(2948)

வினையேன் வினைதீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா!

மனைசே ராயர் குலமுதலே மாமா யன்னே மாதவா!

சினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா!

இனையா யினைய பெயரினாய் என்று நைவன் அடியேனே!

 

பதவுரை

வினையேன்

-

பாபியான என்னுடைய

வினைதீர்

-

பாபத்தை ஒழிப்பதற்குரிய

மருந்து ஆனாய்

-

ஔஷமாயிருப்பவனே!

விண்ணோர் தலைவா

-

நித்யஸூரிநாதனே!

கேசவா

-

கேசவனே!

மனைசேர்  ஆயர் குலம் முதலே

-

குடிசைகளில் பொருந்திய இடையருடைய குலத்திற்கு முதல்வனானவனே!

மாமாயனே

-

மிகுந்த ஆச்சரிய குணசேஷ்டிதங்களையுடையவனே!

மாதவா

-

மாதவனே!

சினை ஏய் தழைய மராமரங்கள் ஏழும்

-

கிளைகளோடு சேர்ந்து தழைகள் பொருந்திய ஆச்சாமரங்களை÷ழையும் (ஸ்ரீராமாவதாரத்தில்)

எய்தாய்

-

(ஓர் அம்பினால்) துளைபடுத்தினவனே!

கிரீதரா

-

ஸ்ரீதரனே!

இளையாய்

-

இப்படிப்பட்ட ஸ்வரூபத்தையுடைவனே!

இனைய பெயரினாய்

-

இப்படிப்பட்ட திருநாமங்களையுடையவனே!

என்று

-

என்று சொல்லி

அடியேன் நைவன்

-

நான் அழியா நின்றேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாசுரமும் கீழ்ப்பாசுரத்தோடு ஒக்கும். கீழ்ப்பாட்டிலுள்ள ‘நீயருளாய உன்தேனேமலருந் திருப்பாதஞ் சேருமமாறு வினையேனே’ என்பதை இப்பாட்டோடு கூட்டி உரைத்தருளினர். திருக்குருகைப் பிரான்பிள்ளான். ஆதலால் கீழ்ப்பாட்டில் அவதாரிகையே இதற்குமாகும்.

நைச்சியாநுஸந்தானம்பண்ணி அகன்றது தவிர்ந்து அணுகி அபேக்ஷித்தபோதே எம்பெருமான் முகங்காட்டாமையாலே அவனுடைய குண சேஷ்டிதங்கள் நினைவுக்குவந்து நலிய, திருவுள்ளமுடைந்து பேசுகிறார் என்னவுமாம்.

என்னிடத்துள்ள நீசத்தன்மையைநோக்கி அகன்றுபோக நினைத்த என் பவினையை ஸௌசீல்யகுண ப்ரகாசநத்தாலே போக்கி என்னை அபிமுகனாக்கிக் கொண்டவனே! என்ற கருத்துப்பட வினையேன் வினை தீர்மருந்தானாய் என்கிறார். நைச்சியம் பாவித்து அகலாதே நித்யாநுபவம் பண்ணிக்கொண்டிருக்கிற நிதய் முக்தாகளின் திரளிலிருந்து, என்னை சீலகுணத்தாலே அகப்படுத்திக்கொள்ள இங்கு வந்தவனே! என்கிறார் விண்ணோர்தலைவா! என்பதனால்.

கேசவா = இத் திருநாமத்திற்கு மூவகைப் பொருள்களுண்டு! க இதி ப்ரஹமணோ நம ஈசோஹவ் ஸர்வ தேஹிநாம்* என்று ஹரிவம்சத்திலுள்ள நிருக்தியின்படியே பிரமனுக்கும் சிவனுக்கும் நிர்வாஹகன் என்பது ஒருபொருள். (க்ருஷ்ணாவதாரத்தில்) குதிரை வடிவுகொண்டு கம்ஸ ப்ரேரணையால் நலியவந்த கேசியென்னும் அஸுரனை வதஞ்செய்தவன் என்பது மற்றொரு பொருள். சிறந்த மயிர்முடியை யுடையவன் என்பது மற்றொரு பொருள்.

மனைசேராயர்குலமுதலே! மா மாயனே = இடைக்குலத்திலே வந்து பிறந்து. அவர்கள் தங்களுடையதாக அபிமானித்த பொருளையே (வெண்ணெய் முதலியவற்றையே) தாரகமாகக் கொண்டு, அதுதன்னைத் திருடி அமுது செய்யவேண்டும்படியாய், அந்தக் களவையும் ஜரிப்பித்துக்கொள்ளமாட்டாதே வாயது கையதாக அகப்பட்டுக் கண்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலையை விவக்ஷித்து இந்த இரண்டு விளிகள் இடப்பட்டன. ‘மனைசேர்’ என்ற அடைமொழி ஆயர் குலத்துக்குமாகலாம், ஆயர்குல முதல்வனுக்குமாகலாம்; முதற் பக்ஷத்தில், மனையோடு மனைசேர்ந்து எண்ணிறந்துள்ள ஆயர் குலத்திலே முதற் கிழங்காக வந்தவனே! என்படி இரண்டாவது பக்ஷத்திலே, விண்ணோர் மனையைவிட்டு ஆயர்மலையிலே வந்து சேர்ந்தவனான ஆயர்குலமுதலே! என்றவாறு.

சினையேய்தழைய மராமங்களேழுமெய்த வரலாறு:- ஸுக்ரீவன் இராமனால் அபயப்ரதானஞ் செய்யப்பெற்ற பின்பும் மனந் தெளியாமல் வாலியின் பேராற்றலைப் பற்றிப் பலவாறு சொல்லி வாலி மராமரங்களைத் துளைத்ததையும், துந்துபியின் உடலெழும்பை ஒரு போஜனை தூரந் தூக்கியெறிந்ததையுங் குறித்துப் பாராட்டிக் கூறி, இவ்வாறு பேராற்றலமைந்தவனை வெல்வது கூடுமோ? என்று சொல்ல, அது கேட்ட லக்ஷ்மணன் ‘உனக்கு நம்பிக்கை இல்லையாயின் இப்போது என்ன செய்யவேண்டுவது?, என்ன; ஸுக்ரீவன், ‘இராமபிரான் நீறுபூத்த நெருப்புப்போலத் தோன்றினும் வாலியின் வல்லமையை நினைக்கும்போது சங்கையுண்டாகின்றது; ஏழு மராமரங்களைத் துளைத்து இந்தத் துந்துபியின் எலும்பையும் இருநூற விரற்கடைதூரம் தூக்கி யெறிந்தால் எனக்கு நம்புதலுண்டாகும்’ என்று சொல்ல; ஸுக்ரீவனுக்கு நம்புதலுண்டாகுமாறு அவனது வார்த்தைக்கு இயைந்து இராமபிரான் துந்துபியின் உடலெலும்புக் குவியலைத் தனது காற்கட்டை விரலினால் இலேசாய்த் தூக்கிப் பத்து போஜனை தூரத்துக்கு அப்பால் எறிய, அதனைக் கண்டு ஸுக்ரீவன் ‘முன்பு உலராதிரக்கையில் வாலி இதனைத் தூக்கியெறிந்தான்; இப்போது உலர்ந்துவிட்ட இதனைத் தூக்கியெறிதல் ஒரு சிறப்பன்று’ என்று கூற பின்பு இராமபிரான் ஒரு பாணத்தை ஏழு மரங்களின்மேல் ஏவ, அது அம்மரங்களைத் துளைத்ததோடு ஏழுலகங்களையும் துளைத்துச் சென்று மீண்டும் அம்பறாத்தூணியை அடைந்தது என்பதாம்.

இங்கு, மராமரங்களுக்கு சினையேய்தழைய என்று அடைமொழி கொடுத்தது இராமபிரானுடைய வல்லமையின் கனத்தைக்காட்டும். கிளைகளோடு கிளைகள் நெருங்கித் தழைத்து நினைத்தபடி இலக்குக் குறிக்க வொண்ணாதபடி நின்ற மராமரங்களையும் அவலீலையாகத் துளைபடுத்தின னென்க. ‘நம்மை ரக்ஷிப்பனோ மாட்டானோ’ என்று அடியார்க்குச் சங்கை பிறந்தால், அந்த சங்கையைப் போக்கி அரியன செய்தும் அடியாரைக் காத்தருள்பவன் என்ற மஹாகுணம் இந்தச் சரிதையினால் விளங்கும்.

சிரீதரா! என்றது மராமரங்களேழையும் எய்து நின்றபோது உண்டான வீரஸ்ரீயின் ஸம்ச்லேஷத்தைச் சொன்னபடி.

இனையாய் = இன்னமும் இப்படிப்பட்ட பலவகையான சேஷ்டிதங்களையுடையவனே! என்றபடி. இளையபெயரினாய் = அந்த சேஷ்டிதங்களைத் தெரிவிக்கினற் திருநாமங்கள் இங்ஙனே மற்றும் பலவும் வாய்ந்தவனே என்றபடி. (என்று தைவன் அடியேனே.) அருளாய், இரங்காய் என்றாப்போலே சில வினைமுற்றுக்களைக் கூட்டிப் பேசவும் மாட்டாதே திருநாமங்களைச் சொன்னமாத்திரத்திலயே நைந்து போகின்றேனடியேன்; இப்படிப்பட்ட என்னை இன்னமும் சிக்ஷியாதே கடுக உன்தனே மலரருந்திருப்பாதஞ் சேருமாறு அருளாய்.

 

English Translation

O Madava, Lord who entered the cowherd-fold and became their chief!  O Kesava, Lord of celestials, you are the medicine and cure for my despair!  O Sridhara, you shot an arrow piercing seven dense trees!  O Lord of many great acts and many names, I call and swoon calling you!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain