(1916)

அடங்கெழில் சம்பத்து அடங்கக்கண்டு ஈசன்

அடங்கெழி லஃதென்று--அடங்குக வுள்ளே..

 

பதவுரை

அடங்கு எழில்

-

முற்றிலும் அழகியதான

சம்பத்து அடங்க

-

(எம்பெருமானுடைய) விபூதியை எல்லாம்

கண்டு

-

பார்த்து

அடங்க

-

அதெல்லாம்

ஈசனஃது

-

எம்பெருமானுடையதான

எழில் என்று

-

ஸம்பத்து என்று துணிந்து

உள்ளே

-

அந்தப்பகவத் விபூதிக்குள்ளேயே

அடங்குக

-

சொருகிப்போவது

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில், எம்பெருமான் அடியார்களோடு புரையேறக் கலந்து பழகுவதையே இயல்வாகவுடையவனென்றார்; அவன் அப்படியிருந்தாலும், உண்மையில் அளவிடமுடியாத உபயவிபூதிச் செல்வத்தையுடையவனாயிருக்கையாலும் நாம் மிகப் புல்லியராயிருக்கையாலும் அவனோடு நமக்குச் சேர்த்தி எளிதாயிராதே; கடலிலே புகுந்த ஒரு துரும்பானது அலைமேல் அலையாகத் தள்ளுண்டுவந்து கரையில் சேருகிறார்போலே அப்பெருமானது ஐச்வரிய அலைகள் நம்மைத் தள்ளிவிடமாட்டாவோ? அம்மானாழிப்பிரானவனெவ்விடத்தான் யானார்” என்று பின்வாங்கப் பண்ணுமே! என்று ஒரு சங்கையுண்டானக, அதற்குப் பரிஹார மருளுகிறார்போலும் இப்பாசுரத்தினால்: அப்பெருமானது ஐச்வர்யம் அளவற்ற தென்பது உண்மையே; அப்படிப்பட்ட ஐச்வரியமெல்லாம் நமது நாதனுடைய ஐச்வரியமன்றோ என்று அநுஸந்தித்து நாமும் அந்த ஐச்வரியத்தினுள் அந்தர்பவிக்கவும் பெற்றால் பின் வாங்க ப்ரஸகதி யிராதென்கிறார். எம்பெருமானுக்கும் நமக்குமுள்ள உறவை உணரவே கூச்சம் குலையும் என்பது இப்பாட்டுக்குத்  தேர்ந்த கருத்தாம். ஸம்பந்தவுணர்ச்சி உண்டாகுமத்தனையே போதுமென்கை.

நிருபாதிக பிதாவாகிய ஸ்ரீமந்நாராயணனுடைய “உன்றன்னோடுறவேல் நமக்கு இங்கொழிக்க வொழியாது” என்னும்படியாக உறவின் உறுதியை உற்று நோக்கி, ஈச்வரன் “த்வம் மே” (நீ எனக்கு உரியவன்) எனில், “அஹம் மே” (நான் எனக்கே உரியேன்) என்னும் விவாதத்தை விட்டொழித்தால் அப்பெருமானது செல்வ மிகுதியைக் கண்டு சிறிதும் கூசநேரிடாதென்க.

ராஜகுமாரன் ஒரு அழகிய தோட்டத்தைக்கண்டு உள்ளே புகநினைத்தும் கட்டுங்காவலுமா யிருந்தது கண்டு அஞ்சி நிற்கு மளவில் “இஃது உன் தகப்பனது தோட்டங்காண்” என்னவே நினத்தபடி புகுந்து திளைத்துப் பரிமாறலாமன்றோ; அதுபோலக் கொள்க. அடங்க எழில்; தொகுத்தல் விகாரம். சம்பத்து - ஸம்பத் என்ற வடசொல் விகாரம்.

ஈசனடங்கெழிலஃதென்று - ‘அஃதடங்க ஈசனெழிலென்று’ என அந்வயித்துக் கொள்ளவேணும். அஃதெல்லாம் நமது ஸ்வாமியானவனுடைய ஸம்பத்து என்று அனுஸந்தித்து என்றபடி.

உள்ளே அடங்குக=எம்பெருமானது விபூதியினுள்ளே தானு மொருவனாக அடங்கப் பார்க்கவேணும். அதற்கு வெளிப்பட்டால் விநாசமே பலிக்கும். அதனுட்பட்டு விட்டால் கூசவேண்டி அவசியமேயில்லை யென்க.

 

English Translation

Look at the Vast wealth of radiance all around. Know that all these are his, and merge into him.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain