(2950)

உண்டா யுலகேழ் முன்னமே, உமிழ்ந்து மாயை யால்புக்கு

உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர் உவலை யாக்கை நிலையெய்தி

மண்டான் சோர்ந்த துண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்

அண்டா வண்ணம் மண்கரைய நெய்யூண் மருந்தோ? மாயோனே

 

பதவுரை

மாயோனே

-

ஆச்சரிய குணசேஷ்டிதங்களையுடையவனே!

உலகு ஏழ்

-

ஏழுலகங்களையும்

முன்னமே உண்டாய்

-

முற்காலத்திலே திருவயிற்றிலே வைத்தாய்;

உமிழ்ந்து

-

அவற்றை வெளிப்படுத்தி

சிறு மனிசர்

-

அற்பமனிதருடைய

உவலை

-

அருவருப்பான

யாக்கை நிலை

-

உடம்பினது நிலைமையை

எய்தி

-

அடைந்து

மாயையால் புக்கு

-

மாயையினால் இவ்வுலகில் வந்து சேர்ந்து

வெண்ணெய்

-

வெண்ணெயை

உண்டாய்

-

அமுதுசெய்தாய்;

மண் தான் சோர்ந்தது உண்டேனும்

-

(திருவயிற்றிலே) மண்சட்டிகள் மிச்சப்பட்டிருந்தாலும்

மனிசர்க்கு

-

மனிதர்கட்டு

ஆகும்

-

உண்டாகக்கூடியதான

பீர்

-

வெள்ளை மாந்தம்

சிறிதும்

-

அற்பமும்

அண்டாவண்ணம்

-

சேராதிருக்கும்படி

மண் கரைய

-

அந்த மண்கட்டிகள் கரைவதற்கு

நெய் ஊண் மருந்தோ

-

நெய் அமுதுசெய்தது மருந்தோ? (அல்ல.)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப் பாட்டின் ஸந்நிவேசத்தை ஊன்றி நோக்குமிடத்து எம்பெருமானுக்கும் ஆழ்வார்க்கும் விநோதமான வொரு ஸம்வாதம் நிகழ்ந்தமை நன்கு புலப்படும்.

கீழ்ப்பாட்டில் எல்லை கடந்த நைச்சியாநுஸந்தானம் பண்ணிப் பின்வாங்கின ஆழ்வாரை எம்பெருமான் நல்லதொருபாயத்தினால் தன்னோடு பொருந்துவிட்டுக் கொள்ளவேணுமென்று பார்த்து அவரோடே பேசத் தொடங்கினான்; ‘வாரீர் ஆழ்வீர்! என்னுடைய செயல்களெல்லாம் உமக்கு நன்றாய்த் தெரியுமன்றோ?’ என்றார். அவற்றை எம்பெருமான் வாய்கொண்டே கேட்கவேணு மென்னும் விருப்பமுடைய ஆழ்வார் ‘உன்னுடைய செயல் எனக்கு ஒன்றும் தெரியாது’ என்றார்.

கீழ்ப்பாட்டில் எல்லைகடந்த நைச்சியாநுஸந்தானம் பண்ணிப் பின்வாங்கின ஆழ்வாரை எம்பெருமான் நல்லதொருபாயத்தினால் தன்னோடு பொருந்தவிட்டுக் கொள்ளவேணுமென்று பார்த்து அவரோடே பேசத் தொடங்கினான்; ‘வாரீர் ஆழ்வீர்! என்னுடைய செயல்களெல்லாம் உமக்கு நன்றாய்த் தெரியுமன்றோ? என்றார். அவற்றை எம்பெருமான் வாய்கொண்டே கேட்கவேணு மென்னு’ விரும்பமுடைய ஆழ்வார் ‘உன்னுடைய செயல் எனக்கு ஒன்றும் தெரியாது’ என்றார்.

எம்பெருமான்:- இப்படி நீர் சொல்வது மெய்தானா? இப்படியும் பொய் சொல்லலாமா? இப்போது கேட்கிறேன் சொல்லும்; நான் ஒரு காலத்திலே உலகங்களெல்லாவற்றையுமெடுத்து வயிற்றினுள்ளே அடக்கிவைத்துப் பிறகு வெளிப்படுத்தினேனென்பதும் திருவாய்ப்பாடியிலேபுக்கு வெண்ணெய் விழுங்கினனென்பதும் உமது காதில் விழுந்ததில்லையா? உண்மையாகச் சொல்லும்.

ஆழ்வார்:- ஆம்; கேட்டிருப்பதுண்டு; “நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும், தளிரொளி யிமையவர் தலைவனுமுதலா, யாவகையுலகமும் யாவரு மகப்பட, நில நீர் தீ கால் சுடரிருவிசும்பும், மலர்சுடர் பிறவுஞ் சிறிதுடன் மயங்க, ஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதுமகப்படக் கரந்து, ஓராலிலைச் சேர்ந்த எம் பெருமாமாயனையல்லது, ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே” என்றும், “மத்துறுகடை வெண்ணெய்களவினில் உரலிடையாப்புண்டு” என்றும் அடியேனே சொல்லியுமிருக்கிறேனே.

எம்பெருமான்:- உன்னுடைய காரியங்களுக்கெல்லாம் காரணமறிவாரார்? ஏதோ உன் திருவுள்ளத்தில் தோன்றின காரியங்களையெல்லாம் நீ செய்து கொண்டிருக்கிறாய்; எனக்கொன்றுந் காரணந் தெரியாது.

எம்பெருமான்: - உமக்குத் தெரியாதாகில் நான் சொல்லக் கேட்கலாமன்றோ? சொல்லுகிறேன், கேளும். பிரளயங் கொள்ளாதபடி உலகங்களை வயிற்றிலடக்கி நோக்கினேன்; பிரளயம் நீங்கினவாறே அவ்வுலகங்களை வெளிப்படுத்தினேன்; உள்ளடக்கியிருந்த வுலகங்களில், வெளிப்படாமலர் உள்ளேயே மிச்சமாய் நின்றுவிட்டது ஏதேனு மிருந்தாலு மிருக்கக்கூடும்; அந்த மண்ணும் கரைந்து வெளிவந்து விட்டு மென்றே திருவாய்ப்பாடியில் வெண்ணெயும் நெய்யுமுண்டேன் காணும்.

ஆழ்வார்:- இது யாரை மயக்குகிற வார்த்தை? உலகமுண்டுமிழ்ந்து எப்போதே போயிற்று; வெண்ணெயுண்டது மற்றெப்போதோ ஆயிற்று? அதற்கு மிதற்கும் என்ன ஸம்பந்தம்?’ திண்ணைக்குத் தேள்கொட்டத் தீர்த்த மிடாவுக்கு நெறிகட்டிற்கு’ என்னுமாபோலே நல்ல கார்ய காரண பாவஞ்சொல்கிறாய் பிரானே!

எம்பெருமான்:- ‘நான் வெண்ணெயுண்டதற்கு என்ன காரணமிருக்கும், நீர் சொல்லும்’ என்றால் எனக்குத் தெரியாதென்கிறீர் உள்ள காரணத்தை நானே சொன்னாலும் இது அஸம்பாவிதமென்கிறீர். நான் சொல்லுகிற காரணம் தவறாக இருந்தால் நீர்தாம் ஆலோசித்து ஒரு காரணம் சொல்லும்.

ஆழ்வார் :- ஆச்ரிதர்களின் ஸம்பந்தம்பெற்ற வஸ்துவே உனக்குத் தாரகமாதலால் வெண்ணெயுண்டாயத்தனை; இதுதான் காரணம்; வேறு காரணம் பரமஹாஸ்யம்.

எம்பெருமான்:- ஆழ்வீர்! ஆச்ரிதர்களின் வஸ்துவே நமக்குத் தாரகமென்பதை நீர் நன்கு அறிந்திருக்கிறீரன்றோ? உம்முடைய உடலும் எனக்கு அந்த வெண்ணெய் போன்றதே காணும்; இதுவே எனக்குத் தாரங்காணும்; ஆனபின்பு நீர் உம்மைக்கொண்டு அகல்வீராகில், திருவாய்ப்பாடியில் வெண்ணெயூரண் விலக்கினார்ப்புக்க லோகம் புகுவீரத்தனை; இனி நம்மை அணுகப்பாரும்.

இங்ஙனம் எம்பெருமான் சோதிவாய் திறந்து சொல்லிவிட்ட பின்பு மேலே ஒன்றும் வாய்திறக்க வழியில்லாத ஆழ்வார் எம்பெருமானது கருத்தைத் தாம் அறிந்தமை தோற்றவும் மேலே காட்டின ஸம்வாதம் வெளிப்படவும் பாங்காக இப்பாசுரமருளிச் செய்கிற அழகு பாரீர். இவ்வளவு அழ்ந்த கருத்தை அழகாகக் கண்டுபிடித்து வியாக்கியானங்கள் அமைந்தருளின பூருவாசாரியர்களின் மதிக்கு மண் விண்ணெல்லாங்கூடியும் விலைபோகுமோ?

உண்டாயுலகேழ்முன்னமே = முடிவில் மஹா ப்ரளயப் பெருங்கடல் வெள்ளத்தில் உலகங்களெல்லாம் அழியப்புக. திருமால் அவற்றையெல்லாம் தனது விசித்திர சக்தி விசேஷத்தாலே சிறிய திருவயிற்றிலே விசாலமாக இருத்தி ஆதிசேஷாம்சமான சிறிதோர் ஆலந்தளிரிலே யோகநித்திரை புரிவதாகவும், அவ்வுலகங்களைப் பிரளயம் நீங்கினபின் வெளிப்படுத்துவதாகவும் நூற்கொள்கை. இங்கு ‘முன்னமே’ என்றதனால் வெண்ணெ யுண்டதற்கு எம்பெருமான் இயம்பின காரணம் அஸம்பாவிதமென்று ஆழ்வார் மறுத்தமை காட்டப்பட்டது. ‘நெய்யூண் மருந்தோ?’ என்றதனால், ‘வெண்öணேய்நெய் முதலியனவற்றை பூண்டது மண் கரைவதற்கு மருந்தாக எம் பெருமான் கூறினனென்பது விளங்கும்.

வெண்ணெய் திருடி அமுது செய்ய விரும்பி அதற்காக இக்ஷ்வாகு வம்சத்திலே க்ஷத்ரிய குமாரனாய்ப் பிறந்தால் அது கிட்டாதேயென்று க்ஷுத்ரரான மனிசருடைய ஹேமமான சரீரத்தின் நிலையை அப்ராக்ருததிவ்யஸம்ஸதாநத்துக்கு உண்டாக்கிக் கொண்டுவந்தாய் என்பது இரண்டாமடியின் கருத்து.

மண்தான் சோர்ந்ததுண்டேலும் = பிரமளயத்தில் உள்ளடக்கிவைத்த உலகங்களைப் பிறகு வெளிப்படுத்தியபோது உள்ளே சில மண்கள் நின்றிருக்கலாம்; ஆனால் அந்த மண் கரைவதற்காக நெய்யும் வெண்ணெயு முண்டேனென்று நீ சொல்வது பொருந்தாது என்கிறார்.

“மணிசர்க்கு ஆகும் பீர் சிறிது மண்டாவண்ணம்” என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறுவர். இந்த வாக்கியத்தை ‘மண்கரைய’ என்பதனோடு அந்வயித்துப் பொருள் கொள்வது ஒரு பக்ஷம்; ‘நெய்யூண்’ என்பதனோடு அந்வயித்துப் பொருள் கொள்வது மற்றொரு பக்ஷம். முந்தின பக்ஷத்தில், பீர் நிற வேறுபாட்டுக்குப் பெயர். (வைவர்ணிய மெனப்படும்.) வயிற்றினுள்ளே மண் தங்கினால் மனிசர்கட்கு நிறவேறுபாடு உண்டாவது இயல்புதானே; இப்படிப்பட்ட நிறவேறுபாடு உண்டாகாமல் மண் கரைவதற்காக என்றபடி.

மற்றொரு பக்ஷத்தில், சிறிதும் என்பதற்கும் பீர் என்பதற்கும் அர்த்தம் ஒன்றே. மனிசர்க்கு ஆகும்படியாக மிகச் சிறிதளவுகூட நெய் மிச்சப்படாதபடி அமுது செய்வதோ மருந்து? என்றவாறு.

‘மருந்தோ’ என்ற ஓகாரம். அன்று என்ற பொருளைத்தரும். “யோனே, என்றது ஆச்ரிதரின் ஸம்பந்தம்பெற்ற பொருளாலன்றி வேறொன்றால் தரிப்புறாதபடியான வ்யாமோஹத்தாதே வெண்ணெய் நெய்யு முண்டாய் என்ற குறிப்பு. அப்படிப்பட்ட வ்யாமோஹத்தினால் தான் உம்மையும் விரும்புகின்றேனென்று எம்பெருமானுரைத்தது உள்ளுறை.

 

English Translation

O Lord who swallowed the seven worlds, and brought them out again! What a wonder, that you took birth as child Krishna, and ate butter by stealth, leaving not a trace behind!  Was it expellant medicine for a little earth that had remained inside you?

 

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain