nalaeram_logo.jpg
(3077)

மாதவனென்றதேகொண் டென்னையினியிப்பால்பட்டது,

யாதவங்களும்சேர்க்கொடேனென் றென்னுள்புகுந்திருந்து,

தீதவம்கெடுக்குமமுதம் செந்தாமரைக்கட்குன்றம்,

கோதவமிலென்கன்னற்கட்டி யெம்மானென்கோவிந்தனே

பதவுரை

எம்மான் என் கோவிந்தன்

-

எனக்காகக் கண்ணனா யவதாரித்த எம்பெருமான்

மாதவன் என்றதே கொண்டு

-

‘மாதவன்’ என்று நான் வாயினாற் சொன்ன வளவையே கொண்டு

என்னை

-

என் விஷயத்தில்

இனி இப்பால் பட்டது

-

இனிமேலுள்ள காலமெல்லாம்

அவங்கள் யாதும்

-

ஒருவிதமர்ன குறையும்

சேர்கொடேன் என்று

-

சேரவொட்டேள் என்று ஸங்கல்பித்துக்கொண்டு

என் உள் புகுந்து இருந்து

-

என்னுள்ளே பிரவேசித்திருந்து

தீது அவம் கெடுக்கும்

-

பலவகைப் பாவங்களையும் போக்கியருள்கினாய்

செம் தாமரை கண்

-

செந்தாமரை போன்ற திருக்கண்களையுடையனாய்

குன்றம்

-

குன்றம்போல் நிலைபெயராமலிருந்து

கோது அவம் இல் என் கன்னல் கட்டி

-

கோதும் அவமுமில்லாத கன்னல் கட்டிபோலே எனக்கு இனியனாயிருக்கின்றான்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் என்னிடத்தில் இவ்வளவு கனத்த விஷயீகாரஞ் செய்வதற்கு அடியாக நான்செய்த ஸாதாநுஷ்டாநம் பெரிதாக வொன்றுமில்லை; மாதவன் என்று வெறுமனே வாயாற் சொன்னவளவையே கொண்டு என்னுடைய தீமைகளெல்லாவற்றையும் போக்கி ஆட்கொண்டானென்கிறார். எம்பெருமானுக்குப் பல திருநாமங்களிருந்தாலும், பிராட்டி ஸம்பந்தத்தை முன்னிட்டிருக்கின்ற திருநாமத்தில் அவனுக்கும் ஒரு ப்ரிதியுண்டு ஜாமாதா தயிதஸ் தவேதி பவதீஸம்பந்தத்ருஷ்ட்யா ஹாரிம் பச்யேம- என்று பட்டரும் ஸ்ரீகுணரத்ந கோசத்திலருளிச் செய்கிறார். ஜநக சக்ரவர்த்தியின் ஜாமாதா என்றும், பிராட்டிக்குக் கொழுநன் என்றும், உம்முடைய ஸம்பந்தத்தையிட்டே நாங்கள் எம்பெருமானை உகக்கக்கடவோ மென்று பெரிய பிராட்டியாரை நோக்கி யருளிச்செய்த ச்லோகம் அது. எம்பெருமானுக்குண்டான அதிசயங்களெல்லாம் பிராட்டியடியாகவே உண்டாவதாக ச்ருதீதிஹாஸ புராணங்களால் நன்கு விளங்கும். எம்பெருமான் தனக்கும் மிக்க பெருமை பயக்குமதான ஸ்ரீஸம்பந்தத்தைக் காட்டுகிற திருநாமத்தில் அப்பெருமானுக்கும் ஆதராதிசயம் இருக்க ப்ராப்தமர்கையாலே, மாதவன் என்கிற உக்தி மாத்திரத்தையே கொண்டு அவன் அளவுகடந்த அநுக்ரஹத்தைச் செய்தானென்பது உசிதமேயாகும். மா-பிராட்டிக்கு, தவன்- நாயகன் என்றபடி.

வாசி யறியாமல் பல பெயர்களையும் வாயாற் சொல்லிவருமடைவிலே மாதவனென்கிற ஒரு உக்தியும் என் வாக்கில் வந்துவிட்டது; இதையே அவன் பெரிய ஸாதநமாகக் கொண்டான்போலும். இவ்விடத்தில்…‘‘மாதவன் மலை நீர்நிழலென்று ஏறிடுமது பலாந்தரஹேது” என்ற ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகையின் வியாக்கியான முணரத்தக்கது.

யாதவங்களும் என்றவிடத்து, ‘யா, தவங்களும்’ ‘யாது அவங்களும்’ என்று இருவகையாகவும் பிரித்துப் பொருள் கூறுவர். “உன்னை யாதொரு தபஸ்ஸிலும் புக்கு க்லேசிக்கலிடேனென்று” என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி. காயக்லேசகரமான வியாபாரம் தவமெனப்படும் “ஊன்வாட வுண்ணாது உயிர்காவலிட்டு உடலிற் பிரியாப் புலனைந்தும் நொத்து, தான் வாடவாடத் தவஞ்செய்யவேண்டா”என்று திருமங்கையாழ்வார் சேதநர்கட்கு உபதேசிப்பதுபோலே, எம்பெருமான் ஆழ்வார்க்கு உபதேசிப்பன்போலும். “காயிலை தின்றும் கானிலுறைந்தும் கதி தேடித், தீயிடை நின்றும் பூவலம்வந்தும் திரிவீர்காள்! தாயிலுமன்பன் பூமகள் நண்பன் தடநாகப், பாயன் முகுந்தன் கோயிலரங்கம் பணிவீரே” என்றார்திருவரங்கக் கலம்பகத்தில் பிள்ளைப்பெருமாளையங்காரும்.

யாது அவங்களும் என்று பிரித்தால், அவம் என்பது அகம் என்ற வடசொல்லின் விகாரமாகக் கொள்ளத்தக்கது. அவத்யம் என்ற வடசொல் ஈறுகெட்டு அவமென்று கிடக்கிறது என்பாருமுளர். நரகஹேதுவான அவித்யை முதலான கெடுதல் யாதொன்றும் என்றபடி. ‘நான் அயோக்யன்’ என்று நைச்யாநுஸந்தாநம்பண்ணி அகன்றுபோதல், எபாயாந்தரப் படுகுழியில் வீழ்ந்து ஒழிந்துபோதல் முதலிய ஒரு தீமையும் நேராதபடி நோக்கிக்கொள்ளுகிறேன் ஆழ்வீர்! என்று பிரதிஜ்ஞை பண்ணி உட்புகுந்திருந்தபடி.

தீது அவம் கெடுக்கும்- புத்தி பூர்வகமாகச் செய்த பாபங்களை ஒன்றுக்கு அர்த்தமர்கவும், தெரியாமல் நேர்ந்துவிட்ட பாவங்களை மற்றென்றுக்கு அர்த்தமர்கவும் கொள்க. பகவத்ப்ராப்திக்குப் பிரதிபந்தகமான கருமங்களெல்லாவற்றையும் தொலைத்தமை சொன்னவாறு. அன்றியே, தீது அவம் என்பதற்கு, பிராயச்சித்தங்களாலே போக்கக்கூடிய பாவங்களையும், பிராயச்சித்தமே யில்லாத பாவங்களையும் அர்த்தமர்க்க கூறுவதுமுண்டு. “கோக்தே சைவ ஸூராவே ச சோரே பக்நவ்ரதே ததா, நிஷ்க்ருதிர்விஹிதா ஸத்பி; க்ருதக்நே நாஸ்தி நிஷ்க்ருதி;” என்ற ஸ்ரீராமாயணச்லோகம் இங்கு உணரத்தக்கது. “எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை, செய் நன்றி கொன்ற மகற்கு” என்ற திருக்குறளுங் காண்க.

“தீதவம் கெடுக்குமமுதம்” என்ற சொற்போக்கால், அவனுடைய போக்யதையை நான் அநுபவித்த மாத்திரத்திலே எனது பாவங்களெல்லாம் தொலைந்தன என்கிறாரென விளங்கும். “செந்தாமரைக் கட்குன்றம்” என்றவிடத்திற்கு நம்பிள்ளை அருளிச்செய்யும் அர்த்த விசேஷம் அற்புதமர்னது;- “இத்தலையில் தீதும் அவமும் போக்கினானாயிருக்கை யன்றிக்கே, தனக்குண்டாய்க் கழிந்தது என்று தோற்றும்படியாயிற்று வடிவிற்பிறந்த ஔஜ்ஜ்வல்யம். வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் ப்ருசம்பவதி துக்கித; என்றிருக்கு மவனிறே” என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி.

கோது அவம் இல் கன்னல்கட்டி உலகில் கன்னலுக்கு இருவகையான தோஷங்கள் ஸம்பாவிதம் இதரவஸ்து ஸம்பந்தத்தினால் விளையும் தோஷம் ஒன்று; பாகத்தில் கெடுதலினால் விளையும் தோஷம் மற்றொன்று. இவ்விருவகைக் குற்றமுமற்ற கன்னலை த்ருஷ்டாந்தமர்கச் சொன்னதனால் எம்பெருமானுக்கு இருவகைக் குற்றமில்லாமை இங்கு விவக்ஷதம். எதிர்தலையில் ஒரு உபாயத்தை யெதிர்பார்த்துக் காரியஞ் செய்வதும், எதிர்த்தலையின் பேறாகச் செய்வதுமாகிய குற்றமற்றவன் என்கை. தன் பேறாகக் காரியஞ் செய்யுமவனென்கை. இங்கு எம்மான் என்றது வேறோரு வஸ்துவில் நான் போக்கியதாபுத்தி பண்ணாதபடிக்குத் தன் பரமபோக்யரையைக் காட்டி, என்னைத் தோற்பித்தவனென்றவாறு. என் கோவிந்தன்-க்ருஷ்ணாவதாரஞ் செய்தருளினதும் ஆழ்வார்தம்மை அகப்படுத்திக் கொள்ளுகைக்கு என்றிருக்கிறார்போலும்.

English Translation

For merely saying, "Madhava", he entered into me, saying, "Henceforth and forever, I shall stay and protect you" My lotus-eyed mountain-hued ambrosia, my perfect sugar candy, my master, my Govinda is the destroyer of our endless Karmas.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain