nalaeram_logo.jpg
(3017)

நொந்தாராக்காதல்நோய் மெல்லாவியுள்ளுலர்த்த,

நந்தாவிளக்கமே நீயுமளியத்தாய்,

செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாயெம்பெருமான்,

அந்தாமத்தண்டுழா யாசையால்வேவாயே.

பதவுரை

நந்தா விளக்கமே

-

அழிவில்லாத விளக்கே !

அளியத்தாய்

-

இரங்கத்தகுதியுடைய

நீயும்

-

நீயும்

நொந்து ஆரா காதல் நோய்

-

நோவுபட்டு மாளாத ஆசை நோயானது

மெல் ஆவி

-

மெல்லிய பிராணனையும்

உள் உலர்த்த

-

உள்ளே உலர்த்த,

செம் தாமரை தடகண்

-

சிவந்த தாமரை மலர் போன்ற பெரிய கண்களையும்

செம் கனி வாய்

-

சிவந்த கோவைக்கனி போன்ற வாயையுமுடைய

எம்பெருமான்

-

எம்பெருமானது

அம் தண்துழாய் தாமம்

-

அழகிய குளிர்ந்ததிருத்துழாய் மாலையின் மீதுள்ள

ஆசையால்

-

விருப்பத்தினால்

வேவாயே

-

வேகின்றாயோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆற்றாமையாலே தன் மாளிகையிலே புகுந்து அங்கு எரிகிற விளக்கைக் கண்டு அதன் வெப்பத்தைப் பார்த்து ‘உடம்பில் கைவைக்கவொண்ணாதபடி விரஹஜ்வரம் பற்றி யொரியா நின்றது’ என்று கொண்டு நீயும் என்னைப் போலே பகவத் விரஹத்தாலே வெதும்புகிறாயோ வென்கிறாள்.

நொந்து ஆராக் காதல்நோய்ஸ்ர=உலகத்திலுள்ள வியாதிகளுக்கெல்லாம் நோவு படுத்துகைக்கு ஒருநாள்வரையிலே முடிவு உண்டு  ப்ரேம வ்யாதி அப்படிப்பட்டதன்று;  நோவுபடுத்தினது போருமென்று ஒருநாளும் தணியுமதன்று என்றவாறு.  இப்படிப்பட்ட காதல் நோயானது, தொட்டார்மேலே  தோஷமாம்படி மிருதுவாயிருக்கிற நற்சீவனைக் குருத்துவற்றாக வுலர்த்தும்படியாக என்பது முதலடியின் கருத்து இது “ஆசையால் வேவாயே” என்றதனோடு அந்வயிக்கும்.  முதலடியிற் சொல்லுகிற அம்சம் விளக்குக்கும் ஆழ்வார்க்கும் பொது. நொந்தாராக்காதல்நோய் தமக்கு இருப்பது போலவே விளக்குக்கு மிருப்பதாகவும், தாம் மெல்லாவியுள்ளுலர்த்தப் பெற்றிருப்பதுபோலே விளக்கும் இருப்பதாகவும் ஆழ்வாருடைய நினைவு.

நந்தாவிளக்கமே! என்றவிடத்து “ஜ்வாலாபேதாநுமாநமிருந்து பார்க்கிறாளன்றே” என்பது நம் பிள்ளையீடு.  இதன் கருத்து யாதெனில்  ஸ்ரீபாஷ்யத்தில் அநுமாநத்தினால் ப்ரத்யக்ஷம் பாதிக்கப்படுவதும் சிலவிடங்களிலுண்டு என்று நிரூபிக்கப்புகுந்த ஸ்ரீபாஷ்யகாரர் ஜ்வாலாபேதா நுமா நம் காட்டியிருக்கின்றார்.  அதாவது--- எரிகிற விளக்கின் ஜ்வாலையை நாம் பார்க்கும்போது ஒரே ஜ்வாலையென்பதாகவே பார்க்கிறோம்  ஆகவே ப்ரத்யக்ஷத்தினால் ஜ்வாலைக்யம் க்ரஹிக்கப் படுகிறது; உண்மையில் ஜ்வாலைக்யம் கிடையாது; ஜ்வாலாபேதமே யுள்ளது;  அந்த ஜ்வாலாபேதம் அநுமாநவேத்யம்  அநுமாநத்தினால் ஜ்வாலாபேதம் க்ரஹிக்கப்பட்டால் ஒவ்வொரு க்ஷணத்திலும் புதிய விளக்கு உண்டாகிறது என்றதாகத் தேறி நிற்கும்  இங்ஙனே தேறிவிட்டால் நந்தா விளக்கமே! என்று சொல்லுவதற்கில்லை; அழியாத ஒரே ஜ்வாலையாக இருந்தாலன்றோ நந்தா விளக்கென்னலாம். ஆழ்வாரோ நந்தாவிளக்கமே யென்கிறார்;  ப்ரத்யக்ஷ ஸித்தமர்ன வத்தனையையே கொண்டு அருளிச் செய்கிறாரென்று உபபத்தி.

அளியத்தாய்=ஐயொவென்று இரங்கவேண்டும்படி யிராநின்றாயென்றபடி.  நாட்டுக்குக் கண்காட்டியான வுனக்குப் பரார்த்தமர்ன வுடம்பிலே இப்படி நோவு வருவதே! என்று நொந்து சொல்லுகிறபடி.

(செந்தாமரையித்யாதி,) செந்தாமரைபோன்ற தடங்கண்களாலே குளிரக்கடாக்ஷரித்து, கோவைக்கனி போன்ற திருவதரம் துடிப்ப இன்சொல் சொல்லுமவனான எம்பெருமானுடைய அழகிய திருத்துழாய் மாலையைப் பெறவேணுமென்னுமாசையாலே நீயும் என்னைப்போலே வேவாநின்றாயோ ?

English Translation

O, Lamp eternal, My poor dear! Your soul dries and your body buns, suffering unbearable grief through love-sickness.  Did you too eek the cool Tulasi garland adoming the Lord of large lotus eyes and coral lips?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain