(2923)

அமைவுடை யறநெறி முழுவது முயர்வற வுயர்ந்த,

அமைவுடை முதல்கெடல் ஒடிவிடை யறநில மதுவாம்,

அமைவுடை யமரரும் யாவையும் யாவரும் தானாம,

அமைவுடை நாரணன் மாயையை யறிபவர் யாரே?

 

பதவுரை

அமைவு உடை

-

நல்ல பலபரிபாகத்தையுடைத்தான

அறம் நெறி முழுவதும்

-

தருமமார்க்கம் எல்லாவற்றாலும்

உயர்வு அற உயர்ந்து

-

இதற்கு மேல் உயர்த்தியில்லை என்னும்படியாக மிகவுமுயர்ந்தவர்களாகி

அற

-

மிகவும்

நிலம் அது ஆம்

-

கைவந்திருக்கப் பெறுவதாகிற

அமைவு உடை

-

சதிரையுடையரான

அமரரும்

-

பிரமன் முதலிய தேவர்களும்

யாவையும்

-

எல்லா அசேதனங்களும்

அமைவு உடை

-

(ஆச்சரியப்படத்தகுந்த அமைதியையுடைய

முதல் ஸ்ருஷ்டியென்ன

கெடல்

-

ஸம்ஹாரமென்ன

யாவரும்

-

எல்லாச் சேதனர்களும்

தான் ஆம்

-

தானேயாம்படியான

அமைவு உடை

-

பொருத்தம் பொருந்திய

நாரணன்

-

நாராயணனுடைய

மாயையை

-

அவதார ரஹஸ்யத்தை

யாரே அறிபவர்

-

ஆர் தாம் அறியவல்லார்? (ஆருமில்லை)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய அவதாரஹஸ்யம் ஒருவர்க்கும் அறியவொண்ணாததென்கிறது இப்பாட்டில். முதலடியில் அமைவுடை யென்று தொடங்கி, மூன்றாமடியில் அமைவுடை என்னுமளவும் அமரர்க்கு (விசேக்ஷகுணம்) அடைமொழி.

அமைவுடையறநெறி முழுவது முயர்வறவுயர்ந்து = ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களுக்குக் கடவரான பிரமன் முதலிய அமரர்கள் என்றும் இடையூறென்றுமிக்கி ஸபலங்களாக தருமங்கள் எல்லாவற்றாலும் மேற்பட்டவர்களாம்.

அவர்கள் இன்னமும் எப்படிப்பட்டவர்களென்னில்; அமைவுடை முதல் கெடல் ஓடி விடையறநிலம துவாரமமைவுடையர் = முதல் என்று ஸ்ருஷ்டியைச் சொல்லுகிறது; கெடல் என்று ஸம்ஹாரத்தைச் சொல்லுகிறது. ஓடிவிடை என்பது ‘இடையொடிவு’ என்றாகி அவாந்தரஸம்ஹாரத்தைச் சொல்லுகிறது. ஆகிய இக்காரியங்கள், அற - மிகவும், நிலமதுவாம் அமைவுடை = கைவந்திருக்கும் பூர்த்தியை யுடையார் என்றபடி.

அமரரும் யாவையும் தானாமவையுடை நாரணன் = கீழ்ச்சொன்ன கடவுளர்களென்ன, ஸகல அசேதநப் பொருள்களென்ன, மற்றுமுள்ள ஸகல சேதனப்பொருள்களென்ன, ஆகிய எல்லாம் தான் என்கிற சொல்லுக்குள்ளே அடங்கும்படியான அமைதியையுடையனாய், இதுபற்றியே நாராயணனென்னுந் திருநாமம் படைத்தவனான எம்பெருமானுடைய என்றபடி.

மாயையையறிபவர்யாரே? =  இப்படிப்பட்ட எம்பெருமானுடைய அவதார ரஹஸ்யம் ஒருவர்க்கும் அறியப்போகாதென்றவாறு. மாயையென்று ஆச்சரியமாய், தனக்குப் புத்திர ப்ராயர்களான தசரத வஸுதேவாதிகளைத் தனக்குத் தந்தையராகக் கொண்டு, அவர்கள் என்மகனென்று அபிமானிக்கும்படி வந்து பிறந்த ஆச்சரியத்தை ஆரும் அறியகில்லார் என்று முறைப்ப.

யாரே அறிபவர்? = நித்யஸூரிகள் பரத்வாநுபவத்திலே போதுபோக்கு கையாலே இதனை அறியார்கள்; ஸம்ஸாரிகள் உண்டியே உடையே உகந்தோடு மலர்களாகையாலே அறியார்கள்; ஸம்ஸாரிகள் உண்டியே உடையே உகந்தோடு மலர்களாகையாலே அறியார்கள்; மயர்வற மதிநலமருளப் பெற்ற ஆழ்வார்களோ மோஹித்துக் கிடப்பர்கள்; ஆகையாலே ஒருவருமறியார்கள்.

 

English Translation

Who can comprehend the wonders of Narayana? He bears the highest good of Vedic sacrifice. Forever the creates, destroys, and plays between the two. He contains the gods, and the livin and the lifeless.

 

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain