(2912)

நீர்நும தென்றிவை, வேர்முதல் மாய்த்து இறை

சேர்மின் உயிர்க்கு அதனேர்நிறை யில்லே.

 

பதவுரை

நீர் நுமது என்ற இவை

-

அஹங்கார மமகாரங்களாகிற இவற்றை

வேர் முதல் மாய்த்து

-

(ருசி வாஸநைகளாகிற) பக்க வேரோடே முதலறுத்து

இறை

-

ஸ்வாமியை

சேர்மின்

-

அடையுங்கள்;

உயிர்க்கும்

-

ஆத்மாவுக்கு

அதன் நேர்

-

அதனோடு ஒத்து

நிறை இல்

-

பூர்த்தி இல்லை.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- விட வேண்டிய வஸ்துக்கள் பலபல கிடப்பதால் அவற்றையெல்லாம் தனித்தனியே எடுத்துரைத்தல் பெரும்பாடாகுமாதலால் விட வேண்டியவற்றைச் சுரங்க அருளிச்செய்கிறாரிதில். (*அநாத்மந்யாத்ம புத்திர் அஸ்வே ஸ்வமிதி யாமதி: அவித்யாதருஸம்பூதிபீஜமேதத் த்விதா ஸ்திதம்*) என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திற் சொல்லப்பட்டது. இதைத் திருவுள்ளம் பற்றியே ஆழ்வார் ‘நீர்நுமதென்றிவை வேர்முதல்” என்றார். இங்கு ‘நான் எனதென்றிவை’ என்றோ ‘நாம் நமதென்றிவை’ என்றோ இருக்க வேண்டும்; அப்படி யிருந்தால்தான் அஹங்கார மமகாரங்களுக்குப் பர்யாயமாகும்: ஆழ்வார் அப்படி யருளிச்செய்யாது நீர் நுமது என்றது:- அநுவாதரீதியாலுங்கூட அஹங்கார மமகார ஸ்பர்சம் தமக்குக்கூடாதென்ற கருத்தினாலென்க. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்- “நான் எனது தம்வாக்காலே சொல்ல மாட்டாரே,  நாக்கு வேம் என்று.”

 

English Translation

Uproot all thoughts of you and yours. Merge with the Lord, there is no greater fulfillment.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain