nalaeram_logo.jpg
(3011)

காமுற்ற கையறவோ டெல்லே இராப்பகல்,

நீமுற்றக் கண்டுயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்

தீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள்நயந்த,

யாமுற்ற துற்றாயோ வாழி கனைகடலே

பதவுரை

எல்லே ! கனைகடலே!

காமுற்ற கை அறவோடு

-

விரும்பின பொருள் கை கூடப்பெறாத இழவினால்

நீ

-

நீ

இராபகல் முற்ற

-

இரவும் பகலுமாகிய எப்போதும்

கண் துயிலாய்

-

கண்ணுறங்காதாகி

நெஞ்சு

-

உள்ளிடமும்

உருகி

-

நீராகி

ஏங்குதி

-

ஏங்குகின்றாய்;

ஆல்

-

ஆதலால்

தென் இலங்கை

-

தென்னிலங்காபுரி முழுவதும்

தீ ஊட்டினான்

-

நெருப்புக்கு உணவாக்கின பெருமானுடைய

தாள்

-

திருவடிகளை

நயந்த

-

ஆசைப்பட்ட

யாம்

-

நாங்கள்

உற்றது

-

அடைந்த வருத்தத்தை

உற்றாயோ

-

நீயும் அடைந்தாயோ?

வாழி

-

(நீ மனத்துன்பம் தீ;ர்ந்து) வாழ்வாயாக.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கடல் பெருமுழக்கஞ் செய்வதும் அலையேறுவது வடிவதுமாயிருப்பதும் அதற்கு இயல்பாயிருக்க,  அதனை யறியாதே அதுவும் தம்மைப்போலே எம்பெருமான் திருவடிகளில் நசைவைத்து விரும்பனபடியே லபிக்கப் பெறாமையினாலே தன் காம்பீரிய மெல்லாமிழந்து கரையிலே வருவது கரையேறமாட்டாதே உள்ளே விழுவதாய் எழுத்துஞ் சொல்லும் பொருளும் தெரியாதபடி  சத்துகின்ற தாகக்கொண்டு, ஐயோ! நீயும்   இராமபிரானது திருக்குணங்களில் அகப்பட்டு நான் படும்பாடு பட்டாயோ என்கிறதாய்ச் செல்லுகிறது இப்பாசுரம்.

கையறவு = கைப்படாமையினாலுண்டாகும் வருத்தத்திற்குக் ‘கையறவு’ என்று பெயர். காமுற்ற கையறவுஸ்ர = ஆசைப்பட்ட பொருள் கிடைக்கப் பெறாமையினாலுண்டான வருத்தம். உண்மையில், கடல்யாதொன்றையும் காமுற்றது மில்லை, அதுகைப்படாமற்போனதமில்லை.

வருத்தமுண்டானதுமில்லை;  இப்படியிருக்கவும் ஆழ்வார்தமக்குள்ளதெல்லாம் அதற்குமுண்டு போலேயென நினைத்து அருளிச் செய்தவாறு.

இராப்பகல்முற்ற நீ கண்துயிலாய்ஸ்ர = உறங்குவதற்கென்று ஏற்பட்டது இரவு;  விழித்துக் கொண்டிருபப்பதற்கென்று ஏற்பட்டது பகல்  இந்தவாசியைக் கடலே! உன்னிடத்து கண்டிலோம் என்கிறாள்.  கடல் அலை  யெறிந்துகொண்டிருப்பது விழித்தல்  அலை ஓய்ந்துகிடப்பது உறங்குதல் எனக்கொள்க.

நெஞ்சுருகி  ஏங்குதி = உலகில்  தொண்டை நன்றாயிருக்கப்பெற்றவர்கள் ஏதேனும் வாய்விட்டுச் சொன்னால் எழுத்துஞ் சொல்லும் ஸ்பஷ்டமாகத் தெரியம்படி யிருக்கும் தொண்டை கட்டிப்போனவர்கள் எது சொன்னாலும் இன்னதென்று தெரியாமல் வெறும் ஒலி வடிவமாகவே யிருக்கும்  கடலின் ஓசை அத்தகைத்தாயிருத்தலால் இதற்கு நெஞ்சு உருகிப்போயிற்றென்றும் அப்படி போனதற்குக் காரணம் பகவத் வி‘யாவகாஹனமே யென்றும் ஆழ்வார்நினைத்தபடி.

(தீமுற்ற இத்யாதி.)  ஸீதை யென்பவளும் நம்மைப்போலே ஒரு பெண் பிள்ளையா யிருக்க  அவளுக்காக மாத்திரம்  உண்ணாது உறங்காது ஒலிகடலை யூடறுத்துப் படாதபாடுகளும்பட்டு ஆனைத்தொழில் செய்தவர் நம்மைப் பற்றி ஒரு சிந்தனையுஞ் சிந்திக்கின்றிலரே ! என்று நான் அந்த இராமபிரானிடத்து ஈடுபட்டிருக்குமாபோலே நீயும் ஈடுபட்டு வருந்தினாயோ?

வாழி இந்த நிலைமை நீங்கி நீ சுகமாக வாழப்பெறுவர்யாக என்று மங்களா சாஸனஞ் செய்கிறபடி.

English Translation

O Siste, Roaring sea!  Have you no sleep?  You lament night and day in a heart-rending roll.  I desired the Lord's feet who consigned the Southern Lanka to flames; is your plight the same as mine?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain