யுடைய மலைபோன்றது;

சீர்சங்கு

-

சிறந்த சங்கானது

விட்டு இலங்கு மதியம்

-

மிக விளங்குகின்ற சந்திரனைப் போன்றது;

சக்கரம்

-

திருவாழி

பரிதி

-

ஸூர்யனைப்போன்றது;

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தம்மையும் தம்முடைய ஸம்பந்த ஸம்பந்திகளையும் எம்பெருமான் வைஷ்ணவராக்கினது, வடிவத்தைக் காட்டியென்கிறார்.

திருமாலையாண்டான் பக்கலிலே எம்பெருமானார்திருவாய்மொழி கேட்டருளுங் காலத்தில், பாசுரந்தோறும் அம்பெருமானார்விலக்ஷணமாக ஒவ்வொரு அர்த்த விசேஷம் தாம் சொல்லி ‘இப்படியிருக்கலாமோ?’ என்பாராம் ஆண்டான் அதுகேட்டு ‘இது விச்வாமித்ர ஸ்ருஷ்டியாயிருக்கிறது; ஆளவந்தாரருளிச்செய்ய நான் கேட்டதில்லை’ என்று ஸாதிப்பாராம். இப்பாசுரம் வருகையில், எம்பெருமானார் ஒன்றும் ஸாதியாமல் இருக்கக் கண்ட ஆண்டான், ‘இப்பாட்டில் விச்வாமித்ர ஸ்ருஷ்டி ஒன்றுமில்லை போலும்!’ என்று புன்முறுவலோடே கேட்டுவிட்டாராம். எம்பெருமான் தன்னுடைய திருமேனியழகைக் காட்டி ஆழ்வாரைத் தனக்காக்கிக் கொண்டமையை இப்பாட்டில் சொல்லுவதாக ஆளவந்தாரருளிச் செய்தபடி. உடையவரும் இப்படியே அருளிச் செய்துவந்தார்; பட்டர் அருளிச் செய்யும்போது ‘ஆழ்வாரையும் ஆழ்வாடைய ஸம்பந்திகளையும் விஷயீகாரித்து அத்தாலே எம்பெருமானது திருமேனியிற் பிறந்த புகரைச் சொல்லுகிறது’ என்பராம். எம்பெருமானுடைய வடிவழகைக் காரண கோடியிலே நிறுத்தி ஆளவந்தாருடைய நிர்வாஹம். அதைக் கார்ய கோடியிலே நிறுத்திப ட்டருடைய நிர்வாஹமென்று வாசிகாண்க.

பன்னீராயிரப்படி யுரையில்- ‘இப்பாட்டில் முதலடியில் விட்டு வென்று திருநாமமாகப் பிரித்து, விட்டிலங்கு முடியம்மானென்று நாலாமடியோடே அந்வயித்துக் கிடக்கிறது; அல்லாதபோது, திருநாமம் முதலாக எழுகிற பாட்டுக்களின் மாயாதை குலையும்.” என்கிற வாக்கியங்கள் காணப்படுகின்றன. இதற்குப் பெரியோர்கள் அருளிச் செய்வதாவது-பாட்டின் தொடக்கத்திலுள்ள விட்டு என்பதை ‘விஷ்ணு’ என்கிற பதத்தின் விகாரமாகவே கொள்ளவேணுமென்கிற நிர்ப்பந்தமில்லை. கேசவாதி நாமங்கள் பாசுரந்தோறும் வரவேணுமென்கிற இவ்வளவு நியமமே யுள்ளது, இப்பாட்டில் மதுசூதனனென்கிற திருநாமம் வந்துவிட்டது. கீழ்ப்பாட்டில் வந்த விஷ்ணுநாமம் இப்பாட்டிலும் வரவேணுமென்கிறதால் அது அர்த்தசக்தியால் விஷ்ணுப்ரத்யபிஜ்ஞாபகமாகக் குறையில்லை. திருவெழுகூற்றிருக்கையில் இருமலர், நால்வாய் இருநீர், ஆறுபொதி என்றிவை முதலான பதங்கள் அர்த்தசக்தியாலன்றிக்கே சப்தசக்தியால்மாத்திரம் எண்களைக் குறிப்பிடுகின்றமை இதற்கு நிதர்சநமாகக் கொள்ளததகும். ஆகவே, ஈடு முப்பத்தாறயிரப்படியிலருளி;ச் செய்கிறபடி பாக்ஷிக நிர்வாஹமே பொருந்தும் என்று. ஒன்பதினாயிரப்படியிலும் இருபத்தினாலாயிரப்படியிலும் விட்டு என்கிற சொல் நான்கடிகளிலும் ஸமரூபமாகவே கொள்ளப் பட்டிருக்கின்றமையும் அறியத்தக்கது.

மிக விளங்காநின்ற திருவபிஷேகத்தை யணிந்துள்ள எம்பெருமானுக்குப் பாதங்களும் கைகளும் கண்களும் அழகிய தாமரைகளே யாம் திருமேனியோ நீலாஞ்கநாத்ரிர்யேயாம் சங்குசக்கரங்கள் ச்நத்ர ஸூர்யர்கள்-என்று திவ்யாவயவ சோபையையும் அநுபவித்துப் பேசினாராயிற்று.

வடமொழியில் பரிதி என்னுஞ்சொல் ஸூர்யனைச் சுற்றியிருக்கின்ற பாரிவேஷத்திற்கு (ஊர்கோளுக்கு)ப் பெயர் அச்சொல்லே தமிழில் இலக்கணையால் ஸூர்யனை யுணர்த்திநிற்கும்.

English Translation

My Lord 'Vishnu' wears a radiant crown. My Madhu-foe has red lotus feet, radiant hands and eyes.  His frame is dark and radiant like a beautiful mountain.  His conch and discus bear the radiance of the Moon and Sun".

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain