nalaeram_logo.jpg
(3042)

ஆடியாடி யகம்கரைந்து, இசை

பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும்

நாடிநாடி நரசிங்காவென்று,

வாடிவாடு மிவ்வாணுதலெ.

பதவுரை

இ வாள் நுதல்

-

ஒளிபொருந்திய நெற்றியையுடையளான இப்பராங்குச நாயகி

ஆடி ஆடி

-

பலகாலும் ஆடி

அகம் கரைந்து

-

மனமுருகி

இசை பாடி பாடி

-

பகவத் கீர்த்தனங்களைப் பலகாலும்பாடி

கண் நீர்மல்கி

-

கண்களில் நீர்நிரம்பப் பெற்று

எங்கும்

-

எவ்விடத்தலும

நாடி நாடி

-

அவன் வரவைப் பலகாலும் ஆராய்ந்து பார்த்து

நரசிங்கா என்று

-

நரசிங்கமூர்த்தியே! என்று கதறி

வாடி வாடும்

-

(அவன் வரக்காணமையாலே) மிகவும் வாடுகின்றாள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ப்ரஹ்லாதாழ்வான் அபேக்ஷரித்த ஸமயத்திலே நரசிங்கமாய் வந்து தோன்றி உதவியருளின பெருமான் அந்தோ! எனக்கு உதவுகின்றிலனே யென்று பெண்பிள்ளை வருந்துவதாகத் திருத்தாய் சொல்லுகிறாள்.  ஆடியாடி யென்றது பெண் பெண்பிள்ளையின் சேஷ்டைகளைச் சொன்னபடி; *எம்மானைச் சொல்லிப்படி. நெஞ்சு நீர்ப்பண்டமாக உருகினபடி சொல்லுகிறது அகங்கரைந்து என்று; அப்படி நெஞ்சு நீர்ப்பண்டமாக உருகா

நிற்கச் செய்வதே ஆற்றாமையாலே கூப்பிடுகிற கூப்பீடு அழகியதொரு இசையாகத்தலைக்கட்டி யிருக்கையாலே இசைப்பாடிப்பாடி என்றது.

ஆற்றாமையாலே துடித்த துடிப்பு ஆடியாடி எனப்பட்டது;  அவ்வாற்றாமையோடேயே கூப்பிட்ட கூப்பிடு இசைபாடிப்பாடி எனப்பட்டது.  “அகங்கரைந்து” என்று சொன்னபடி உருகின மனத்தத்துவமானது இசையாய் வழிந்ததுபோக சேஷரித்து நின்ற அம்சம் கண்ணீராய் வழிந்தோடுகையால் கண்ணீர்மல்கி எனப்பட்டது. அசோகவனத்தில் சிம் சுபா வ்ருக்ஷத்தில் நின்றும் கீழே இறங்கிப் பிராட்டியைக் கண்ட திருவடி,*கிமாத்தம் தவநேத்

ராப்யாம் வாரி ஸ்ரவதிசோகஜம்?*(ஏதுக்கு உம்முடைய திருக்கண்களினின்று சோகக் கண்ணீர் பெருகுகின்றது?) என்று கேட்டாப்போலே கேட்கவேண்டும்படி கண்ணீர்பெருகா நின்றதாயிற்று.

எங்கும் நாடி நாடி = திக்குக்கள்தோறும் கண்களைச் சுழலவிட்டுப் பார்த்தபடியேயிருக்கிறாளாயிற்று.  எம்பெருமான் ஆபத்திலே வந்து உதவத் தவறமாட்டானாகையாலே திடீரென்று ஓடிவந்தே தீருவன் என்று நிச்சயித்துச் சுற்றிலும் பார்த்தபடியேயிருக்கிறாள்.  “எங்கும் நாடி நாடி” என்கிறவிதனை பட்டர் உபந்யஸிக்கும் போது ‘பராங்குசநாயகி தன் சேலையையும் உதறியுதறிப் பார்க்கிறாள் காணும்’ என்று அருளிச்செய்வராம்.  கீழே ஆழ்வார்தாமே “கடல்மலிமாயப்பெருமான் கண்ணனென்னொக்கலை

யானே” என்றருளிச்செய்திருக்கையாலே அதனை யடியொற்றிய ரஸோக்தியாமிது.

நரசிங்காவென்று வாடிவாடும் ஸ்ரீ ப்ரஹ்லாதாழ்வானுக்குத்தான் உதவவேணும், மற்றையோர்க்கு உதவலாகாது என்று ஏதேனம் ஸங்கல்பமுண்டோ வென்று சொல்லிவாடுகின்றாள். அவன் எனக்கு வந்து உதவவேணுமென்று திருவுள்ளங்கொண்டால் ஒரு துர்ணிலோ துரும்பிலோ தோன்றியும் உதவலாமே; அவனுக்கு அசக்யமான தொன்றில்லையே! என்று சொல்லி வாடுகின்றாளென்னவுமாம்.

வாடிவாடும் என்கையாலே, முடியும்படியான நிலைமை நேர்ந்தவளவிலும் நப்பாசை யினால் உயிரை ஒருவாறு தாரித்துவைத்துக் கொண்டிருக்கின்றமை தோற்றுவிக்கப்பட்டது.“ரூபமேவாஸ்யைதந் மஹிமா நம் வ்யாசஷ்டே” என்று வேதமோ தினபடியே, எம்பெருமானருள் இவளுக்குக் கிடைத்தே தீருமென்பது திருமுகமண்டலத்தில் நிழலிட்டுத் தோற்றுகிறதென்கைக்காக இவ்வாணுதல் எனப்பட்டதுஃ

வாணுதல் ஸ்ரீ அன்மொழித்தொகை.

English Translation

Singing and dancing endlessly, this bright, forehead girl calls, 'Narasimha!", and looks everywhere, Then tears welling, she swoons.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain