(2927)

ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற,

நன்றெழில் நாரணன் நான்முகன் அரனென்னு மிவரை,

ஒன்றநும் மனத்து வைத் துள்ளிநும் இருபசை யறுத்து,

நன்றென நலஞ்செய்வ தவனிடை நம்முடை நாளே.

 

பதவுரை

ஒன்று என

-

ஒன்றென்றும்

பல என

-

பலதென்றும் (அதாவது

ஒருவர் பிரதானனென்றும் பலர் பிரதானனென்றும்)

அறிவு அரு

-

அறிதற்கு அரிதான

வடிவினுள்

-

உருவுக்குள்ளே

நின்ற

-

நிலைத்திருக்கிற

நன்று

-

விலக்ஷணமான

எழில்

-

கல்யாண குணங்களாலே பிரகாசிக்கிற

நாரணன்

-

ஸ்ரீமந்நாராயணன்

நான்முகன்

-

பிரமன்

அரன்

-

ருத்ரன்

என்னும் இவரை

-

என்கிற இத்தெய்வங்களை

ஒன்ற

-

மத்யஸ்தத்ருஷ்டியாக

நும் மனத்து வைத்து

-

உங்களது நெஞ்சில் வைத்து

உள்ளி

-

(அவர்களை ஸ்வரூபஸ்வ பாவங்களை ப்ராமணங்கொண்டு) ஆராய்ந்து

நும்

-

உங்களுக்குண்டான

இரு சபை அறுத்து

-

இருவர் திறத்திலாகம் ஈச்வரபுத்தியை யொழித்து

அவனிடை

-

அந்த நன்றெழில் நாராயணன் பக்கலிலே

நம்முடை

-

நம்முடைய

நாள்

-

வாழ்நாளில்

நன்று என

-

நன்றாக

நலம் செய்வது

-

பக்தி பண்ணுதற்கு உரியது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆராய வேண்டியபடியை விசதமாகவுபதேசித்து விரைவாக ஆச்ரயியுங்கோளென்கிறாரிப்பாட்டில்.

ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற = அரி அயன் அரன் என்கிற மூன்று மூர்த்திகள் பிரதானவர்களாய், மூவர்க்கும் மூன்று சரீரங்களிலும் ஒரு ஆத்மாவே உள்ளானோ? அன்றியே, மூன்றிலும் மூன்று சேதநர் தனித்தனி புகுந்து நிற்கின்றனரே? என்று ஸந்தேஹம்வரின் நிர்ணயம் பெற முடியாதபடி யிருக்கின்ற வடிவையுடையவரான நாராயணன் நான்முகன் அரன் என்கிற மும்மூர்த்திகளையும் நிஷ்பக்ஷ பாதமாக நெஞ்சிலேகொண்டு ஆராய்ந்து பார்க்கவேணும்; அங்ஙனம் பார்த்தவாறே அவற்றுள் ஒரு மூர்த்தியை முக்கியமாகவும் மற்ற இரு மூர்த்திகள் அமுக்கியமாகவும் புலப்படும்; அப்போது, அவ்விரு மூர்த்திகளின் பக்கலிலே நம்முடைய வாழ்நாளில் விரைவாக அநந்யப்ரயோஜநமான பக்தியைச் செலுத்தப்பார்ப்பது என்றாராயிற்று.

மூன்றாமடியில், ஒன்ற என்றது நிஷ்பக்ஷாபாதமாக என்றபடி. ஆராய்வதற்கு முன்னே விஷ்ணுவுக்கே சிறப்பு வேணுமென்றாவது, மற்ற இருவர்க்கே சிறப்பு வேணுமென்றாவது ஆக்ரஹம்கொள்ளாமல் பிரமாணகதியின்படியே எங்ஙனம் தேறுகின்றதோ அங்ஙனம் கொள்வதே கடமையென்று தேறி என்பது கருத்து. இருசபையறுத்து = இரு மூர்த்திகளிலேயுள்ள பசையை யறுத்து என்றபடி.

 

English Translation

He pervades all forms, eluding count as one or as many.  He is the radiant Narayana, the four-faced Brahma and Siva.   Hold him in your hearts with steady devotion, shed all desires and serve him alone, that is the only good.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain