nalaeram_logo.jpg
(3021)

ஏபாவம்,பரமே, யேழுலகும்,

ஈபாவஞ்செய் தருளாலளிப்பாரார்,

மாபாவம்விட அரற்குப்பிச்சைபெய்,

கோபாலகோளரி யேறன்றியே.

பதவுரை

மா பாவம் விட

-

மிகப் பெரிதான (பிரமஹந்தி) பாபமானது விட்டு நீங்கும்படி

அரற்கு

-

சிவபிரானுக்கு

பிச்சை பெய்

-

பிக்ஷையிட்ட

கோபாலன்

-

கோபாலனென்கிற

கோள் அரி ஏறு அன்றி

-

வலிமை தங்கிய ஆண்சிங்கமல்லது

(வேறொருவர்)

ஏழ் உலகும்

-

ஏழுலகங்களையும்

ஈ பாவம் செய்து

-

பாவம் தொலைந்ததாகச் செய்து

அருளால்

-

கிருபையினாலே

அளிப்பார்ஆர்

-

காப்பவருண்டோ?

ஏ பாவம்

-

ஐயோ?

பரமே

-

எம்பெருமானது ஏற்றத்தைச் சொல்லிமுடித்தல் நம்மாலாகுமோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “நங்கண்ணன் கண்ணல்லதில்லையோர்கண்ணே”--- என்றருளிச் செய்த ஆழ்வாரை நோக்கிச்சிலர் ’இப்படிச் சொல்லலாமோ.? பிரமன் சிவன்  முதலானாரும் ஈச்வரர்கள் என்று காட்டுகின்ற பிரமாணங்கள் இல்லையோ? என்ன; அவர்களது சரித்திரங்களை ஆராய்ந்துபார்த்தால் அவர்கள் ஈச்வரர்களாகத் தகுதியில்லை;  ஆபத்து வந்த காலத்திலே அவர்களைக் காத்தருளினவனாக ப்ரஸித்தி பெற்ற எம்பெருமானே ஈச்வரன் என்று நிலைநாட்டுகிறாரிதில்.  *வேதாபஹார குருபாதக * இத்யாதி ஸ்தோத்ர ரத்த ஸ்ரீஸிக்திக்கு இப்பாசுரம் மூலம்.

தொடங்கும்போதே ஏ பாவம்! என்றது ஆழ்வாருடைய மிக்க துக்கத்தைக் காட்டும்.  மாணிக்கத்திற்கும் களிமண்ணுக்குமுள்ள வாசியை ஒருவன் எடுத்துரைக்க வேண்டுமோ?  அவரவர்களே அநாயாஸமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயத்தையும் நான் எடுத்துக்கூற வேண்டும்படியாவதே! என்று வருத்தங்காட்டுகிறபடி. பர என்ற வடசொல் பரமெனத் திரிந்தது.  எம்பெருமானை அநுபவிப்பதற்கென்று பிறந்த எனக்கு மூடர்களைத்தேற்ற வேண்டுவதும் ஒரு சுமையாக வந்து நிற்கின்றதே! என்ற வருத்தத்தைப் பரமே! என்றதனால் காட்டுகிறபடி “பகவத்குணாநுபவம் பண்ணுகையொழிய இது நமக்கு பரமாவதே!” என்பது ஈடு.

அருளால் ஏழுலகும் ஈபாவஞ்செய்து அளிப்பார்ஆர்? =* யத் ப்ரஹ்மகல்பநியுதாநு பவேயி அநாச்யம் தத் கில்பிஷம் ஸ்ருஐதி  ஜந்துரிஹக்ஷணார்த்தே * (ஸ்ரீவைகுண்டஸ்தவம்) என்று ஆழ்வான் அருளிச்செய்தபடி அனேக கல்ப காலங்கள் அநுபவித்துத் தொலைக்க வேண்டிய பாவங்களை அரை நொடிப்பொழுதில் செய்கின்ற உலகங்களின் பாவங்களை அருளாலே அழியச்செய்பவர் எம்பெருமானைத்

தவிர வேறு யாவர்? என்றபடி, பாவங்களை அழியச்செய்கையாவது பாவங்கள் பலன் கொடுக்கவொண்ணாதபடி ஸங்கல்பித்தலேயாகும்.  ஈபாவஞ்செய்துஸ்ரீபாவம் ஈயச்செய்து என்றவாறு.  ஈதல்-அழிதல்.

உலகங்களின் பாவங்களை அழியச்செய்கிறானென்பது கிடக்கட்டும்  உலகுக்குத் தலைவனாக அபிமானிக்கப்படுகிற சிவபிரானுடைய பாவமொன்றைத் தொலைத்த கதை சொல்லுகின்றேன் கேண்மினென்கிறார் மூன்றாமடியில்.

English Translation

The great lion of the cowherd clan, he ended the woes of Siva who came pleading, Who else can rid the misery of the seven worlds, and protect them too?  Alas, must I answer this?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain