(2931)

அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் றன்னை,

அமர்பொழில் வளங்குரு கூர்ச்சடகோபன் குற்றேவல்கள்,

அமர்சுவை யாயிரத் தவற்றினு ளிவைபத்தும் வல்லார்

அமரரோ டுயர்விற்சென் றறுவர்தம் பிறவியஞ் சிறையே.

 

பதவுரை

அமரர்

-

தேவர்கள்

தொழுது எழ

-

ஸேவித்து விருத்தியையடைய

அமரர்

-

பொருந்தின

பொழில் வளம்

-

சோலைவளமுள்ள

குருகூர்

-

திருக்குருகூரில் அவதரித்த

சடகோபன்

-

ஆழ்வாருடைய

குற்றேவல்கள்

-

(வாக்கினாலாகிய) கைங்கரியமான

அமரர் சுவை

-

சுவையமைந்த

ஆயிரத்து அவற்றினுள்

-

ஆயிரம் பாடலுக்குள்

அலைகடல்

-

அலையெறிகின்ற திருப்பாற்கடலை

கடைந்தவன் தன்னை

-

கடைந்தவனான ஸர்வேச்வரனைக் குறித்து

இவை பத்தும்

-

இந்தப் பத்துப் பாசுரமும்

வல்லார்

-

கற்கவல்லவர்கள்

அமரரோடு

-

நித்யஸூரிகளோடு

உயர்வில்

-

பரமபதத்தில்

சென்று

-

சேர்ந்து

தம்பிறவி

-

தம் பிறப்பாகிற

அம் சிறை

-

உறுதியான பந்தத்தில் நின்றும்

அறுவர்

-

நீங்கப்பெறுவர்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருவாய்மொழி வல்லவர்கள் நித்யஸூரிகளோடொக்க உயர்த்தியைப் போய்ப்பெற்று ஸம்ஸார ஸம்பந்தமறப் பெறுவரென்று பலன் சொல்லிக்காட்டுகிற பாசுரம் இது.

அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன்தன்னை = தேவர்கள் வணங்கி வேண்டினவளவிலே அவர்களது வேண்டுகோளுக்கிரங்கி அலைகடல் கடந்தவன் என்றும் பொருள்கொள்ளலாம். அமரர்கள் தொழுதெழும்படியாக அலைகடல் கடைந்தவன் என்றும் பொருள் கொள்ளலாம். முதற்பொருளில் (தொழுதெழ என்பது) இறந்தது தழுவிய வினையெச்சம்; இரண்டாம் பொருளில் எதிர்காலந் தழுவி வினையெச்சம். இரண்டாம் பொருளையே ஆசாரியர்கள் இனிதாகக் கொள்ளுபவர்கள். கடல்முகமாகக் கவிழ்ந்து கொண்டு ‘உப்புச்சாறு எப்போது கிளரப் போகிறதோ!’ என்று தங்களுணவையே நோக்கிக் கொண்டிருந்த ப்ரயோஜநாந்தரபரமான தேவஸமூஹமுங்கூட, தோளும் தோள்மாலையுமாய் ஒரு கடல் ஒரு கடலை நின்று கடையுமாபோலே கடைந்த அழகுக்குத் தோற்றுப் பரவசமாய் வணங்கும்படியாக என்றவாறு. இதனால் விமுகரையும் ஈடுபடுத்தவல்ல அழகுடைமை சொல்லிற்றாகிறது.

இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயமாக, சோலை வளம் பொருந்திய திருக்குருகூர்க்குத் தலைவரான ஆழ்வார் வாக்கினாலடிமை செய்தபடியான, ரஸமே வடிவெடுத்த திருவாய்மொழி யாயிரத்தினுள்ளும் இப்பத்துப் பாசுரங்களை ஓதவல்லார் நித்யஸூரிகளொடொத்த உயர்த்தியையுடையராய்த் தங்களுடைய பிறப்பாகிற விலங்கு விட்டகலப் பெறுவர்கள் என்றதாயிற்று.

 

English Translation

This decad of the sweet thousand songs by satakopan of dense-groved wealthy kulugur addresses the celebrated Lord of celestials, who churned the mighty ocean. Those who master if will rejoice in heaven.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain