nalaeram_logo.jpg
(3014)

நைவாய எம்மேபோல் நாண்மதியே நீயிந்நாள்,

மைவான் இருளகற்றாய் மாழாந்துதேம்புதியால்,

ஐவாய் அரவணைமே லாழிப்பெருமானார்,

மெய்வாசகம் கேட்டுன் மெய்ந்நீர்மை தோற்றாயே.

பதவுரை

நாள் மதியே

-

நிரம்பின சந்திரனே !

நைவு ஆய

-

நைந்து போவதையே இயற்கையாகவுடைய

எம்மே போல்

-

எங்களைப்போல (ஒளி யுரவாகிய) நீயும்

இ நாள்

-

இக்காலத்திலே

மை வான்

-

காரிய ஆகாயத்திலுள்ள

இருள்

-

இருளை

அகற்றாய்

-

நீக்குகின்றிலையாகி

மாழாத்து

-

மயங்கி

தேம்புதி

-

குறைபடுகின்றாய்;

ஆல்

-

ஆதலால்

ஐ வாய்

-

ஐந்து முகங்களுடைய

அரவு அணை மேல்

-

சேஷசயனத்தின் மீது உள்ள

ஆழி பெருமானார்

-

சக்கரபாணியான எம்பெருமானது

மெய் வாசகம் கேட்டு

-

உண்மையான வார்த்தையைக் கேட்டு

உன் மெய் நீர்மை

-

உனது வடிவின் குணமாகிய ஒளியை

தோற்றாயே

-

இழந்தாய் போலும்!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  கலாமாத்ரமாய் தேய்ந்து தோன்றின இளம்பிறைச் சந்திரனைக்கண்டு அந்தோ!

உன் வடிவில் எழிலெல்லாம் இழந்தாயே! நீயும் அப்பெருமானுடைய பொய்யுரையிலே நம்பிக்கை கொண்டு நான் பட்டபாடு படுகின்றாய்போலும் ! என்கிறாள்.  நான்மதியே! என்பதற்கு, முன்பு பூர்ணணாயிருந்த சந்திரனே!’ என்கிற பொருளும், ‘இளம்பிறையே!’ என்கிற பொருளும் பொருந்தும்.  முதற்பொருளில் நாள் சென்றமதி என்றபடி; இரண்டாம் பொருளில் நாட்பூ என்னுமாபோலே.

நைவாய எம்மேபோல்= ’நைவாய’ என்பதை ‘நை வாய;’ என்றும், ‘நைவுஆய’ என்றும் பிரிக்கலாம்  நை என்பது முதனிலைத் தொழிற்பெயராய் நைதலை (அதாவது சைதில்யத்தை)ச் சொல்லும்.  வாய் என்றது இடமென்றபடி; எனவே சைதில்யத்திற்குப் பிறப்பிடமாகவுள்ள எங்களைப்போலே என்றதாயிற்று.  அன்றியே ‘நைவு ஆய;  என்று பிரித்தால் சைதில்யமே ஒருவடிவெடுத்து வந்தாற்போலேயிருக்கின்ற எங்களைப்போலே என்றதாகும்.

இந்நாள் மைவானிருள் அகற்றாய்=சந்திரனே ! நேற்றுவரையில் நீ உதித்தவுடனே இருள் சிதறியோடுதலைக் கண்டிருந்தோம் இன்று அங்ஙணம் காண்கின்றிலோம் நீ ஒளி மழுங்கிக் குறையுற்றிராநின்றாய்.  இப்படி நீயும் எம்மைப்போலே மேனிமெலிந்தமைக்கு என்ன காரணம்? சேஷசாயியான சக்கரபாணிப் பெருமாளுடைய பொய்யுரையில் தசை வைத்து இப்படியானாய்போலும் என்கிறாள்.

‘ஐவாயரவணை மேல்’ என்றவிடத்து, “பாவியேன்தோன்றிப் பாம்பணையாற்கும் தன் பாம்புபோல், நாவுமிரண்டுளவாயிற்று நாணிலியேனுக்கே” என்ற நாச்சியார் திருமொழிப் பாசுரம் நினைக்கத்தக்கது.  “ஒன்றேயுரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான்” என்றும் * அந்ருதம் நோக்தபூர்வம் மே நச வக்ஷ்யே கதாசந* என்றும், *ராமோ த்விர்நாபிபா‘தே* என்றுமுள்ள வசனங்களை நம்பி நான் கெட்டதுபோலே நீயுங் கெட்டாயோ? என்கிறாள். அவர் இயற்கையாக ஸத்யமே சொல்லுகிறவராயினும் இரட்டை நாக்கு படைத்த பாம்பரசனோடே ஸஹவாஸத்தினால் தாமும் பல நாக்கு படைத்தாரென்றுகாட்ட “ஐவாயரவணை மேல் பெருமானார்” எனப்பட்டது.

ஆழிப்பெருமானார்=இங்கே நம்பிள்ளையீடு காண்மின்;--“அல்லாத பாரிகரமோ தான் நன்றாயிருக்கிறது ! தாம் பகலை இரவாக்க நினைக்கில் அதுக்குப் பெருநிலை நிற்கும் பாரிகரம்.” என்று. எம்பெருமானுக்கு ஆச்ரிதபக்ஷபாதம் அளவற்றது என்பதை நிரூபித்தற்குக் கொள்ளப்படுகின்றது இந்த வரலாறு.  ஆற்றாமை தலையெடுத்துச் சொல்லும்போதைக்கும் ஒருவாறு உதவுகின்றது.

மெய்வாசகங்கேட்டு=விபாரிதலக்ஷணையினால் பொய்வாசகமென்றபடி.  பொய் வாசகமென்றே சொல்லிவிடலாமானாலும், ‘எம்பெருமானுடைய; பொய் நாட்டாருடைய பொய் போன்றதன்று. இது விலக்ஷணம்’ என்று காட்டுதற்காக மெய்வாசகமெனப்பட்டதென்பர்;  எம்பெருமான் இப்போது உபேக்ஷரித்தமையாலே அவனுடைய மெய்யுரையும் பொய்யுரையாகக் கொள்ளலாயிற்று. இந்த ப்ரகரணத்தில் “ராமாவதாரத்தில் மெய்யும் க்ருஷ்ணாவதாரத்தில் பொய்யுமிறே ஆச்ரிதாக்குத் தஞ்சம்” என்ற நம்பிள்ளையீட்டு ஸ்ரீஸிக்தியின் சுவை ரஸிக்கத்தக்கது.

English Translation

O Crescent Moon! Today you do not dispel darkness.  Like hapless me, you too are warning, day by day.  Did you believe as true the words of promise made by the discus Lord, sleeping on a serpent couch?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain