nalaeram_logo.jpg
(3029)

கள்வா எம்மையு மேழுலகும்,

நின் னுள்ளேதோற்றிய இறைவா என்று,

வெள்ளேறன்நான்முக னிந்திரன்வானவர்,

புள்ளூர்திகழல் பணிந்தேத்துவரே.

பதவுரை

வெள் ஏறன்

-

வெளுத்த எருதை வாஹனமாகவுடைய சிவபிரானும்

நான்முகன்

-

பிரமனும்

இந்திரன்

-

இந்திரனும்

வானவர்

-

மற்றுமுள்ள தேவர்களும (ஒன்று கூடி)

கள்வா

-

“கள்வனே!

எம்மையும்

-

எங்களையும்

ஏழ் உலகும்

-

ஏழுலகங்களையும்

நின் உள்ளே

-

உனது ஸங்கல்பத்தினுள்ளே

தோற்றிய

-

தோன்றுவித்த

இறைவ

-

ஸ்வாமியே!”

என்று

-

என்று சொல்லி

புள் ஊர்தி

-

கருடவாஹனனாகிய ஸர்வேச்வரனுடைய

கழல்

-

திருவடிகளை

பணிந்து

-

வணங்கி

ஏத்தவர்

-

துதிப்பர்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எவர்களை நீங்கள் தெய்வமாகக் கருதுகின்றீர்களோ அவர்களும் எம்பெருமானையே பணிந்து துதிக்கின்றார்களாதலால் அவர்களது இசைவினாலும் எம்பெருமானுக்கே பரத்வமுண்டென்று எளிதில் அறியலாமே என்கிறார்.

“உன் ஈச்வரத்வத்தை மறைத்துக்கொண்டு எங்களுக்குத் தெரியாதபடி வந்து நிற்கிற கள்வனே!’ எங்களையும் எங்களுக்கிடமான லோகங்களையும் ஸங்கல்பமாத்ரத்தாலே தோன்றுவித்த ஸ்வாமியே!” என்றிங்ஙனம் துதிக்கின்றார்களாம் கருடவாஹனனான பெருமானைச் சிவன் பிரமனிந்திரன் முதலானோர்.

கள்வா = பிறர் அறியாதபடி காரியஞ்செய்பவனைக் கள்வனென்பது; எம்பெருமானும் இரா * மடமூட்டுவாரைபோலே உள்ளே பதிகிடந்து ஸத்தையேபிடித்து நோக்கிக்கொண்டு போருமவனாகையாலே கள்வனெனப்படுகிறான்.  பிள்ளைப்பெருமாளையங்கார் நுர்ற்றெட்டுத் திருப்பதி யந்தா தியில் பேசும் பாசுரமொன்று காண்மின்; --“பண்டேயுன்தொண்டாம் படிவுயிரை யென்னதென்று, கொண்டேனைக் கள்வனென்று கூறாதே-மண்டலத்தோர், புள்வாய்பிளந்தபுயலே! உனைக் கச்சிக் கள்வாவெறோதுவது என்கண்டு?” என்றாம். (அதாவது) ஒருவர்க்கு உரிய பொருளைத் தன்னதாகக் கொள்வது கள்ளமென்பபடும். ஆகவே, அநாதியாகவுனக்கே உரியதாய்க் கிடந்தவுயிரை நான் என்னுடையதென்று கொண்டிருக்கிறேனாதலால் என்னைக் கள்வனென்னு சொல்லத்தகும்.  உலகத்திலுள்ள பொருள்கள் யாவும் உன்னுடையனவே யாதலால் வெண்ணெய் கொள்ளுதல் முதலிய தொழில்களைச் செய்யினும் உன்னைக் கள்வனென்று கூறுதல் தகாது; இவ்வாறிருக்க, உலகத்தார் இத்தன்மையை ஆய்ந்து அறியாமலே என்னை யானே திருடிக்கொண்ட பnருந் திருடனாகிய  என்னைக் கள்வனென்னாமல் ஸர்வஸ்வாமியான உன்னைக் கள்வனென்கின்றனரே.  இஃது என்ன பேதைமை! என்று சமத்காரந்தோன்றக் கூறியவாறு. இது நிற்க; பிறர் பொருளைக் கவர்வதுபோலவே தனது தன்மையை மறைத்துக் கொண்டிருப்பதும் கள்வமாதலால் அதையிட்டு இங்குக் கள்வா! என்றது. தேவர்கள் எம்பெருமான் பக்கலிலே வந்து வரங்கொள்ளும்போது ‘நீர்எங்களிடத்திலே வந்து வரங்கேட்பதாகவுங்காட்டி எங்களைப் பெருமைப்படுத்தவேணும்’ என்றும் வரங் கேட்பார்களாம் எம்பெருமான் அதற்கு இணங்கி ‘ருக்மிணிப்பிராட்டிக்கு ஒரு பிள்ளைவேணும்’ என்று சிவபிரானிடத்தே வரங்கேட்பனாம்  அப்போது, ‘அந்தோ! தான் பராத்பரனாயிருக்கிற நிலைமையை மறைத்துக்கொண்டு இப்படி வரங் கேட்கிறானே! இது என்ன கள்வமோ!’ என்றீடுபட்டுக் கள்வா! என்று விளிப்பதுண்டே;  அதைச் சொல்லுகிறதிங்கு.

இவன் தாழநின்ற நிலையும் ஸ்தோத்ரம் பண்ணினபடியும் களவு என்பதை நிரூபிக்கிறது எம்மையுமேழுலகும் நின்னுள்ளேதோற்றிய இறைவ! என்பது.

English Translation

Even the bull-rider Siva, the four-faced Brahma, Indra and all the gods look up to the bird-riding Lord.  Worship his feet, and call "Prankster Lord!  You made the seven worlds and all of us appear in you!"

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain