nalaeram_logo.jpg
(3078)

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலனென் றென்றேகுனித்து

தேவும்தன்னையும் பாடியாடத்திருத்தி, என்னைக் கொண்டென்

பாவந்தன்னையும் பாறக்கைத் தெமரேழெழு பிறப்பும்,

மேவும்தன்மைய மாக்கினான் வல்லனெம் பிரான்விட்டுவே.

பதவுரை

வல்லன்

-

ஸர்வகக்தனும்

எம்பிரான்

-

எமக்கு உபகாரங்கள் செய்பவனுமான

விட்டு

-

விஷ்ணுபகவான் (எமக்குச் செய்ததுயாதெனில்)

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து

-

கோவிந்தன் என்றும் குடக் கூத்தாடுபவன்; என்றும் கோவாலன் என்றும் இத்தகைய திருநாமங்களையே சொல்லிக் கூத்தாடி

தேவும்

-

பரத்வத்தையும்

தன்னையும்

-

தானான தன்மையாகிய ஸௌலப்யத்தையும்

பாடி

-

புகழ்ந்துபாடி

ஆட

-

திரியும்படி

திருத்தி

-

கடாக்ஷத்து

கொண்டு

-

அடியேனை

என் பாவம் தன்னையும்

-

எனது பாவங்களையும்

பாற கைத்து

-

ஓடவடித்து

எமர் ஏழ் எழு பிறப்பும்

-

எம்மைச் சேர்ந்தவர்கள் ஏழேழ் பிறப்பும்

மேவும் தன்மையம் ஆக்கினான்

-

(தன்னை) அடையும்படியான தன்மையையுடையோமாம்படி செய்தான்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- என்னை மாத்திமன்றியே என்னோடு ஸம்பந்த ஸம்பந்த முடையாரையுங்கூட என்னைப்போலே யாக்கின எம்பெருமானுடைய ஸாமாத்தியம் என்னே! என்று வியந்து பேசும் பாசுரமிது. ஸௌலப்ய குணத்திற்கு ஏகாந்தமர்ன திருநாமங்களை இடைவிடாது சொல்லி உவகை தலைமண்டை கொண்டு கூத்தாடி, அந்த ஸௌலப்யத்திற்கு அடிமையான பரத்வத்தையும் தனக்கு அஸாதாரண ஸ்வபாவமான நீர்மையையும் பாடித் திரியும்படி, இரும்பைப் பொன்னாக்குவாரைப்போலே என்னை நித்யஸூரியென்னலாம்படி திருத்தித் தன்னுடையவனாகக் கைக்கொண்டு, தன்னுடைய அங்கீகாரத்திற்கு விரோதியாயிருந்த என்னுடைய பாபங்களையும் ஓடிப்போம் படி துரத்தி, என்னோடு ஸம்பந்தமுள்ளவர்கள் ஏழேழு ஜன்மமும் தன்னை ப்ராபிக்குந் தன்மையையுடையோமாம்படி! இப்படியும் ஒரு வல்லமை யுண்டாவதே! என்றாராயிற்று. வல்லனெம்பிரானென்பதை முடிவிலேயே அந்வயிக்கவுமாம்.

கோவிந்தன் = இந்தத் திநாம்ம ஸஹஸ்ரநாமத்தில் இரண்டிடத்தில் படிக்கப்பட்டுள்ளது; அங்கு பட்டருடைய பாஷ்யம் வருமாநு; (கோ) என்று வாக்குக்குப் பெயராதலால் துதிகளைப் பெற்றவர் என்க. தேவர்கள் செய்யும் துதிகளாகிய வாக்குக்களைப் பெறுகிறவர். கோ என்று பூமிக்கும் பெயராதலால் பூமியைத் திரும்பவும் அடைந்தவர். ‘அதனால் நான் கோவிந்தனென்று சொல்லப்படுகிறேன்’ என்று ஸ்ரீமஹாபாரத சாந்திபர்வதத்திலுள்ளது-வேதாந்த வாக்குக்களினால் அறியப்படுகிறவர் அல்லது அடையப்படுகிறவர் என்பது சங்கரபாஷ்யம். பசுக்களை அடைந்தவன் என்பது ப்ரஸித்தமர்ன அர்த்தம். கோவர்த்தநோத்தரணத்திற்குப் பிறகு தேவேந்திரன் வந்து கோவிந்தாபிஷேகம் செய்தனன் என்பது முணர்க. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி;- “வைகுண்டத்தில் இல்லாததொரு ஸம்பத்திறே இது; கோஸம்ருத்தியாலுண்டான ஐச்வர்ய முள்ளது இங்கே யிறே.” என்பதாம்.

குடக்கூத்தன்- அந்தணாக்குச் செல்வம் விஞ்சினால் யாகங்கள் பண்ணுமா போலே இடையர் செல்வம் மிக்கால் செருக்குக்குப் போக்குவீடாக ஆடுவதொரு ஆட்டமாம் குடக்கூத்து. தலையிலே அடுக்குக் குடமிருக்க, இருதோள்களிலும் அங்ஙனே அடுக்குக் குடமிருக்க, இவைசிறிதும் சலியாதபடி இரண்டு கைகளாலும் குடங்களை மாறி மாறி யெறிந்து ஆடுங்கூத்து இது.

கோவலன்- கோபாலனென்பதன் விகாரம். கோ-பசுக்களை மேய்ப்பதில், வலன்-வல்லன் என்றும் சிலர் கூறுவர். ‘கோ அலன்’ என்று பிரித்து, ஆச்ரிதபரதந்திரன் என்று சொல்லுவாருமுளர்; கோ என்று அரசனுக்குப் பெயராய் ஸ்வாந்திரனென்றபடி. கோ அல்லாதவன்-பரதந்திரன்.

தேவும் தன்னையும்ஸ்ரீ தேவு என்றது தேவத்வமாய் பரத்வத்தைச் சொன்னபடி தன்னை என்று ஆச்ரித பாரதந்திரியமாகிற ஸௌப்யத்தைச் சொன்னபடி. இச்சொல் அப்பொருளை எங்ஙனே சொல்லுமென்னில் எம்பெருமானுக்கு ஸௌலப்யமே தானான தன்மை என்று அறுதியிட்டிருக்குமவருடைய வாக்காதலால் இதுவே பொருளாகும்.

ஸ்ரீபரதாழ்வானோடுகூட சித்தரகூடஞ் சென்ற வஸிஷ்ட பகவான் ஸ்ரீராமபிரானை நோக்கி “ஆத்மாநம் நாதிவர்த்தேதர்” என்றான். ‘தன்னை மீறாதே’ என்பது சப்தார்த்தம். இங்கே ஆத்மாநம் என்பதற்கு ‘உயிர்நிலையான பரதாழ்வானை’ என்று சிலர் பொருள் கூறுவதுண்டு அப்படியல்லாமல் பட்டர் அருளிச் செய்வதாவது-ஆத்மாந மென்றது தானான தன்மையை யென்றபடி; தானான தன்மையாவது ஆச்ரிதபாரதந்திரியம் அதனை இழக்கவேண்டா என்பதாக.

தன்மையம்-தன்மையன் என்பது ஒருமை; அதன் பன்மை இது. தன்மைப் பன்மைக் குறிப்பு வினைமுற்று. விட்டு-விஷ்ணு.

English Translation

For dancing, singing 'Govinda' Gopala and many such names, he made me pure and took me into his service.  My clever Lord Vishnu rid me of my past misdeeds.  Then he made me love him now and through seven lives.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain