(2919)

எண்பெருக் கந்நலத்து ஒண்பொரு ளீறில

வண்புகழ் நாரணன் திண்கழல் சேரே.

 

பதவுரை

எண் பெருக்கு

-

எண்ணிக்கை பெருகிக் கொண்டேயிருக்கும்படி அளவிறந்த

அ நலத்து

-

அப்படிப்பட்ட ஞானம் முதலிய குணங்களையுடைய

ஒண் பொருள்

-

சிறந்த பொருளாகிய ஜீவாத்மவர்க்கத்தையும்

ஈறு இல

-

முடிவில்லாத

வண் புகழ்

-

திருக்கல்யாண குணங்களையும் உடையனான

நாரணன்

-

நாராயணனுடைய

திண் கழல்

-

(அடியாரை ஒருநாளும்) கைவிடகில்லாத திருவடிகளை

சேர்

-

ஆச்ரயிப்பது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழே ஆழ்வார் உபதேசித்தபடியே யெல்லாங்கேட்ட  ஸம்ஸாரிகள் “ஆழ்வீர் அப்படியே செய்வோம்; எம்பெருமானைப் பஜிப்போம்; பஜநத்திற்கு ஆலம்பனமாக ஒரு மந்த்ரம் வேணுமே அது என்ன மந்த்ரம்?’ என்ன, அந்த மந்த்ரம் இன்னதென்று தெரிவித்தருளுகிறாரிப்பாட்டில் நாராயணத் திருநாமத்தின் பொருளை அனுஸந்தானஞ் செய்து கொண்டே அத்திருநாமத்தை வெளியிட்டருளுகின்றார் காண்மின்.

இப்பாசுரம் திருமந்த்ரார்த்தம் என்னமிடம் ஆழ்வானுடைய இதிஹாஸத்தினால் நன்கு விளங்கும்; அது வருமாறு:- அழகியமணவாளனுடைய அநுகிரஹத்தினால் ஆழ்வானுக்கு இரண்டு திருக்குமாரர்கள் திருவவதரிக்க, ஆழ்வான் அக்குமாரர்கட்கு நாமகரணம் முதலியன செய்வித்தற்கு உடையவர் கடவரென்று எண்ணித் தாம் ஒன்றுஞ் செய்யாதிருக்க, நம்பெருமாள் திருவருளால் ஆழ்வானுக்கு உபய குமாரர்கள் அதித்ததாகப் பெருமகிழ்ச்சி கொண்டிருந்த ஸ்ரீபாஷ்யகாரர் அக்குழந்தைகள் பிறந்த பதினோரா நாளிலே சிஷய வர்க்கத்ததுடன் ஆழ்வான் திருமாளிகைக் கெழுந்தருளித் தமது பிரதான சிஷ்யர்களில் ஒருவரான எம்பாரை நோக்கிக் ‘குழந்தைகளை எடுத்துக்கொண்டு வாரும்’ என்ன, அவர் அங்ஙனமே பிரபன்ன குலக்கொழுந்தான அக்குழந்தைகளை எடுத்துவரும்போது த்ருஷ்டி தோஷாதிகள் தாங்காதபடி ரக்ஷையாக த்வயமென்னும் மந்த்ரரத்னத்தை அநுஸந்தித்து வாழ்த்திக் கொண்டே வந்து குழந்தைகளை எம்பெருமானாருக்குக் காட்டினார். அவர் மிக்க களிப்புடனே ஆனந்தக் கண்ணீர் துளிக்கத்  தம் திருக்கண்களால் குளிரக் கடாக்ஷிக்கும்போது அத்தெய்விக சிசுக்களின் தேஜோ விசேஷத்தைக்கண்டு வியப்புக்கொண்டு ‘எம்பாரே! இக்குழந்தைகளிடம் த்வயம் பரிமளிக்கின்றேதே, அங்ஙனம் ஆகுமாறு என்செய்தீர்?’ என்று வினவ; எம்பார் ‘குழந்தைகட்கு காப்பாக த்வாயாநுஸந்தானஞ் செய்துகொண்டு வந்தேன்’ என்று சொல்ல, உடையவர் அப்படி எம்பார் காப்பிட்டதற்கு உகந்து அவரைப்பார்த்து ‘நீர் இக்குழந்தைகள் உய்யும்வகையை நாடிச் செய்தற்கு முற்பட்டீராதலால் இவர்கட்கு நீரே ஆசார்யாகக் கடவீர்’ என்ற நியமித்துவிட்டார். இக்குமாரரிருவர்க்கும் ஒருகால் கூரத்தாழ்வான் திருவாய்மொழிப்பொருள் சொல்லிவரும் போது,  எண்பெருக்கந்நலத்து இத்தயாதியான இந்தப்பாசுரம் வந்தவளவிலே இது திருமந்திரார்த்தத்தை விவரிக்கிறதாதலாலும் மந்த்ரார்த்தம் ஆசார்யரிடத்திலேயே கேட்டறியவேண்டியதாதலாலும் அதனை அவர்கட்குச் சொல்லாது நிறுத்தி ‘இதனை உங்கள் ஆசார்யர் பக்கலிலே கேட்டுக் கொள்ளுங்கள்’ என்று சொல்ல, அதனை விரைவில் அறிந்துகொள்ளவேணு மென்னும் அவாவினால் உடனே அவர்கள் எழுந்து தங்கள் ஆசார்யரான எம்பார் எழுந்தருயியிருக்குமிடத்தைக் குறித்துப் போகவுக்கவளவில், ஆழ்வான் யாக்கை நிலையாமயைத் திருவுற்றத்திற் கொண்டு அவர்களை யழைத்து, ‘இன்னபோது இன்னாரிப்பர் இன்னார் போவாரென்று தெரியாது, ஆதலால் இருந்துகேளுங்கள்’ என்று திருமந்திரத்தைச் சொல்லி இப்பாட்டின் பொருளையும் விவரித்து, இப் பாசுரத்தைத் திருமந்திரத்தின் அர்த்தமாக நினைத்திருங்கள்’ என்று பணித்தருளினார் - என்பதாம்.

ஈறிலான ஆத்மாக்களையும் ஈறிலவான கல்யாணகுணங்களை யுமுடையனாகையாயிற்று நாராயணனாகையாவது. அப்படிப்பட்ட நாராயணனுடைய திண்கழர்சேர் = அடியவர்களை ஒரு நாறுங் கைவிட மாட்டாத திருவடிகளைச் சேருங்கள் என்றவாறு. இப்பாட்டில் விளி வருவித்துக்கொள்வது.

 

English Translation

Unite with the feet of the glorious Narayana, Lord of countless virtues.  Lord of incomparable good.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain