(2952)

சார்ந்த இருவல் வினைகளும் சரித்து மாயப் பற்றறுத்து

தீர்ந்து தன்பால் மனம்வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்,

ஆர்ந்த ஞானச் சுடராகி அகலம் கீழ்மேல் அளவிறந்து,

நேர்ந்த வுருவாய் அருவாகும் இவற்றி னுயிராம் நெடுமாலே.

 

பதவுரை

சார்ந்த

-

சேர்ந்திருக்கிற

இரு வல் வினைகளும்

-

(புண்யபாப ரூபங்களான இருவகைப்பட்ட வல்வினைகளையும்

சரிந்து

-

தொலைந்து

மாயம் பற்று அறுத்து

-

அஜ்ஞாந காரியமான விஷயஸங்கத்தையும் தவிர்த்து

தன்பால் தீர்ந்து மனம் வைக்க திருத்தி

-

தன்னிடத்திலே உறுதி கொண்டு நெஞ்சைப் பொருந்த வைக்கும்படி என்னைத் திருத்தி

வீடு திருத்து வான்

-

(எனக்குத் தருவதாக மோக்ஷ ஸ்தானத்திலும் சில : திருத்தங்களைச் செய்து ஒழுங்குபடுத்துவதாக ஆரம்பித்துவிட்டான்;

அவன் யானனென்னில்; பரிபூர்ணமான

ஆர்ந்த

-

பரிபூர்ணமான

ஞானம் சுடர் ஆகி

-

(ஸ்வயம்ப்ரகாச) ஞான வொளியையுடையனாய்

அகலம் கீழ் மேல் அளவு இறந்து

-

சுற்றும் கீழும் மேலும் எல்லையற்று எங்கம் வியாபதித்தவனாய்

நேர்ந்த

-

மிகவும் நுட்பமான

உருஆய் அரு ஆகும் இவற்றின்

-

அசித்தும் சித்துமாகிற இந்தப் பொருள்களுக்கு

உயிர் ஆம்

-

அந்தர்யாமியாகிநிற்கிற

நெடு மால்

-

வ்யாமோஹமே வடிவான எம்பெருமான்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டைத் திருச்செல்வி சார்த்தின் எம்பெருமான் “அம் மாமூர்த்தியைச் சார்ந்து மாயோம்” என்ற வுறதியையறிந்து திருவுள்ளம் பூரித்து, எப்போதும் விட்டுப் பிரியகில்லாத திருநாட்டிலே இவ்வாழ்வாரைக் கொண்டுபோய் நித்யாநுபவம் பண்ணக்கருதி, ஒரு புதுமையுஞ் செய்ய வேண்டாதபடியான பரமபதத்தையும் தமக்காக அவன் கோடிக்கப்புக்கதைக் கண்டு ஈதென்ன வ்யாதோஹமோ! என்று ஈடுபடுகிறாரிதில்.

பின்னடிகளை முந்துற அந்வயித்துக்கொண்டு முன்னடிகளைப் பின்னே அந்வயித்துக்கொள்வது. ஆர்ந்த ஞானச் சடராகி அகலங்கீழ்மேலளவிறந்து நேர்ந்தவுருவாயரவாகு மிவற்றினுயிராம் நெடுமால், சார்ந்த விருவல்லவினைகளுஞ் சரித்துமாயப் பற்றறுத்துக் தீரந்து தன்பால் மனம்வைக்ககத் திருத்திவீடுதிருத்துவான் என்க. எள்ளில் எண்ணெய் போலவும் கட்டையில் தீப்போலவும் பிரிக்க முடியாதபடி பொருந்திக் கிடக்கிற பண்ய பாப ரூபமான இருவகைக் கருமங்களையும் போக்கி ருசி வாஸநைகளையுங் கழித்துத் தன்பக்கலரிலேயே நான் முழுநோக்காக மனம் வைக்கும்படி என்னைத்திருத்தி (அதாவது, நான் அயோக்கயன் என்று அகன்ற போவது தவிர்த்து அபிமுகனாம்படிசெய்து)* கலங்காப் பெருநகரமாகிய பரமபதத்திற்கும் ஒரு புதுமைசெய்து அதனைக்கோடிக்குப் புகுகின்றான். - (யாவனென்னில்;) பரிபூர்ணமான ஞான வொளியையுடையனாய், கீழும் மேலும் சுற்றிலுமுள்ள எல்லாத் திசைகளிலும் வியாபித்து அதிஸூக்ஷ்மான சேதநாசேதநங்களுக்கும் ஆத்மாவாயிருக்கிற பரமபுருஷன்.

இருவல்வினைகளும் = ‘இரு’ என்று பெருமையைச் சொன்னபடியாய் மிகப்பெரிய கொடிய பாபங்களை யெல்லாம் என்றம் பொருள்கொள்ளலாம். இருப்புவிலங்கான பாபத்÷“தாடொக்கப் பொன் விலங்கான புண்யமும் கழியுண்ண வேண்டுமாதலால் இருவகைப்பட்ட வல்வினைகளையுஞ் சரித்து என்றலும் ஏற்கும்.

பின்னடிகளில் எம்பெருமானுடைய ஸர்வஜ்ஞத்வத்தையும் வ்யாப்பதியையுஞ் சொன்னது - இப்போதுதான் அவன் தனது திருக்குணங்களையெல்லாம் ஸபலமாக நினைத்தான்போலுமென்று காட்டுகிறபடி.

 

English Translation

The Vaikunta-Lord of effulge knowledge, beyond size and shope and situation, pervades all things and beings, as the indwelling spirit of all.  Driving out my twin karmas, he cut as under my Maya-bonds, then made me set my heart on him, faithfully.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain