(2920)

சேர்த்தடத் தென்குரு கூர்ச்ட கோபன்சொல்

சீர்த்தொடை யாயிரத்து ஓர்த்தவிப் பத்தே.

 

பதவுரை

சேர் தடம்

-

செறிந்த தடாகங்களையுடைய

தென் சுருகூர் சடகோபன் சொல்

-

திருநகரியில் அவதரித்த நம்மாழ்வார் அருளிச் செய்த

சீர் தொடை

-

கவியுறுப்புக்களெல்லாம் நன்கு அமையப்பெற்ற

ஆயிரத்து

-

ஆயிரத்தினுள்ளே

இ பத்து

-

இப்பத்துப் பாசுரமும்

ஓர்த்த

-

ஆராய்ந்து சொல்லப்பட்டது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருவாய்மொழி வாய்வந்தபடி சொல்லிற்றன்று, சேதநருடை ஹிதத்துக்கீடாக ஆராய்நது சொல்லபட்டதென்று நிகமனஞ் செய்கிற பாசுரம் இது.

சேர்த்தடத் தென் குருகூர்சடகோபன்சொல் = இங்கு ஈடு முப்பத்தாறாயிரப்படியில் “சேர்த்தடம் என்கிற வித்தைச் சேர்தடமாக்கி” என்றருளிச் செய்யப்பட்டுள்ளது. இலக்கணப்படிக்குச் சேர்தடமென்று இயல்பாகவே யிருக்கவேண்டுமல்லது சேர்த்தடமென்ற தகரவொற்று மிகவேண்டிய அவசியமில்லை; ஆனாலும் மற்ற மூன்றடிகளிலும் இதே ஸ்தானத்தில் வல்லொற்றுமிக்கிருப்பதனால் அதற்கிணங்க முதலடியிலும் மிக்கது; சொற்செறிவு அங்ஙனமிருந்தாலும் பொருட் சேர்த்திக்கு ஏற்பத் தகர வொற்று இன்றியே கொள்க என்கிறார் நம்பிள்ளை.

பாட்டின் முதலிலுள்ள சேர் என்பதை வினைமுற்றாகவுங் கொள்ளலாம். இப்பத்தே சேர் - இப்பத்துப்பாட்டையும் சேருங்கள், (அதாவது) அனுஸந்தானஞ் செய்யுங்கள் என்றபடி, முதற்பாட்டில் வீடுமின் என்ற பன்மைக்குச்சேர இங்கும் பன்மையாகவே பொருள்கொள்ள வுரியது.

 

English Translation

This decad of the thousand are the considered words bySatakapan Kurugur, surrounded by watere fields.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain