(2915)

பற்றில னீசனும் முற்றவும் நின்றனன்

பற்றிலை யாய் அவன் முற்றி லடங்கே.

 

பதவுரை

ஈசனும்

-

எம்பெருமானும்

பற்றிலன்

-

ஆச்ரிதர்களோடு பொருந்தியிருப்பதையே இயல்வாக உடையனாய்

முற்றவும்

-

தாரகம் போஷகம் போக்யம் என்னும்படியான ஸகல ஸ்துவுமாகவும்

நின்றனன்

-

இரா நின்றான்: (ஒலோகமே!)

பற்றிலை ஆய்

-

எம்பெருமானோடு பொருந்தியிருப்பதையே இயல்வாகவுடைத்தாய்

அவன்

-

அப்பெருமானுடைய

முற்றில்

-

ஸகலகைங்கரியங்களிலும்

அடங்கு

-

அந்வயிப்பது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆழ்வீர்! புறம்புள்ளவற்றைவிட்டுப் பரமபுருஷனைப் பற்றும்படி உபதேசிக்கிறீர்; அவன்தான் ஸர்வேச்வரனன்றோ? நமக்கு அவன் முகந்தருவானோவென்று ஸம்ஸாரிகள் சங்கிப்பதாகக்கொண்டு, எம்பெருமானை அப்படி நினைக்கலாமோ? ஈச்வரத்வம் வந்தேறி யென்னும்படி ஸௌசீல்யமே வடிவாயிருப்பவனன்றோ அவன் என்று ஸமாதாநம் பண்ணுகிறாரிதில்.

ஈசனும் பற்றிலன் = ‘எம்பெருமான் பற்றில்லாதவன்’ என்றும் பொருள்கொள்ளலாம்படியிருக்கும்: ஆனால் பூருவாசாரியர்கள் அப்பொருளைக் கொண்டிலர்; “ஸர்வேச்வரனேயாகிலும் ஆச்ரிதரெல்லார் பக்கலரிலுமொக்க ஸ்நேஹ ஸ்வபாவனாயிருக்கும்.” என்று ஆறாயிரப்படியிலே திருக்குருகைப்பிரான் பிள்ளானருளிச் செய்தது நோக்கத்தக்கது. பற்றிலானென்பது பற்றிலனென்று குறுகிக்கிடக்கிறதென்பர். பற்றொடுகூடி யுள்ளவனென்றபடி ஆச்ரிதர்களுடன் புரையறக் கலந்து பழகுவதையே இயல்வாகவுடையவனென்கை.

ஈசனும் = ஈச்வரனாயிருக்குந் தன்மையாகிற மேன்மையுங்கூட இல்லாவிடில் அந்த சீலகுணம் நிறம் பெறமாட்டாதன்றோ. பரத்துவமுள்ள விடத்தே காணப்படும் ஸௌப்பியமேயன்றோ போற்றத்தக்கதாகும். காஷ்டலோஷ்டங்கள் மிகவும் எளியனவாயிருக்கின்றனவென்றால் யாது பயன்? ஒன்றுமில்லை. ஆகவே மேன்மை கிடைக்குமிடத்தேயுள்ள நீர்மையே பாராட்டுதற்குரியது. இதற்காகவே எம்பெருமானிடத்தில் மேன்மை குடிபுகுந்ததேயன்றி, அதுகண்டு நாம் அஞ்சுவதற்காகவன்று.

முற்றவும் நின்றனன் = ஸகலவித பந்துவுமாகவும், தாரக போஷக போக்ய வஸ்துக்களெல்லாமாகவும், அறிவு ஒழுக்கம் ஜாதி முதலியவற்றாற் ஏற்றத்தாழ்வு பெரிதுமுடைய எவ்வகுப்பினர்க்கும் ஒருங்கே ஆச்ரயணீயனாகவும் நின்றான்.

பற்றிலையாய் = ‘பற்றிலன்’ என்பதன் முன்னிலையிது. அச் சொல்லுக்குக் கொண்டபொருளை இச்சொல்லுக்குங் கொள்ளத்தக்கது. அவன் உன்னிடத்தில் பற்றுவைத்திருப்பது போலவே நீயும் அவனித்துப் பற்றுடையனாய் என்றபடி, அவன் முற்றில் அடங்கு = அவனுடையதான எல்லாவற்றிலும்- ஸகலவித கைங்கரியங்களிலும் ஊன்றியிருக்கக்கடவை என்றபடி.

இப்பாசுரத்திற்கு பட்டர் அருளிச் செய்யும்படி யொன்றுண்டு; அதாவது ஈசனம்- ஷாட்குண் பரிபூர்ணனான் ஸ்ரீவைகுண்ட நிலயனான எம்பெருமானும், பற்றிலன்- அங்குள்ள நித்யமுக்தர்களிடத்துப் பற்று இல்லாதவனாய், முற்றவும் நின்றனன்- இன்று ஆச்ரயிக்கிற ஸம்ஸாரிகளிடத்திலேயே பரிபூர்ணமான காதல் கொண்டிராநின்றான். பற்றிலையாய் - ஹேய விஷயங்களிலே நீ வைத்திருக்கிற பற்றை விட்டவனாகி, அவன் முற்றிலடங்கு- அவனையே எல்லாமாகப் பற்றுவாயாக என்று. உலகத்தை விளித்துச் சொல்லுகிறபடி.

 

English Translation

The Lord has no attachment. He exists everywhere. Become freed of attachments and merge with him fully.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain