nalaeram_logo.jpg
(3075)

கேசவன்தமர்க்கீழ்மே லெமரேழெழுபிறப்பும்,

மாசதிரிதுபெற்று நம்முடைவாழ்வுவாய்க்கின்றவா,

ஈசனென்கருமாணிக்கமென் செங்கோலக்கண்ணன்

விண்ணோர் நாயகன், எம்பிரானெம்மான்நாராயணனாலே

பதவுரை

ஈசன்

-

எல்லார்க்கும் ஸ்வாமியாய்

என்

-

என்னுடைய அனுபவத்திற்கு உரிய

கரு செம்கோலம் கண்ணன்

-

சிவந்து அழகிய திருக்கண்களை நான் அநுபவிக்கும்படி செய்தவனாய்

விண்ணோர்நாயகன்

-

நித்யஸூரிநாதனாய்

எம்பிரான்

-

எனக்கு உபகாரகனாய்

எம்மான்

-

எனது ஸ்வாமியாய்

நாராயணனாலே

-

நாராயணனாலே

எமர்

-

என்னைச் சேர்ந்தவர்கள்

கீழ் மேல் ஏழ் ஏழு பிறப்பும்

-

கீழும் மேலுமுள்ள ஏழேழ் பிறப்புக்களிலும்

கேசவன் தமர்

-

பகவத் பக்தராகப் பெற்றார்கள்

இது

-

இப்படிப்பட்ட

மா சதிர்

-

பெரிய சிறப்பை

பெற்று

-

அடைந்து

நம்முடை வாழ்வு வாய்க்கின்ற ஆ

-

நமது வாழ்ச்சி வளருகிறபடி என்னே!;

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பின்னடிகளை முத்துற அந்வயித்துக்கொண்டு முன்னடிகளைப் பிறகு அந்வயித்துக் கொள்க. ஸர்வேச்வரனாய், அழகு நிறைந்த திவ்யமங்கள விக்ரஹ விசிஷ்டனாய், நித்யஸூரி நாதனாய் எனக்கு ஸ்வாமியாயிருக்கின்ற நாராயணனாலே, என்னோடு ஏதேனுமொருபடி ஸம்பந்தமுடையாரெல்லாரும், கேசவன்தமர் என்னும் படியான சிறப்புப் பெற்றார்கள்; அதனாலே நம்முடைய ஸ்ரீவைஷ்ணவஸ்ரீவிலக்ஷணமாகவுள்ளது என்கிறார்.

தமர்-அடியார்கள் என்றபடி; கேசவன் என்ற திருநாமத்திற்கு மூன்று வகையாகப் பொருள் கூறுவர்; 1.சிறந்த மயிர்முடியை உடையவன், 2.கேசியென்னும் அசுரனை (ஸ்ரீக்ருஷணவதாரத்தில்) வதஞ் செய்தவன், 3.பிரமனுக்கும் சிவபிரானுக்கும் நியாமகன்-என்பன மூன்று அர்த்தங்கள். இப்பொருள்களைத் தெரிந்து பொண்டு, எம்பெருமான் பக்கலில் அன்பு பூண்டிருக்குமவர்கள், கேசவன் தமர் என்னலாம். விஷய மொன்றையும் அறியாமற்போனாலும் கேசவனென்கிற திருநாமம் பெற்ற பகவானே நமக்குத் தலைவன் என்று கொண்டிருக்குமவர்களும், கேசவன் தமர் என்னத்தகுவர். எமர் கீழ்மேலேழெழுபிறப்பும் கேசவன் தமரானார். ஏழெழ பிறப்பும் என்றது-ஸம்ஸ்க்ருத சாஸ்த்ரங்களில் “குலம் தாரயதே தாத ஸப்த சஸப்த ச” என்று சொல்லியிருப்பதை அடியொற்றியதாம். “எழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள்” என்றார் பெரியாழ்வாரும்

மாசதிர்இது பெற்று-இதிற்பாட்டிலும் பெரிய சதிர்வேறு உண்டோ? எம்பெருமானுடைய திருவருள் இங்ஙனே பெருகிற்றென்றால் இதைவிட வேறு மாசதிர்ஏது? நம்முடைய முயற்சியாலே வரும் சதிர்அற்பம் எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபையாலே விளையும் சதிர்மாசதிர்.

நம்முடைய வாழ்வு வாய்க்கின்றவா!- நம்முடைய வாழ்வென்று ஸ்ரீவைஷ்ணவ ஸம்பத்தைச் சொல்லுகிறது. தம்மோடு ஸம்வந்த ஸம்பந்தம் பெற்றவர்களும் வாழ்ச்சி பெறுவதைத் தம்முடைய வாழ்வாக நினைப்பதே ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணமாகும். ஊற்று மாறமல் இந்த வாழ்ச்சி மேன்மேலும் வளர்ந்து செல்லுகிறபடி என்னே! என்று ஆச்சரீரயப்படுகிறார்.

இப்படி விஷயீகாரித்த எம்பெருமானைப், பின்னிரண்டடிகளில் வருணிக்கிறார். ஸர்வேச்வரனாயும், கண்ணழகாலே என்னை ஈடுபடுத்தித் தன்வடிவழகை முற்றூட்டாக அநுபவிக்கக் கொடுத்தவனாயும், நித்யஸூரிகளைத் தோற்பிக்குமாபோலே வடிவழகாலே என்னையும் தோற்பித்து விஷயீகாரித்த மஹோபகாரனாயுமிருக்கின்ற நாராயணனாலே, இப்படிப்பட்ட சதிர்வாழ்ச்சியுண்டாயிற்று என்றாராயிற்று.

English Translation

Through chanting "Kesava, My Lord and master, Lord of celestials, My lotus-eyed Krishna, My black-gem Lord, Narayana!"my kin through seven generators before and after me, have become devotees; Lo, what a wonder, what fulfillment!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain