nalaeram_logo.jpg
(3041)

குழாங்கொள்பேரரக்கன் குலம்வீயமுனிந்தவனை,

குழாங்கொள்தென்குருகூர்ச் சடகோபன்தெரிந்துரைத்த,

குழாங்கொளாயிரத்து ளிவைபத்துமுடன்பாடி,

குழாங்களாயடியீருடன் கூடிநின்றாடுமினே.

பதவுரை

அடியீர்

-

பக்தர்களே!

குழாம் கொள்

-

கூட்டங்கூட்டமான சேனைகளைக் கொண்ட

பேர்

-

மிக்க பெருமை பொருந்திய

அரக்கன்

-

ராக்ஷஸ ராஜனாகிய இராவணனுடைய

குலம்

-

குடும்பம்

வீய

-

தொலையும்படி

முனிந்தவனை

-

சீறியருளின பெருமான் விஷயமாக

குழாம் கொள் தென்குருகூர்

-

(ஸ்ரீவைஷ்ணவ) கோஷ்டிகளை யுடைத்தான திரு நகாரிக்குத் தலைவரான

சடகோபன்

-

ஆழ்வார்

தெரிந்து

-

ஆராய்ந்து

உரைத்த

-

அருளிச்செய்த

குழாம் கொள் ஆயிரத்துள்

-

பாசுரங்களின் கூட்டம் நிரம்பிய இவ்வாயிரத்தினுள்

இவை பத்தும்

-

இப்பத்துப்பாட்டையும்

உடன்

-

பொருளுடனே

பாடி

-

பாடி

குழாங்கள் ஆய்

-

பெரிய கோஷ்டியாய்

உடன் கூடி நின்று

-

ஒருமிக்கக் கலந்திருந்த

ஆடுமின்

-

கூத்தாடுங்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  ஒவ்வொரு பதிகத்திலும் ஈற்றுப் பாசுரத்தில் பயனுரைத்து வருகின்ற ஆழ்வார் இப்பதிகத்திற்குப் பயன் கூறாது, இத்திருவாய்மொழி, பாகவதர் பெருந்திரளாக இருந்து அநுபவிக்கத்தக்கது என்று சொல்லித் தலைக்கட்டுகின்றார். இதற்கொரு பலன் எதிர்பார்க்கவேண்டா; பெரிய கோஷ்டியாக இருந்து இதனை அநுபவிப்பதுதானே ஸ்வயம் ப்ரோயஜனம் என்று தெரிவித்தவாறு. அன்றியே, இத்திருவாய்மொழியைக் கற்கப்பெறில் என்னைப்போல் தனியேயிருந்து துவளாமல் பாகவதகோஷ்டிகளுடன் கூடி அனுபவிக்கும்படியான பெரும்பேறு பெறுவீர்கள் என்று இதனை இத்திருவாய்மொழி கற்கையின் பயனாகவே அருளிச்செய்தாரென்றுங் கொள்ளலாம்.  ஆடுமின் என்றது ஆடப்பெறுவீர்களாக என்றபடி.

குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனை = கூட்டங் கூட்டமாகக் கூடி நலிந்து கொண்டிருந்த இராவணனை வேரோடுங் களைந்தொழித்த இராமபிரானைக் குறித்து என்றபடி. * ஆகர்ணபூர்ணைரிஷிபிர் ஜீவலோகம் துராஸகை;, காரிஷ்யே மைதிலீஹேதேர் அபிசார்ச மராக்ஷஸம். * என்று ஆரண்ய காண்டத்தில் சோதிவாய் திறந்து அருளிச் செய்தபடியே  செய்து தலைகட்டினபடி.

குழாங்கொள் தென்குருகூர்ச் சடகோபன் = ஸ்ரீவைஷ்ணவ ஸமூஹங்கள் சூழப்பெற்ற ஆழ்வார் என்றபடி. இங்கே நம்பிள்ளை ஸ்ரீஸூக்தி காண்மின்;--ஜநஸ்தானம் அடியறுப்பபுண்ட பின்பு தண்டகாரண்யம் குடியேறினாற்போலே * வாயுந்திரையுகளுக்குத் தப்பின ஆழ்வாரைக் காணவேணுமென்று ஸ்ரீவைஷ்ணவ ப்ருந்தமடையத் திரண்டதாயிற்று.” -கீழே “வாயுந்திரைகளும்” என்ற திருவாய்மொழி யருளிச்செய்யும்போது ஆழ்வார்க்கு இருந்த நிலைமையை நோக்குங்கால் ‘இனி இவரை இவ்விபூதி இழந்ததேயாகும்’ என்றே அனைவரும் நினைக்கும்படி யாயிற்றாம் ஸம்ஸாரிகள் பண்ணின பாக்கியத்தாலே அத்திருவாய்மொழிக்கு ஆழ்வார் தப்பிப் பிழைத்தார்; அன்னவரை ஸேவிக்க வேணுமென்று பலபல பாகவதர்கள் திரண்டுவந்து சேர்ந்திருந்தார்களாம்  அவ்விருப்பைச் சொல்லுகிறது. ‘குழாயங்கொள் தென்குருகூர்ச் சடகோபன்’ என்று. அங்ஙனே திரண்ட ஸ்ரீவைஷ்ணவர்களுக் கெல்லாம் ஜீவனம் போரும்படி அருளிச்செய்த ஸ்ரீஸூக்தி இவையாகையாலே குழாய்கொளாயிரம் எனப்பட்டது. ஆயிரத்தினுள் இப்பத்துப் பாட்டையும் அடியீர்! குழாய்களாய் உடன்கூடி நின்று ஆடுமின் என்று அந்வயம்.

இவ்விடத்தே நம்பிள்ளை அருளிச் செய்ததொரு திவ்ய ஸ்ரீஸக்தி ஸ்ரீவைஷ்ணவர்களின் ஹ்ருதயத்திலே எப்போதும் குடிகொண்டிருக்கத்தக்கது;

English Translation

This decad of the well-arranged thousand songs spoken with feeling by Kurugur satakopan addresses the Lord who, angrily destroyed Lanka, Devotees, come and join the band, and eyes, sing and dance with us!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain