nalaeram_logo.jpg
(3031)

ஊனில்வாழுயிரே நல்லைபோஉன்னைப்பெற்று,

வானுளார்பெருமான் மதுசூதனென்னம்மான்,

தானும்யானுமெல்லாம் தன்னுள்ளேகலந்தொழிந்தோம்,

தேனும்பாலும்நெய்யும் கன்னலுமமுதுமொத்தே

பதவுரை

ஊனில்

-

மாம்ஸரூபமான சரீரரத்தில்

வாழ்

-

வாழ்கின்ற

உயிரே

-

நெஞ்சமே!

நல்லை போ

-

நீ நல்லவன் காண்; (ஏனென்றால்)

உன்னை பெற்று

-

உன்னை ஸ்வாதீனமாகப் பெற்றதனால்,

வான் உளார்பெருமான்

-

நித்யஸூரிகட்குத் தலைவனும்

மதுசூதன்

-

மதுவென்னுமசுரனைக் கொன்றவனும்

என் அம்மான் தானும்

-

எம்பெருமானாகிய அவனும்

யானும்

-

(அவனுக்கு அடிமைப்பட்ட) நானும்

தன் உள்ளே

-

தனக்குள்ளே

எல்லாம்

-

எல்லாவகை யினிமையுமாம்படி

தேனும்

-

தேனும் தேனும்

பாலும்

-

பாலும் பாலும்

நெய்யும்

-

நெய்யும் நெய்யும்

கன்னலும்

-

அக்காரமும் அக்காரமும்

அமுதும்

-

அம்ருதமும் அம்ருதமும்

ஒத்து

-

ஒன்றுசேர்ந்தாற்போன்று

கலந்தொழிந்தோம்

-

கலந்துவிட்டோம்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸர்வேச்வரனைக் கொண்டாடப்பிறந்த ஆழ்வார்தம் திருவுள்ளத்தைக் கொண்டாடடுகிறாரிப்பாட்டில்.  ஏனெனில் கைங்காரியச் செல்வத்திற்கு இட்டுப் பிறந்து வைத்து நெடுநாளாக இழந்துகிடந்த நமக்கு இந்நெஞ்சினாலன்றோ இன்று பேறுவாய்த்தது என்ற உவப்பினால். ராஜ்யத்தை இழந்துகிடந்த வொரு ராஜகுமாரனை ஒருவன் ராஜ்யத்திலே புகுவித்தால் ‘இவனாலேயன்றோ நாம்இப்பேறு பெற்றது’ என்று அவனைக் கொண்டாடுவர்களன்றோ, அதுபோல.

ஊனில் வாழ் உயிரே!  ‘வாழ்’ என்னுஞ்சொல் ஸந்தோஷத்தோடு கூடின இருப்பையுஞ்சொல்லும்  ஸாதாரணமான இருப்பையுஞ்சொல்லும்.  அவ்விரு வகைப்பொருளும் இங்கு உரைக்கத்தகும்.  சரீரரத்தில் இருக்கின்ற நெஞ்சே! (அன்றி) தேஹந்தவிர வேறொன்று கிடையாதென்றுகொண்டு அதிலேயே களித்து வர்த்திக்கிற நெஞ்சே! (அன்றியே) பாழும் பிரகிருதியில் இருந்துவைத்தே பகவத் குணங்களையே தாரகமாகக்கொண்டு வாழ்கிற நெஞ்சே!

உயிர் என்று நெஞ்சைச் சொல்லலாமோவென்னில், இங்கே ஈடுகாண்மின்.  “மநஸ்ஸை உயிர்என்பானென் என்னில்  ஆத்மாவுக்கு தர்மபூதஜ்ஞாநம் நித்யமாயிருக்கச்செய்தே மந ஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்தமோக்ஷயோ; என்று பந்த மோக்ஷங்களுக்கு ஹேது மநஸ்ஸூ என்கிற ப்ராதாந்யத்தைப்பற்ற உயிரே! என்று ஆத்மாவை ஸம்போதிக்குமாபோலே ஸம்போதிக்கிறார்” என்று. இத் தால்ஔ பசரீரக ப்ரயோகமென்று காட்டிபடி.

நல்லை போ ஸ்ரீ வடமொழியில் ‘போ’ என்கிற விளக்குறிப்பிடைச்சொல் போ எனத் திரிந்தது என்னலாம்.  எதிர்மறையிலக்கணையால், போ என்றது வா வென்ற படியாய் ‘நெஞ்சே! வா’ என்றதாகவுமாம்.  முழச்சொல்லாய் மிகவும் நல்லை என்றதாகவுமாகலாம்  வார்த்தைப்பாடு என்னலாம்.  நல்லை-‘நல்லன்’ என்பதன் முன்னிலை.  நெஞ்சைக்கொண்டாடுதற்கான காரணத்தை உன்னைப்பெற்று எனத் தொடங்கி அருளிச்செய்கிறார்.  எம்பெருமான் அநாதியாகவேயுளன்  அவனுடைய ஸம்பந்தமும் அப்படியே அநாதி  அவன் நம்மைக் கைப்பற்றவேணுமென்று தட்டித்திரிவதும்  நெடுநாளாகவே உண்டு  இவ்வளவுமிருந்தும் நெஞ்சே நீ இசைந்துவராத குறையொன்றினாலன்றோ நெடுங்காலமாக இழந்திருந்தது இன்று நீ ஆபிமுக்யம்பண்ணப் பெற்றதனாலன்றோ இப்பேறு பெற்றது என்று கொண்டாடுகின்றேனென்கிறார்.  தாம்பெற்ற பேற்றை மூன்றடிகளாலுரைக்கிறார். நித்யஸூரிகளுக்கும் அவ்வருகானவன் ஸம்ஸாரிகளில் கடைகெட்டவனான என்னோடே கலந்த கலவியை என்ன பாசுரமிட்டுக்சொல்லுவேன்? அவனும் நானுமான சேர்த்தியிலே எல்லா ரஸங்களும் பிறக்கும்படி கலந்தோம் என்கிறார்.

தேனும் பாலும் இத்யாதி ஈற்றடியில் இரண்டுவகையான நிர்வாஹமுண்டு  தேனும் தேனும் கலந்தாற்போலவும் பாலும் பாலும் கலந்தாற்போலவும் நெய்யும் நெய்யும் கலந்தாற்போலவும் அமுது மமுதும் கலந்தாற்போலவும் என்றுகொண்டு ஏக ஜாதீயத்ரவ்யங்கள் பரஸ்பரம் கலந்தாற்போலே என்று முன்புள்ள முதலிகளின் நிர்வாஹம், எம்பெருமானார் நிர்வஹிக்கும்படியாவது-தேன், பால் நெய் கன்னல் அமுது ஆகிய இவற்றைச் சொன்னது மற்றுமுள்ள ரஸவத்பதார்த்தங்களனைத்தையுஞ் சொன்னபடியாய், அவனும் நானுமான கலவிக்குள்ளே எல்ல ரஸங்களுமாம்படி கலந்தோமென்று.

English Translation

Good for you, O Life residing in the body!  Through your grace my Lord Madhusadana and I have mingled into one inseparably, as sweetly as milk and honey, sugarcane juice and Ghee .

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain