(2913)

இல்லது முள்ளதும் அல்ல தவனுரு

எல்லையி லந்நலம் புல்குபற் றற்றே.

 

பதவுரை

அவன் உரு

-

அந்தப் பெருமானுடைய ஸ்வரூபமானது,

இல்லதும் அல்லது

-

விகாராஸ்பதமாகையாலே அஸத்து என்னப்படுமதான அசேதநத்தின்படியை யுடையதுமன்று

உள்ளதும் அல்லது

-

ஸத்து என்னப்படுபவனான ஜீவாத்மாவின் படியையுடையதுமன்று;

எல்லை இல்

-

எல்லையில்லாத

அ நலம்

-

அப்படிப்படட் ஆநந்த ஸ்வரூபியாயிருக்கும்; (ஆதலால்)

பற்று அற்று

-

ஹேய விஷய ஸங்கத்தை விட்டு

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- புல்கு- (அப்பெருமானை) ஆச்ரயிக்க

விடவேண்டிய விஷயத்தின் தோஷ மிகுதியை இரண்டாம் பாட்டிலருளிச் செய்தார்; பற்ற வேண்டிய பகவத் விஷயத்தின் நன்மை மிகுதியை இப்பாட்டிலருளிச் செய்கிறார். அவனுக்கு உள்ளதுமல்லது இல்லதுமல்லது =நம்முடைய ஸித்தாந்தத்தில் எல்லாம் உள்ள வஸ்துக்களேயன்றி இல்லாத வஸ்து ஒன்றுமேயில்லையே; அப்படியிருக்க இல்லது என்பதேன்? எனில்; கேண்மின்: இங்கே இல்லது என்பதற்கு: ‘அடியோடு இல்லாதது’ என்றாவது ‘பொய்யானது’ என்றாவது பொருளில்லை; ‘அழியுந்தன்மையுடையது’ என்று பொருள். உள்ளது என்றது அழியாத பொருள் என்றபடி அசித்தையும் சித்தையும் சொன்னவாறு. ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் இரண்டாவது அம்சத்தில் பன்னிரண்டாவது அத்யாயத்தில் *ஜ்யோதீம்ஷி விஷ்ணுர்புவநாதி விஷ்ணு வநாதி விஷ்ணு: கியோ திசச்ச, நத்யஸ் ஸமுத்ராச் ச ஸ ஏவ ஸர்வம் யதஸ்தி யந்நாஸ்தி ச விப்ரவர்ய* என்றுள்ள ச்லோகத்தில் அஸ்தி சப்தத்தாலே சித்தையும் நாஸ்தி சப்தத்தாலே அசித்தையும் சொல்லியிருக்கையாலும், தைத்திரீய உபநிஷத்தில் *ஸத்யஞ்சாந்ருதஞ்ச ஸத்யமபவத்* என்ற விடத்து ஸத்ய சப்தத்தாலே சித்தையும் அந்ருத சப்தத்தால் அசித்தையும் சொல்லி யிருக்கையாலும் அவற்றை அடியொற்றி ஆழ்வாரும் உள்ளது இல்லது என்ற சப்தங்களினால் சித்தையும்  அசித்தையும் குறித்தனர்.

இனி உள்ளது - உள்ளேயிருப்பது (சரீரத்தினுள்ளேயிருப்பது) என்று பொருளாய் ஆத்மாவைச் சொல்லிற்றாகி. இல்லது - (இல்- வீடு) வீடாகவுள்ளது. (அத்மாவுக்கு இருப்பிடமாகவுள்ளது) என்று பொருளாய் உடலைச் சொல்லிற்றாகி ஆக இவ்வழியாலே சித்தையும் அசித்தையும் சொல்லிற்றாகவுங் கொள்ளலாமென்பர். பரமாத்மாவினுடைய ஸ்வரூபம் நேதந அசேதந விலக்ஷணம் என்கை.

ஆனால் பரமாத்ப ஸ்வரூபம் எங்ஙனே யிருக்குமென்ன, எல்லையிலந்தலம் என்கிறது. எல்லையில்லாத ஆந்தமயமாயிருக்குமென்றவாறு. அப்படிப்பட்ட பரம பொருளை, பற்றற்றே புல்கு = *புறம்புண்டான பற்றுக்களையடைய வாஸநையோடே விட்டே பற்றவேணும். புல்கு என்னும் ஏவலொருமைவினை முற்றுக்குச் சேர விளி வருவித்துக் கொள்க. நாட்டை நோக்கிச் சொல்வதாகக் கூறுப.

 

English Translation

The Lord is beyond being and non-being, Cutting all attachments, attain that infinite good.

 

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain