(2914)

அற்றது பற்றெனில் உற்றது வீடுஉயிர்

செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே.

 

பதவுரை

பற்று அற்றது எனில்

-

விஷயாந்தரஸங்கம் அற்றொழிந்தது என்னுமளவிலேயே

உயிர்

-

ஆத்துமா

வீடு உற்றது

-

மோக்ஷத்தைப் பெற்றானாவன்; (கைவல்ய மோக்ஷமுண்டாகும்;)

அது

-

அந்தக் கைவல்ய மோக்ஷத்தை

சேற்று

-

வெறுத்து

மன்ன உறில்

-

நிலைநிற்கும்படி பகவத் விஷயத்தைக் கிட்டப் பார்க்கில்

அற்று

-

(ஆச்ரயிக்கும்போதே) எம்பெருமானுக்கென்றே அற்றுத் தீர்ந்து

இறை

-

அந்த எம்பெருமானை

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

பற்று பற்றுக.

***- எம்பெருமானை பற்றுதற்கு இடையூறாகக் கைவல்ய மோக்ஷத்தில் நகையுண்டாகக் கூடியதாதலால் அந்த இடையூதன்னை விலக்கிக் கொள்ளுமாறு உபதேசித்தருளுகிறாரிப்பாட்டில்.

உலகத்தில் அவரவர்களது ருசியின்படி விருப்பங்கள் பலவகைப்படும். இஹலோகத்திற்குப் பரிபூர்ண ஐச்வரியத்தையே சிலர் விரும்புவர்; தேவேந்திர பட்டத்தில் விருப்பமுள்ளவர்வகள் இவ்வுலகச் செல்வங்களிற் கண்வையார். நான்முகக் கடவுளது பதவியை விரும்புமவர் இந்திரபதவியிற் கண்வையார். ஆத்மாநுபவமாகிற கைவல்ய மோக்ஷத்தில் விருப்ப முடையார் கீழ்ச்சொன்னவற்றிற் கண்வையார் *உயர்வறவுயர்நலமுடையனாய் அயர்வறுமமரர்களதிபதியாய் *திவ்யமங்கள விக்ரஹ விசிஷ்டனாக எம்பெருமானிடத்திலே பற்றுடையார் இவை யித்தனையிலும் கண்வையார். ஆகவே கைவல்ய மோக்ஷத்தில் கண்வைக்க வேண்டாமென்று நியமிக்கிறது இதில்.

பற்று அற்றதெனில் = ப்ரக்ருதியிலும் ப்ராக்ருதங்களிலுமுண்டான பற்று ஒழிந்த மாத்திரத்திலே என்றபடி. உயிர்வீடு உற்றது = ஆத்மாநுபவமாகிற மோக்ஷம் வந்து புகுந்ததாயிடும். கைவல்ய மோக்ஷத்திலே இச்சைபிறக்கும் என்றவாறு. ‘மறுபடியும் பிறத்தல் இறத்தலாகிய துன்பங்கள் உண்டாகாதபடியிருந்தால் போதுமானது’ என்கிற இவ்வளவையே ஆசைப்பட்டு அதற்காகக் கைவல்யமோக்ஷத்தளவிலே த்ருப்திபெறதலாகிற ஒரு நிலைமை நேரும் என்றபடி, விலக்ஷணமான ஞானத்தையும் ஸ்வரூபத்தையும் உடைத்தான ஜீவாத்மாவாகிய வஸ்துவுக்கு அசித் ஸம்பந்தமேயன்றோ மறைவை உண்டுபண்ணிக்கொண்டிருந்தது; அப்படிப்படட் அசித் ஸம்ஸர்க்கம் கழிந்தவாறே ஆத்மஸ்வரூபம் பிரகாசிக்கும் அதுதான் நித்யமாயும் ஜ்ஞாநாநந்த ஸ்வரூபியாயுமிருக்கையாலே ‘இத்தகையத்தான ஆத்மவஸ்துவையே அனுபவித்துக்கொண்டிருக்கலாமே’ என்ற ஆசை பிறக்கும்படி நேர்ந்துவிடுமென்க. அது செற்று = அதில் விருப்பமற்று என்றபடி மண்ணுறில் = மன்ன- உறில், மன்னவுறில் என்று புணர வேண்டுமிடத்து மன்னுறில் என்றானது தொகுத்தல். ‘அதற்கு மேலும் ஒரு புருஷார்த்தமுண்டு’ என்று ஆசைப்பட்டு அப்பால் போகவேண்டிய தொன்றில்லாதபடி ஒப்புயர்வற்ற புருஷார்த்தமாகிய பகவத்ப்ராப்திலக்ஷணமோக்ஷணத்தைப் பெற வேண்டியிருக்கில் என்றபடி.

அற்று என்பதிலுள்ள வினையெச்ச விகுதியைப் பிரித்தெடுத்து பற்று என்பதனோடு கூட்டி, பற்று என்பதிலுள்ள ஏவல் விகுதியைப் பிரித்தெடுத்து அற்று என்பதில் கூடடி“, ‘பற்று அறு’ என்றாக்கி, இறையைப்பற்றிக் கைவல்ய மோக்ஷருசியை அறு என்பதாகவு முரைப்பர்.

 

English Translation

When all attachments cease, the soul becomes free, So seek the eternal Lord and cut all attachments.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain