nalaeram_logo.jpg
(3076)

நாரணன்முழுவேழுலகுக்கும் நாதன்வேதமயன்,

காரணம்கிரிசை கருமமிவைமுதல்வனெந்தை,

சீரணங்கமரர்பிறர் பலரும்தொழுதேத்தநின்று,

வாரணத்தைமருப்பொசித்த பிரானென்மாதவனே.

பதவுரை

நாரணன்

-

நாராயணனும்

முழு எழ் உலகுக்கும்நாதன்

-

எல்லா உலகங்களுக்கும் ஸ்வாமியும்

காரணம் கிரிசை கரமம் இவை முதல்வன்

-

காரணப் பொருள்கள் காரியப் பொருள்கள் பிரயோஜனங்கள் ஆகிய இவற்றுக்கு நிர்வாஹகனும்

சீர்அணங்கு அமரர்

-

சீர்மை பொருந்திய திவ்யர்களான ந்த்யஸூரிகளாலும்

பிறர் பலரும்

-

மற்றும் பலபேர்களாலும்

தொழுது ஏத்த நின்று

-

வணங்கித் துதிக்கப்பட்டு

வாரணத்தை

-

(கம்ஸனது)யானையினுடைய

மருப்பு

-

கொம்பை

ஒசித்த

-

முறித்த

பிரான்

-

உபகாரகனும்

என் மாதவன்

-

எனக்கு உரியவனுமான திருமால்

எந்தை

-

என்னை யடிமை கொண்டவன்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில், நாராயணன் என்கிற திருநாமம் ப்ரஸ்துதாமகவே அதனுடைய அர்த்தாநுபவம் பண்ணுவதாக இப்பாசுரம் அமைகின்றது. இங்குத் தொடக்கத்தில் நாரணன் என்று திருநாமத்தைச்சொல்லி, அதற்குமேல் அர்த்ததைச் சொல்லுகிறார். முழுவேலுலகுக்கும் நாதன் என்றது, நாராயண நாமத்தின் திரண்ட பொருள் சொன்னபடி. நார சப்தத்தாலே உலகத்திலுள்ள ஸகல சேதநா சேதநப் பொருள்களும் சொல்லப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் (அயநம்) தான் இருப்பிடமாகவுள்ளவன் என்று, ஸர்வஸ்மாத் பரத்வஞ் சொன்னபடி.

இப்படிப்பட்ட நாராயணன் ஒருவனுளன் என்பதில் பிரமாணம் எதென்ன, வேதமயன் என்கிறது பலபல வேதவாக்யங்களினால், ஸர்வஸ்வாமியாக ஓதப்படுகிறவனென்க காரணம் கிரிசை கருமமிவை முதல்வனெந்தை- எல்லாப் பொருள்களும் தானேயாயிருக்கின்றனென்று ஒதுகின்ற உபிநஷத்துக்களின் கருத்து இதுதான் என்று காட்டுகிறபடி. காரணம் என்பதனால், உலகில் ஒன்றுக்குக் காரணமாகத் தென்படுகின்ற பொருள்கள் யாவும் கொள்ளத்தகும். கிரிசை என்பதனால், அக்காரணப் பொருள்களினால் படைக்கப்படுகின்ற காரியப் பொருள்கள் யாவும் கொள்ளத்தகும். கருமம் என்பதனால், என்ன காரியத்திற்காக இப்பொருள் ஏற்பட்டதென்று விசரீரக்குமளவில், கூறப்படுகின்ற பலன் கொள்ளத்தகும். ‘பானை என்ன காரியத்திற்காக?’ என்று கேட்டால் ‘தண்ணீர் கொண்டுவருவதற்காக’ என்று சொல்லுவோமன்றோ; அதுவே இங்குக் கருமம் என்பதனால் விவக்ஷதம். ஆக, இவை எல்லாம் ஈச்வரனிட்ட வழக்கு என்றவாறு. கிரிசை கருமம் என்பதற்கு மற்றொரு வகையாகவும் பொருள் கொள்ளலாம் ஒரு காரணப் பொருளிலிருந்து ஒரு காரியப்பொருள் பிறப்பதற்கு ஹேதுவாக இடையில் செய்யப்படுகின்ற காரியம் எதுவோ அது கிரிசை என்றும் அதனால் பிறக்கும் காரியப் பொருள் கரும மென்றும் கொள்க.

நாராயணத் திருநாமத்திற்கு இரண்டு வகையாக வ்யுத்பத்தி உண்டு நாரங்களுக்கு அயநம் என்பது ஒன்று; நாரங்களை அயநமாக உடையவன் அன்பது மற்றொன்று. இவ்விருவகை வ்யுத்பத்திகளாலும், பலத்வமும் ஸெயலப்யமும் பலிக்குமென்று, முமுக்ஷப்படி முதலியவற்றில் ஆசரீரயர்கள் நிரூபித்தருளினார்கள். இங்கு ஆழ்வார்ஸௌலப்யம் பலிக்கக் கடவதான யோஐநையை திருவுள்ளத்திற்கொண்டு க்ருக்ஷணாவதாரத்தை நினைத்து, அதில் செய்தவொரு செயலை பின்னடிகளிற் பேசுகின்றார். அவதாரங்களும் அவதார சேஷ்டிதங்களுமெல்லாம் நாராயண நாமத்தின் பொருளே யாகுமன்றோ.

‘சீரணங்கு’ என்பதை அமராக்கு விசேஷணமாகக் கொள்ளாமல் தனிப்பட்ட விசேஷ்யமாகக் கொள்வதுமுண்டு. தெய்வமகளான பிராட்டியைச் சொன்னபடி, பிராட்டியும், அமரரும், பிறர் பலரும் தொழுதேத்த நின்று என்றபடி. “சூருமணங்கும் தெய்வப் பெண்ணே” என்பது நிகண்டு, அணங்கு என்ற விது அமராக்கு விசேஷணமாமிடத்து ‘தெய்வத்தன்மை வாய்ந்த’ என்று பொருள்படும்.

English Translation

'Narayana' is the master of all the worlds, extolled by the Vedas, He is the cause, effect and the act of all, my master, He is worshipped by Lakshmi and all the celestials. He is Madhava my Lord, who broke the tusk of the elephant.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain