nalaeram_logo.jpg
(3047)

தகவுடையவனே யென்னும், பின்னும்

மிகவிரும்பும்பிரான் என்னும், என

தகவுயிர்க்கமுதே, என்னும், உள்ளம்

உகவுருகி நின்றுள்ளுளே.

பதவுரை

உள்ளம்

-

தன் நெஞ்சு

உக

-

அழியுமாறு

உருகி

-

நீர்ப்பண்டமாகி

உள்ளுள்ளே நின்று

-

தன்னில் தான் நின்று

தகவு உடையவனே என்னும்

-

தயவு குறைவற்றவனே! என்கிறாள்.

பின்னும்

-

மேலும்

மிக விரும்பும்

-

மிகவும் குதுர்ஹலங் கொள்ளா நின்றாள்;

பிரான் என்னும்

-

உபகாரனே! என்று சொல்லுகின்றாள்;

எனது அகம் உயிர்க்கு அமுதே என்னும்

-

‘எனது உள்ளுயிர்க்கு அம்ருதமே!’ என்கின்றாள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “எனதவளவண்ணர்தகவுகளே” என்று எம்பெருமானுடைய தயவில் குறையிருப்பதாகத் தாய் சொன்ன வார்த்தையைக் கேட்ட மகள் அந்த வார்த்தையைப் பொறாமல் ‘என் கொழுநனுக்குத் தயவில்லையென்று சொல்லலாமோ? கடலில் நீர்வற்றிப் போயிற்று என்பாருமுண்டோ? நம்முடைய பாவமென்று நம்மை நொந்துகொள்ளலாமே யல்லது அவருக்குக் கருணையில்லை யென்று வாய்திறக்கலாமோ? என்று சொன்னாளாக, அதை அநுவதிக்கிறாள் திருத்தாய்.

தகவு உடையவளே யென்னும் = ஏ என்பதை விளியாகவுங் கொள்ளலாம், (பிரிநிலையாகக் கொண்டு) எவகாரார்த்ர்மாகவுங் கொள்ளலாம்.  அசோகவனத்திற் பிராட்டி * யாத; ப்ராஜ்ஞ; க்ருதஜ்ஞச் ச ஸாநுக்ரோசச் ச ராகவ;, ஸத்வ்ருத்தோ நிரநுக் ரோச” என்றாள். பெருமாளுக்கு ஒருநாளும் தயவு இல்லாமற் போகாது; என்னுடைய தெளர்ப்பாக்யத்தினால் இங்ஙனம் சங்கிக்க வேண்டிய தாகிறதத்தனை என்றாள். மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் என்றும் மஹத் என்றும் உள்ளது.  ‘கிஞ்சித்’ என்றால் சிறிது என்று பொருள்; ‘மஹத்’ என்றால் பெரிது என்று பொருள்.  பிராட்டிதான் அசோகவனத்திற் கிடந்து துடிப்பதற்கு ஹேது சிறிதாயும் பெரிதாயுமுள்ள இரண்டு துஷ்க்ருதங்கள் என்று அறுதியிட்டாள். எது சிறிது? எது பெரிது? என்று ஆராயவேணும். காட்டுக்குப் புறப்படும்போது கூட வரவேண்டாவென்று மறுத்த பெருமாள் விஷயத்திலே “ராமஜாமாதரம் ப்ராப்ய ஸ்த்ரியம் புருஷவிக்ரஹம்” என்று பதற்றமாகப் பேசினது சிறிதான துஷ்க்ருதம் பெருமாள் மாயமான் பின்னே எழுந்தருளினபோது மாரிசனது கள்ளக் கூக்குரல் கேட்டு இளையபெருமாளைப் போகச் சொன்னபோது அவர் புறப்படாதே யிருக்க அவர் விஷயமாகக் கடுஞ் சொற்கள் சொன்னது பெரிதான துஷ்க்ருதம் பகவதாபசாரத்திற் காட்டிலும் பாகவதாபசாரம் மிகக் கொடி தன்றோ.  ஆக, பகவதபசார பாகவதாபசாரங்களின் பலனாக நான் கஷ்டங்களை அநுபவிக்கிறேனே யல்லது பெருமாளுடைய கருணையிலே ஒரு குறைகூற முடியுமோ என்று பிராட்டி சொன்னாப்போலவே இப்பராங்குச நாயகியும் அநுஸந்திதத்தமை முதலடியிலே நுட்பமாக விளங்கும்.

பின்னும் மிக விரும்பும் ஸ்ரீ தன்னுடைய பாபமே வலிதென்று நினைக்கச் செய்தேயும் “ப்ரேக்ஷே கஞ்சித் கதாசந” என்று சொல்லுகிற அவன்படியை நினைத்தும், நம்முடைய பாவங்களை ஒரு பொருளாக மதியாதே நிர்ஹேதுகமாக ஓடிவந்து விஷயீகாரிக்குமவனல்லனோ என்று கொண்டு ஆசையைப் பெருக்கா நின்றாளென்றபடி. அவன் தயாளுதான் என்று அறுதியிட்டுவிட்டால் விருப்பம் வளரச் சொல்லவேண்டாவே.

பிரான் என்னும் ஸ்ரீ அடியார்க்கு உபகாரஞ்செய்வதையே தொழிலாக வுடையவனல்லனோ வென்கிறாள். ‘மிகவிரும்பும் பிரான்’ என்று ஒரே வாக்கியமாக்கி, விரும்புமென்பதைப் பிரானுக்கு அடைமொழியாக்கி உரைப்பர் வாதிகேஸாரி ஜீயர்.

எனது அகவுயிர்க்கு அமுதே! என்னும்=என்னுடைய வுயிரை அழியாமல் நோக்குகின்ற அம்ருதமன்றோ அவன் என்று சொல்லுகின்றாள்.

உள்ளம் உக உருகிநின்று என்று ஏதோ சொல்ல ஆரம்பித்த திருத்தாய் அதைச் சொல்லமாட்டாதே உள்ளுளே என்று முடிக்கிறாள்; வாசாமகோசரம் என்றபடி. ‘உள்ளம் உள்ளுளே மிகவுருகிநின்று’ என்று முந்துகிற அந்வயித்து முதல் மூன்றடிகளையும் பின்னே கூட்டி யுரைப்பதுமுண்டு. இப்பாட்டிற் சொன்ன வார்த்தைகளெல்லாம் நெஞ்சுருகிச் சொன்ன வார்த்தைகளென்றவாறு.

English Translation

"O Compassionate one!", She calls, then 'Most loving Lord', softly, "My soul's ambrosia", she sighs, then stands and melts into tears.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain