nalaeram_logo.jpg
(3037)

முன்நல்யாழ்பயில் நூல் நரம்பின்முதிர்சுவையே,

பன்னலார்பயிலும் பரனே,பவித்திரனே,

கன்னலே,அமுதே, கார்முகிலே,என்கண்ணா,

நின்னலாலிலேன்கா ணென்னைநீகுறிக்கொள்ளே.

பதவுரை

முன்

-

அநாதியாய்

நல்

-

விலக்ஷணமாய்

யாழ் பயில்

-

வீணைணைப் பற்றி

நூல்

-

ஸங்கீத சாஸ்த்ரத்தின் படியேயான

நரம்பில்

-

தந்திக்கம்பியிலே வருடப்பட்டு

முதிர்

-

முதிர்ந்த

சுவையே

-

சுவைபோன்றவனே! (பரமபோக்யனே)!)

பல் நல்லார்

-

-  பல விலக்ஷணர்கள்

பயிலும்

-

நித்யானுபவம் பண்ணப் பெற்ற

பரமனே

-

பரம புருஷனே!

பவித்திரனே

-

பாரிசுத்தனே!

கன்னலே

-

கரும்பின் சாறு போன்றவனே!

அமுதே

-

அமிருதம் போன்றவளே!

கார்முகிலே

-

காளமேகத்திருவுருவளே!

என் கண்ணா

-

எனக்கு நித்யானுபவத்திற்கு உரிய கண்ணபிரானே!

நின் லால்

-

உன்னையன்றி

இலேன் காண்

-

(வேறொருவரைத் தஞ்சமாக) உடையனல்லேன் காண்

என்னை

-

இப்படிப்பட்ட என்னை

நீ குறிக்கொள்

-

நீயே திருவுள்ளத்தில் கொண்டருளவேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “அடியேனடைந்தேன் முதல் முன்னமே” என்றார் அதனால் தம்முடைய நித்ய ஸம்ச்லேஷத்தைத் தெரிவித்துக்கொண்ட ஆழ்வார்இக்கலவிக்கு விச்சேதம் பிறந்தால் என்செய்வது? என்று சங்கித்து, அப்படி ஒருகால் விச்லேஷம் பிறக்குமாகில் தாரிக்கமாட்டேனென்று திருவுள்ளத்திலே கொண்டருள வேணுமென்று இப்பாட்டிலருளிச் செய்கிறார். ‘தாரிக்கமுடியாமைக்குக் காரணம் எம்பெருமானுடைய பரமபோக்யதை முதலானவை’ என்பதைக் காட்டிக்கொண்டு மூன்றடிகளில் பகவத் ஸம்போதநங்களை அமைத்தருளிகிறார்.

முன்னல்யாழ்பயில்நூல் நரம்பின் முதிர்சுவையே! என்ற விளி-எம்பெருமானுடைய பரமபோக்யதை எல்லாரையும் ஈடுபடுத்துமது என்று காட்டுதற்காக.  பசுர்வேத்தி சிசுர்வேத்தி வேத்தி காநரஸம் பணீ என்றபடி பசுக்களையும் சிசுக்களையும் ஸர்ப்பங்களையும் பரவசமாக்கவல்ல ஸங்கீதரஸம் யாதொன்றுமுண்டு, அதுவே எம்பெருமானாக இங்குச் சொன்னது அதுபோல் இவன் ஸகலர்க்கும பரமயோக்யன் என்றபடி. முன் என்பதும் நல் என்பதும் நுர்லுக்கு விசேஷணம்.  வீணாகாநவிஷயமானசாஸ்த்ரம் அநாதியாயும் விலக்ஷணமாயுமுள்ளது என்றவாறு.  அப்படிப்பட்ட சாஸ்த்ரப்படி ஏற்பட்டதாயும், தந்திக்கம்பியிலே கிளர்ந்ததாயுமிருக்கிற முதிர்ந்த கீதரஸம்போலே இனிமையே வடிவெடுத்தவனே! என்றபடி.

பன்னலார்பயிலும் பரனே!=”தெள்ளியார்பலர் கைதொழுந்தேவனார்” என்கிறபடியே. பகவத் குணாநுவபத்தில் நிலவர்களான கணக்கற்ற நித்யஸூரிகள் இடை வீடின்றி நித்யாநுபவம் பண்ணினாலும் அநுபவித்த அம்சம் சிறிதாய் அநுபவிக்க வேண்டிய அம்சமே பெரிதாயிருக்கப் பெற்றவனே! என்றபடி.  பல்நலார் என்று முமுக்ஷுக்களைச் சொல்லிற்றாகவுமாம்.  நல்லார் என்பது நலார் என்று தொக்கிக்கிடக்கிறது.

பவித்திரனே! = நித்யஸம்ஸாரிகளான நாமும் நிதயமுக்தர்களின் திரளிலே புகலாம்படி நம்மை நிஷ்கல்மஷராக்குந் தன்மையனே! என்றபடி. கன்னலே அமுதே! = கன்னல்போலவும் அம்ருதம்போலவும் இனியனானவனே!  கார்முகிலே! = காளமேகம் போல் ஔதார்யமே வடிவெடுத்தவனே! என்க.  என் கண்ணா! -  கண்ணனைப்போல் என் விஷயத்தில் பரம ஸூலபனாயிருப்பவனே!

நின் அலால் இலேன் = உன்னைவிட்டுப்பிரிந்து ஒரு நொடிப்பொழுதும் ஜீவக்க மாட்டேன். உன்னையனன்றி வேறொருவரை ரக்ஷகராகக் கொள்ளமாட்டேன் என்னவுமாம்.  என்னை நீ குறிக்கொள்--இப்படிப்பட்டவனாக என்னைத்திருவுள்ளம் பற்றவேணுமென்றாறு.  என்கை; கடாக்ஷரித்தருளவேணுமென்றுமாம்.

English Translation

O Sweet timbre of the well-turned harp-string! O Pure joy attained by the many sages!  O sugarcane juice, ambrosia, dark-hued Lord, my Krishna!  Without you, I too am not; I pray you take need of me.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain